YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 97 OF 100

எல்லாம் நேரம் தான்

மெய்யாகவே நேரப்படி செயல்படுவதுதான் எல்லாம். 1984ல் நான் ஜாய்ஸ் மேயர் ஊழியங்களை ஆரம்பித்தேன். கர்த்தர் என்னை செய்யச் சொன்ன காரியங்களை விசுவாசித்து உண்மையோடு பிரயாசப்பட்டுக் கொண்டிருந்தேன். கர்த்தர் எனக்கு இன்னும் பெரிய காரியங்களை வைத்திருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். ஆனாலும், ஒன்பது வருடங்களாக என்னை அந்த “பெரிய காரியங்களுக்குள்ளாக” தள்ளுவது போல எந்த ஒரு அசைவும் இல்லை.

1993ல் என் கணவர் டேவ்வுக்கும் எனக்கும், தொலைக்காட்சியில் எங்கள் ஊழியத்தை ஒளிபரப்புவதற்கு சந்தர்ப்பம் வந்தது. அது எனக்கு பரவசமாக இருந்தாலும், பயமளிக்கக் கூடியதாகவும் இருந்தது. நான் என் பழைய பாணியில் நினைக்க ஆரம்பித்திருந்தால் - (அந்த பிற்போக்கான குரல்கள் ஒருகாலத்தில் என் மனதை நிறைத்தவைகளுக்கு) - நான் முன்னேறியே இருந்திருக்க முடியாது. கர்த்தருக்கு, இப்போது இந்த நேரத்தைக் கொடாவிட்டால் பிறகு எப்போதுமே இந்த நேரத்தை அவருக்கு கொடுக்கவே முடியாது என்பதை உணர்ந்தேன்.

நானும் டேவும் ஜெபித்தபோது, கர்த்தர் என்னோடு பேசினார். அவர்தான் இந்த வாசலை திறக்கிறார், என்பதை உறுதிப்படுத்தினார். நீ இந்த சந்தர்ப்பத்தை எடுக்காவிட்டால், அது உனக்கு திரும்ப கிடைக்காது என்றார்...அதே நாளில், நானும் டேவும், “சரி” என்று சொன்னோம்.

தடைகள் மறைந்து விட்டதா? இல்லை. சொல்லப்போனால், நாங்கள் இதற்கு சரியென்று ஒத்துக்கொண்டபிறகுதான், எவ்வளவு பெரிய பொறுப்பை எடுத்திருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். அதன் பிறகு அநேக நாட்கள், எல்லா பிரச்சனைகளும் என் மனதை தாக்கி, என்னை நிந்தித்து, நீ முகங்குப்புற விழப்போகிறாய் என்று சொல்வது போல் இருந்தது.

எவ்வளவு பலமாக ஒலித்தாலும் - அந்த சத்தங்களுக்கு நான் செவி கொடுக்கவில்லை. எனக்கு எது தேவனுடைய சித்தம் என்பது தெரியும். என்ன வந்தாலும் சரி - கர்த்தர் எனக்கு சொல்லியிருக்கிறதைத்தான் நான் செய்வேன், என்றேன்.

நான் இரண்டு காரணங்களுக்காக, இந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன். முதலாவதாக, பிரசங்கி இதை வேறு விதமாக எழுதுகிறார். நமக்கு சூழ்நிலை மிகவும் சாதகமாக இருக்கவேண்டும் என்று காத்திருந்தால, நாம் ஒன்றும் செய்ய முடியாது. கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் இருக்க, நமக்கு காரணங்கள் கண்டு பிடிக்கத் தெரியும்.

சில நேரங்களில், நாம் கர்த்தர் சொல்லும் காரியங்களுக்கு சரி என்று சொல்லும்போது, நாம் நம்முடைய மனதை மாற்றிக்கொள்ள பிசாசு பலமாகத் தாக்குவான். சந்தேகத்தையும், குழப்பத்தையும் கொண்டுவந்து கர்த்தர் உண்மையாகவே என்னை அழைத்தாரா? என்று வியக்க வைப்பான்.

அடுத்த காரணம், நேரத்தை குறித்ததாகும். கர்த்தர் “இப்பொழுது” என்று சொன்னால், அது “இப்பொழுதே” தான். பழைய ஏற்பாட்டிலே இதை சித்தரிக்கும் ஒரு வல்லமையான சம்பவம் உண்டு. மோசே பன்னிரெண்டு வேவுகாரரை கானானுக்குள் அனுப்பினான். பத்து பேர் அங்குள்ள தடைகளைத்தான் பார்த்தார்கள். அதனால், ஜனங்கள் கானானுக்கு செல்ல விரும்பவில்லை. கர்த்தர் அவர்கள் மேல் கோபம் மூண்டார்; மோசே கர்த்தரிடம் கெஞ்சி ஜெபித்து, ஜனங்களை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான். அவர் மன்னித்தார். ஆனால், ஒருவரும் கானானுக்குள் பிரவேசிப்பதில்லை. அதற்கு பதில், வனாந்திரத்திலே மரிப்பார்கள் என்றார். மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேலர்களிடம் சொன்னபோது, அவர்கள் மிகவும் துக்கித்தார்கள் (எண்ணாகமம் 14:39).

இதோடு இந்த சம்பவம் முடிந்துவிடவில்லை. அடுத்த நாள், அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து நாங்கள் பாவம் செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள் (வ.40).

காலம் கடந்து போய் விட்டது. கர்த்தர் அவர்களுக்கு ஒரு தருணத்தைக் கொடுத்தார், அதை அவர்கள் புறக்கணித்து விட்டனர். அது இனியும் எற்ற நேரமல்ல.

மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறியடிக்கப்படாதபடிக்கு ஏறிபோகாதிருங்கள். கர்த்தர் உங்கள் நடுவில் இரார். அமலேக்கியரும் கானானியரும் உங்களுக்கு முன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டு பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான் (வ.41-43).

இதையெல்லாம் கேட்டாலும், அவர்கள் பயப்படவில்லை. ஆனாலும், அவர்கள் மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள். கர்த்தர் அவர்களை அவருடைய நேரத்தில் வலியுறுத்தின தேசத்திற்கு அவருடைய நேரத்தில் அல்ல, அவர்களுடைய நேரத்தில் போகிறார்கள். அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கி வந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர் மட்டும் துரத்தினார்கள் (வ.45). சம்பவம் இப்படியாக முடிவு பெறுகிறது.

தேவனுடைய நேரத்தில் தான் நாம் அனைத்தையும் செய்யவேண்டும். கர்த்தர் ஒரு போதும் நம்மைப் பார்த்து: “இதோ நான் விரும்புவது, இதை நீ ஆயத்தமாக இருக்கும்போது செய்,” என்று சொல்லமாட்டார். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு செவி கொடுப்பதின் ஒரு பகுதி, அவர் சொல்வதைக் கேட்கும் போதே, கர்த்தருடைய நேரத்தில் அதை செயல்படுத்தும் ஆயத்தமும் வந்து விட வேண்டும். ஆகையால், நேரம் தான் எல்லாம், ஏனென்றால் நம்முடைய நேரமல்ல கர்த்தருடைய நேரமே தகுதியானதாகும்.


பிதாவே, நான் சரியான நேரத்தில் உம்முடைய அழைப்புக்கு இணங்காவிட்டால், எவ்வளவு சுலபமாக உம்முடைய சித்தத்தை தவற வாய்ப்பிருக்கிறது. நான் எவ்வளவு வேகமாக உம்முடைய குரலைக் கேட்கிறேனோ, அவ்வளவு விரைவாக உமக்கு கீழ்ப்படிய எனக்கு உதவி செய்யும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.

Day 96Day 98

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More