The Chosen - தமிழில் (பாகம் 2)Sample
நீ எண்ணுவதற்கு ஒரு புதிய வழியைக் காட்டுவேன்...
நான் பல ஆண்டுகளாக திராட்சை ரச வணிகத்தில் இருந்து வந்தேன், குறிப்பாக திருமணம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதில் சிறந்து விளங்கினேன்… என்னுடைய சிறப்பே நிகழ்ச்சிக்கு வேண்டியவைகள் சரியாய் இருக்கின்றதா என எண்ணுவதும், அளப்பதும் மற்றும் சரிபார்ப்பதும் ஆகும்.
யூத கலாச்சாரத்தில், குறிப்பாக திருமணங்களில், திராட்சை ரசம் இன்றியமையாத ஒன்றாக இருப்பதால், இங்கே பிழைகளுக்கு இடமில்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்… விருந்தினர்களின் எண்ணிக்கை, ஒவ்வொருவரும் குடிக்கும் அளவு, திராட்சை ரசத்தின் பலதரப்பட்ட ரகங்கள் என்னும் இவைகளை மனதில் வைத்து நான் பணி செய்ய வேண்டும். எந்நேரமும் கவனமாய் இருக்க வேண்டிய தொழில் என்னுடையது. இந்த வர்த்தகத்தில் சிறந்தவர்களில் நான் ஒருவர் என்று என்னால் கூறமுடியும்!
இருப்பினும், கலிலேயாவில் உள்ள கானாவூரில் நடந்த கல்யாணம் வித்தியாசமானது. மணமகனின் பெற்றோரிடம் அதிக பணம் இல்லை ஆகையால் என்னுடைய முதல் மதிப்பீடுகளை அதற்க்கேற்றவாறு அளவாகவே வைத்திருந்தேன். நாங்கள் எதிர்பார்க்காதது என்னவென்றால், திருமணத்தில் எதிர்பார்த்ததை விட கிட்டத்தட்ட 25% அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என்று! இது என் கணக்கை முற்றிலும் மீறியது.
கொண்டாட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது. என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை! எங்கள் விரக்தியைப் பார்த்து, மணமகனின் தாயாரின் தோழி ஒருவர் எங்களை இயேசுவிடம் அறிமுகப்படுத்தி, அவர் எதைச் செய்யச் சொன்னாலும் அதைச் செய்யும்படி கூறினார் (யோவான் 2: 5-11).
சுத்திகரிப்பு செய்யும் ஜாடிகளில் தண்ணீரை நிரப்பும்படி இயேசு எங்களிடம் சொன்னார். அதில் அறிவுப்பூர்வமாய் எந்த அர்த்தமும் இல்லை; உண்மையில், இது நேரத்தை இன்னும் வீணடிக்கும் ஒரு முட்டாள்தனமான யோசனையாகத் தான் தோன்றியது. ஆனால் வேறு வழியில்லாததால் அவர் சொன்னபடியே செய்தோம்.
அவர் பேசிய விதத்தில் ஏதோ ஒரு சிறப்பு இருந்தது... உண்மையான ஆறுதலோடு கூடிய உறுதியளிப்பதுபோல.
உரையாடலின் ஒரு கட்டத்தில், அவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்து, “தோமா, என்னுடன் சேர்ந்துகொள், நீ எண்ணுவதற்கும் அளவிடுவதற்கும் ஒரு புதிய வழியைக் காட்டுகிறேன். நேரத்தை ஒரு புதிய கோணத்தில் பார்க்கவும் கற்றுக்கொடுக்கிறேன்" என்றார்.
எதுவுமே எனக்கு புரியவில்லை, ஆனால் அதன் பின் நடந்தது என்னை இன்னும் குழப்பமாக்கியது: இயேசு ஜாடிகளில் இருந்த தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். நான் அங்கு இல்லாதிருந்தால், என் கண்களால் பார்க்காமல் இருந்திருந்தால், நான் அதை நம்பியிருக்கவே மாட்டேன். அது வெறும் திராட்சை ரசம் அல்ல: நான் இதுவரை ருசித்ததில் இது போன்ற ருசியுள்ள திராட்சை ரசத்தை பருகியதே இல்லை...
இயேசு ஒரு அற்புதம் செய்தார், அது அந்த கல்யாண வீட்டை அவமானத்திலிருந்து காப்பாற்றியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, அவரைப் பின்தொடர அவர் என்னை அழைத்த தருணம் விசேஷமான ஒன்று… ஒரு அற்புதமின்றி நான் அவரை பின்தொடர்ந்து செல்லும் முடிவை எடுக்க மாட்டேன் என்று அவர் அறிந்திருந்தார்! அது நிச்சயமாக பலனளித்தது.
நான் அவரைப் பின்தொடரத் தொடங்கியதிலிருந்து என் வாழ்க்கை ஒரே போன்று இல்லை. இப்போது, நான் என் அன்றாட வாழ்வில் தேவனைச் சார்ந்தும் அற்புதங்களை எதிர் நோக்கியும் இருந்து வருகிறேன்..
என் பெயர் தோமா, நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.
குறிப்பு: அன்பான நண்பரே, ஒருவேளை தோமாவைப் போலவே நீயும், ஒரு பாறைக்கும் கடினமான இடத்திற்கும் இடையில், புலப்படும் தீர்வு இல்லாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் உன் மனித வரம்புகளுக்கு அப்பால், தீர்வுகளை விசுவாசக் கண்களால் பார்க்க உன்னை அழைக்க விரும்புகிறேன். ஆண்டவரின் கணக்கு நம்முடையதை விட மிகவும் சிறந்தது! உன் பிரச்சினைகளை அவரிடம் கொடுத்து, அவருடைய சமாதானத்தினாலும் ஆசீர்வாதத்தினாலும் உன்னை நிரப்ப விடு!
நீ ஒரு அதிசயமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்!
Scripture
About this Plan
“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch
More