YouVersion Logo
Search Icon

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்Sample

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

DAY 18 OF 40

ரோம ஆளுநரான பொந்து பிலாத்துவின் அனுமதியின்றி ஆலய தலைவர்களால் இயேசுவைக் கொலை செய்ய முடியாது. ஆகவே, ரோமப் பேரரசருக்கு எதிராக கலகத்தைத் தூண்டிவிடும் இயேசு ஒரு கலகக்கார ராஜா என்று அவர்கள் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். பிலாத்து இயேசுவிடம், “நீ யூதர்களின் ராஜாவா?” என்று கேட்கிறான். அதற்கு இயேசு, “நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள்” என்று பதிலளித்தார். இயேசு ஒரு அப்பாவி மனிதர், மரணத்திற்கு தகுதியற்றவர் என்பதை பிலாத்து காண்கிறார், ஆனால் மதத் தலைவர்கள் அவர் ஆபத்தானவர் என்று வற்புறுத்துகிறார்கள். ஆகவே, இயேசுவை ஏரோதுவுக்கு அனுப்பி, பின்னர் காயமடைந்து இரத்தம் வழிந்தபடி பிலாத்துவிடம் திரும்பிய பிறகு, அவர்கள் ஒரு அதிர்ச்சியூட்டும் திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இயேசுவுக்குப் பதிலாக பரபாஸ் என்ற ரோமுக்கு எதிராக ஒரு உண்மையான கலகக்காரனைப் பிலாத்து விடுவிப்பார். குற்றவாளிக்குப் பதிலாக அந்த இடத்தில் அப்பாவி ஒப்படைக்கப்படுகிறார்.

குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இரண்டு குற்றவாளிகளுடன் இயேசு அழைத்துச் செல்லப்பட்டு, ரோம சிலுவை மரத்தில் அறைந்தனர். அவர் ஒரு அதிசயமான காட்சியாக மாற்றப்பட்டார். மக்கள் அவருடைய ஆடைகளை ஏலம் எடுத்து, "நீர் மேசியாவாகிய ராஜாவாக இருந்தால், உம்மை இரட்சித்துக்கொள்ளும்" என்று கேலி செய்கிறார்கள். ஆனால் இயேசு தனது எதிரிகளை கடைசிவரை நேசிக்கிறார். அவர் தன்னைக் கொலை செய்பவர்களுக்கு மன்னிப்பு கோருகிறார், மேலும் "இன்று நீ என்னுடன் பரதீசில் இருப்பாய்" என்று கூறி அவருக்கு அருகில் இறக்கும் குற்றவாளிகளில் ஒருவனுக்கு நம்பிக்கை அளிக்கிறார்.

வானம் திடீரென்று இருட்டாகிறது, ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிகிறது, இயேசு தனது கடைசி மூச்சுடன் தேவனிடம் மன்றாடுகிறார், "உம் கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்." ஒரு ரோம நூற்றுக்கு அதிபதி முழு விஷயத்திற்கும் சாட்சி கொடுத்து, “நிச்சயமாக இந்த மனிதன் நீதிபரனாயிருந்தான்” என்று கூறுகிறான்.

Scripture

Day 17Day 19

About this Plan

BibleProject | லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம்

லூக்கா & அப்போஸ்தலர் ஊடான ஒரு பயணம் என்பது, லூக்கா மற்றும் அப்போஸ்தலரின் புத்தகங்களை 40 நாட்களில் படிப்பதற்கான ஊக்கத்தை தனிநபர்கள், சிறு குழுக்கள் மற்றும் குடும்பங்களுக்கு அளிக்கிறது. லூக்காவின் அற்புதமான இலக்கிய வடிவமைப்பு மற்றும் சிந்தனை ஓட்டத்துடன் பங்கேற்பாளர்கள் இயேசுவை எதிர்கொள்ள உதவுவதற்கு, இந்தத் திட்டம், அனிமேஷன் வீடியோக்கள் மற்றும் உள்ளார்ந்த சுருக்கத்திரட்டுகளை உள்ளடக்கிஉள்ளது.

More