YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 99 OF 100

மிகவும் கடினமா?

“தயவு செய்து எல்லாவற்றையும் எனக்கு எளிதாக, சுலபமாக்கித் தாரும் ஆண்டவரே, எனக்குப் போராட பிடிக்காது. எனக்கு தொடர்ந்து வெற்றி வேண்டும். எந்தவித கஷ்டமோ, முயற்சியோ, இல்லாமல் நான் என் வழியே போகிறேன். நீர் மட்டும் எல்லாவற்றையும் செய்து, என்னை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்.”

ஒருவரும் இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகித்து ஜெபித்ததை நான் கேட்டதில்லை. ஆனால், தங்கள் வாழ்க்கையில் சுலபமான நேரங்களை, காலங்களை கேட்டு ஜெபிக்கும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். போராட்டமில்லாமல், வெற்றியை மட்டும் விரும்புவோர் அநேகர், செயல்படாமல் ஜெயம் வேண்டும், கடின உழைப்பில்லாமல் செய்யும் திறமை, கடின உழைப்பிற்கு பதிலாக...

“இது மிகவும் கடினம்,” எத்தனை முறை மக்கள் இப்படிப் பேசுவதைக் கேட்டு வியந்திருக்கிறேன். ஜாய்ஸ் மேயர் எத்தனை முறை இப்படி சொல்லியிருக்கிறாய் என்று வியக்கிறேன். ஆம், நான் சொல்லி யிருக்கிறேன். நான் கர்த்தரைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்க தீர்மானித்த நாட்களுண்டு. ஆனால், என் இருதயத்தில் (அடிக்கடி என் வாயினால்) “இது மிகவும் கடினம்,” என்ற வார்த்தை வரும்.

தேவன் என் பிற்போக்கான சிந்தையைக் குறித்து உணர்த்தினதினால், நான் கடினமான சூழ்நிலைகளை பார்ப்பதை தவிர்த்துவிட்டு, கர்த்தருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். அவர் எனக்கு வழியை உண்டு பண்ணுவார். உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும் உனக்கு பரிபூரணமுண்டாகச் செய்வார்; ஆனால், அவர் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். “ஆம், வசனத்திலே நாம் அதை செய்யமுடியும் என்றும் நமக்கு உறுதியளிக்கிறார். “நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்கு தூரமானதும் அல்ல.”

நாம் பிற்போக்கான காரியங்களையே கேட்டு, எல்லாம் தவறாக நடக்குமோ என்று கணக்கு போடுவதால், அவருடைய சித்தம் நமக்கு கஷ்டமானதல்ல என்ற அவருடைய வாக்கை மறந்துவிடுகிறோம். அதற்கு பதிலாக, வெளிப்படையாக நம்முடைய சவால்களை தேவனிடத்திலிருந்து வரும் ஆசீர்வாதங்களாக நாம் நினைக்கவேண்டும்.

உதாரணமாக, யோசேப்பிடமிருந்து நாம் உற்சாகம் பெற வேண்டும். அவன் எகிப்திலே அநேக ஆண்டுகள் கழித்து, கானானிலுள்ள தம் குடும்பத்தை பராமரித்த பிறகும்; அவனுடைய சகோதரர் அவனுக்கு மிகவும் பயந்தார்கள். அவர்கள் அவனை வெறுத்து, கொல்ல திட்டம் தீட்டி, அடிமையாக விற்றனர். அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு மரித்த பிறகு யோசேப்பு அவர்களை தண்டிப்பான் என்று எதிர்பார்த்தார்கள். அவன் அப்படி செய்திருக்கக்கூடும். தான் பட்ட எல்லாக் கஷ்டங்களைக் குறித்தும் புலம்பியிருக்கலாம். அவன் வாழ்க்கை எளிதானதல்ல. அவன் அடிமையாக சகோதரரால் விற்கப்பட்டது மட்டுமல்ல, அவன் அநியாயமாய் குற்றம் சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு மரித்திருப்பான். கர்த்தர் மட்டும் அவனோடிராவிட்டால் அவனை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்திருப்பார்கள். 

“வாழ்க்கை மிகவும் கடினமானது,” என்று சொல்வதற்கு பதிலாக, யோசேப்பு, “நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்து வருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு. அதை நன்மையாக முடியப்பண்ணினார்” (ஆதி 50:20) என்றான். மனிதர்களின் வாழ்க்கையில் தேவன் எப்படி கிரியை செய்கிறார் என்பதை அவன் நன்கு புரிந்துகொண்டான்.

யோசேப்பு கஷ்டங்களைப் பார்க்கவில்லை, “வாய்ப்புகளை” பார்த்தான். பிசாசின் முணுமுணுக்கும் போர் காரியங்களை அவன் கேட்கவில்லை. தேவனுடைய உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு தன் செவியை சாய்த்தான். ஒரு இடத்தில் கூட, அவன் குறை கூறியதாக நாம் வாசிக்கவில்லை. அவன் வாழ்வில் நடந்த எல்லா காரியங்களிலும், கர்த்தருடைய கனிவான கரம் அவன் மேல் இருப்பதைக் கண்டான்.

“எல்லா வேளைகளிலும் கர்த்தரின் கரம் கனிவானதாக நம் மேல் இருக்காது. கர்த்தர் உன்னில் இவ்வளவு அன்புகூருகிறார் என்றால், நீ ஏன் இந்த குழப்பத்தில் இருக்கிறாய்?” என்று, சில வேளைகளில் பிசாசு இப்படி சொல்லுவான்.

இதற்கு நான் கொடுக்கும் சிறந்த பதில்: அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை திரும்பவும் சொல்லுவேன்: “அது மாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவத்திலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோமர் 5:3-5).

தேவன் நமக்கு சுலபமான வாழ்வை வாக்களிக்கவில்லை. ஆனால், ஆசீர்வாதமான வாழ்க்கையை வாக்களித்திருக்கிறார்.


அன்பும், மனதுருக்கமும் உள்ள பிதாவே, வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று குறை கூறியதற்காக என்னை மன்னியும்! காரியங்கள் எளிதில் நடைபெறவேண்டும் என்று விரும்பியதற்காக என்னை மன்னியும். பிரச்சனைகள் மத்தியிலும், நான் எங்கு செல்ல வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அங்கெல்லாம் என்னை வழி நடத்தும். ஏனென்றால் என்னுடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவே நீர் அங்கே இருப்பீர். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

Day 98Day 100

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More