YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 96 OF 100

பொறுப்பு?

இந்தக் கதை மிகவும் எளிமையானது. ஒரு தகப்பன் தன்னுடைய இரண்டு மகன்களையும் தன்னுடைய திராட்சத் தோட்டத்திலே வேலை செய்யும்படி கேட்கிறான். மூத்தவன் முடியாது என்று சொல்லிவிட்டு, பிறகு தன் மனதை மாற்றிக்கொண்டு போனான். இளைவன் போகிறேன் என்று சொல்லியும் போகவில்லை. இயேசு தன்னைக் கேட்டுக்கொண்டிருந்த வர்களிடம், யார் தகப்பனுடைய சித்தத்தை செய்தார்கள் என்று கேட்டார். பதில் தெரிந்தது தானே.

இந்த சம்பவத்தில், நிறைய பாடங்கள் உள்ளன. அதில் ஒன்று, “பொறுப்பை” பற்றியதாகும். தகப்பன், இரண்டு பிள்ளைகளிடமும் ஒரே வேலையைத்தான் செய்ய சொன்னார். ஒருவன் சரியென்று சொல்லியும், தன் வார்த்தையை காப்பாற்றாமல், போகாமல் இருந்து விடுகிறான். இப்படிப்பட்ட நடத்தையை இந்நாட்களில் அதிகமாக காணலாம். அந்த இரண்டாவது மகனைப் போல, கர்த்தருடைய அழைப்பை பெற்றதும் உணர்ச்சி வசப்பட்டு எல்லோரிடமும் சொல்லிவிட்டு, உபத்திரவம் வந்ததும், பணப்பற்றாக்குறை, உடல் நலம் பாதிப்பு என்று வந்ததும் சுருக்கமாக சொல்லவேண்டுமானால் கர்த்தர் கொடுக்க விரும்பும் பொறுப்பை, அவருடைய கனமான அழைப்பை உதறித்தள்ள பல வழிகளைக் கண்டு பிடிப்பார்கள். 

நம்மில் சிலர், ஆரம்பத்தில் மறுத்த மகனைப் போல இருக்கிறோம். முதலில் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், நமக்கு தகுதியில்லை, படிப்பில்லை, அந்த வேலைககு நிகரானவரில்லை என்பதை போன்று உணருகிறோம். ஆனால், கடைசியில் நாம் நம்மை விட்டுக்கொடுத்து, கர்த்தர் விரும்பும் காரியத்தை அப்படியே செய்கிறாம்.

இவ்விருவரில் எவன் தகப்பன் சித்தத்தின்படி செய்தவன் என்று இயேசு கேட்டார். நாமனைவரும் அறிந்தபடி மறுத்தவன், பிறகு போனவன்தான். அவன் செலவை கணக்கு போட்டானா, அல்லது தான் உண்மையாயிருக்க வேண்டும் என்று எண்ணினானோ தெரியவில்லை. முதலில் அவன் மறுத்ததற்கு காரணம் என்னவாக இருப்பினும், முடிவிலே சரியென்று போனான். அவன் பொறுப்புள்ளவனாக இருந்தான்.

போகிறேன் என்று உடனே சொல்லிவிட்டு, போகாமல் இருந்த இளைய குமாரனை குறித்துப் பார்ப்போம். இப்படிப்பட்ட நிறைய பேரை நான் சந்தித்திருக்கிறேன். கர்த்தருடைய அழைப்பை ஏற்றதும், மிகவும் உற்சாகமாக காணப்படுவார்கள். அவர்கள் முற்போக்காக இருப்பார்கள், இது தேவனுடைய உந்துதல் (இதை தீர்ப்பு சொல்வது எனக்கடுத்ததல்ல). ஆனால், கர்த்தர் அவர்களை உடனே அனுப்பாவிட்டால், அல்லது அவர்கள் எதிர்பார்த்தது போல் காரியங்கள் நடக்காவிட்டால், தாமதங்களை சந்தித்தால், காத்திருந்து விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு, பொறுமையை இழந்துவிடுவார்கள்.

இதுதான் பொறுப்போடு செயல்படுவதற்கு, முக்கியமான நேரமாகும். ஒன்றுமே நடப்பது போல தென்படாவிட்டாலும், கர்த்தருடைய சித்தத்திற்காக உண்மையுடன் இருப்பது. உங்கள் மனதின் போராட்டத்தில் நீங்கள் இப்படித்தான் இருப்பதை உணருவீர்கள். கர்த்தருடைய உன்னதமான அழைப்பை நாம் பெற்று பரவசப்படும் நேரத்தில், பிசாசு சற்று தள்ளியே நிற்பான். “கர்த்தர் என்னை அழைத்ததை நான் சரியாகத் தான் கேட்டேனா? கர்த்தர் நான் அதைத்தான் செய்ய வேண்டுமென்று உண்மையாகவே விரும்புகிறாரா?” என்று நீங்கள் கேள்வி கேட்க துவங்கும் வரையில், பிசாசு காத்திருப்பான்.

போகமாட்டேன் என்று மறுத்து, பின்பு மனம் மாறி போன குமாரனைப் போல அல்லாமல்; நீங்கள், “ஆம், போகிறேன்,” என்று சொல்லிவிட்டு, வாக்கு கொடுத்துவிட்டோமே என்று, அதை நிறைவேற்ற போராடுகிறீர்கள்.

“பொறுப்பு” என்பது, தேவனுடைய ஆற்றலுக்கு நாம் பிரதிபலிப்பதாகும். கர்த்தர் உங்களுக்கு முன்பாக வைக்கும் சந்தர்ப்பங்களை, நீங்கள் பயன்படுத்திகொள்வதே, நீங்கள் பொறுப்பாக செயல்படுவதாகும். பொறுப்பாக செயல்படுவது என்றால், அதிலே நிலைத்திருப்பதாகும். பொறுமையோடு காத்திருப்பதுதான் அதன் பொருள். ஆபிரகாமைப் போல நாம் இருக்கவேண்டும். வாக்குத்தம் நிறைவேற அவன் இருபத்தைந்து ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தாலும், கர்த்தர் தாம் வாக்குப்பண்ணினதை அப்படியே நிறைவேற்றினார்.

வேதத்திலே, யோசேப்பு சிறிய பையனாக; தன் தகப்பனும், சகோதரர் களும் குனிந்து தலைவணங்குவது போல் சொப்பனம் கண்டான். அவர்கள் குனிந்து பணிவதற்கு பதிலாக, பள்ளத்தில் தூக்கிப் போட்டார்கள். பின், அடிமையாக விற்றார்கள். அவனோ, உண்மையாக இருந்தான். அவர்கள் அவனை விற்கும் போது அவனுக்கு வயது பதினேழு; அவர்களுக்கு தானியம் விற்கும் போது அவன் வயது முப்பது. யோசேப்பு பொறுப்பானவனாக இருக்க தீர்மானித்தான் - பிற்போக்கான சூழ்நிலைகளை அவன் பொருட்படுத்தவில்லை, பிசாசின் பொய்களுக்கும் செவிகொடுக்க மறுத்தான். தேவனோடு உள்ள தன் அர்ப்பணிப்பைக் காத்துக்கொண்டான்.

13 ஆண்டுகள் ஒருவேளை நீண்ட காலமாக தோன்றலாம்... அல்லது 13 நாட்கள்! தேவன் கணக்கு போடுவது காலத்தின் நீளத்தையல்ல. கர்த்தர் உங்களிடம் பேசுவாரானால், அவருடைய வழிநடத்துதலுக்கு விட்டுக்கொடுக்கும்படி, நீங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் உங்கள் காதை அடைத்துவிட்டு, கர்த்தருக்கு மாத்திரம் உங்கள் செவியை திறக்கவேண்டும்.


பரலோக பிதாவே, உமக்கும், உம்முடைய திறனுக்கும் நான் எப்பொழுதும் பிரதிபலிக்காமல் இருந்ததற்காக என்னை மன்னியும். உம்முடைய அன்பு மற்றும் அளவற்ற ஆசீர்வாதங்களில் நான் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, சூழ்நிலைகளையும், தடைகளையுமே கவனித்துக் கொண்டிருந்ததற்காக, என்னை மன்னியும். எல்லாவற்றிலும், முற்றிலும் உமக்கு கீழ்ப்படிந்த உம்முடைய குமாரனுடைய நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.

Day 95Day 97

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More