YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 84 OF 100

சரியாய் சிந்திப்பது, சரியாக செய்லபட வைக்கும்

ஒரு நண்பர் ஒரு முறை, அவருடைய சபை மக்கள் வாங்கியிருக்கும் சபை கட்டிடத்தைக் குறித்து என்னிடம் இப்படி சொன்னர். “செயல்பாடு அமைப்பை, பின்தொடரும்,” என்றார். அவர் மேலும் விவரமாக சொல்லும் போது, கட்டிடத்தின் அமைப்பும், அறைகளின் அளவும் ஏற்கனவே தீர்மானித்துவிட்டோம். எந்த அளவு சிறந்த முறையில் அதை பயன்படுத்த முடியுமோ அந்த அளவு பயன்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

நான் அதைக் குறித்து சிந்திக்கும் போது, நம்முடைய வாழ்க்கையையும் இதே பாணியில் தான் செயல்படுகிறது என்று உணர்ந்தேன். நாம் அமைப்பை முடிவு செய்யும்போது, அதனடிப்படையில் செயலாற்றவும் ஆரம்பித்து விடுகிறோம். இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், எதையாவது செய்ய நம் மனதில் நாம் தீர்மானித்து விட்டால் - அது தான் அமைப்பாக இருக்கும் - அதன் பிறகு அதன் செயல்பாடு, அதாவது நாம் செய்வது பின் தொடரும்.

நிறைய மக்கள், தங்கள் எண்ணங்களை சரிசெய்துக்கொள்ளாமல், தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். கோபம், புறங்கூறுவது, இச்சை, உண்மையில்லாத நிலை, பொய் ஆகிய இவற்றிலிருந்து விடுதலை பெற விரும்புகின்றனர். கெட்ட நடத்தைகள் மாறவேண்டும் என்று விரும்புகின்றனர்; ஆனால், தங்கள் பொல்லாத சிந்தனைகளை மாற்றுவதில்லை.

தேவனுடைய வார்த்தையின் செயல்முறை, மிகவும் எளிமையானது. “சரியாய் சிந்திப்பது, சரியாக செயல்பட வைக்கும்”. இந்த செயல்முறையை விளங்கிக் கொண்டு, செயல்படுத்தாத எவரும் வெற்றி நடைபோட முடியாது. நாம் சிந்திக்கும் முறையை மாற்றாத வரை, நம்முடைய நடத்தையை நம்மால் மாற்ற முடியாது.

சரியான காரியங்களை செய்ய அநேகர் போராடுவதை காண்கிறோம். ஒரு பெண், தனக்கு வம்பு பேசுவது ரொம்ப பிடிக்கும் என்று என்னிடம் சொன்னாள். அவள் வார்த்தைகள் எப்பொழுதும் கெட்டவைகள் அல்ல, அவளுக்கு நிறைய பேசுவது என்றால் விருப்பம். ஏதாவது விஷயம் தெரிய வேண்டுமானால், தனக்கு தான் முதலில் தெரியவேண்டும். அதன்பிறகு அதை மற்றவர்களுக்கு விவரகமாக தெரியப்படுத்துவாள். அவள் வார்த்தைகளை குறைத்துக்கொள்ளவும் அல்லது தனக்குள்ளாக அடக்கிக்கொள்ளவும் திணறினாள்.

“நீ உன்னுடைய சிந்தனைகளை மாற்றாதவரை, விடுதலை பெறமாட்டாய்,” என்று நான் அவளுக்கு அறிவுரைக் கூறினேன். நான் உனக்கு ஜெபிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், “நீ கணக்கொப்பு விக்க வேண்டும்” என்று சொன்னேன்.

“ஆமாம், நான், நான்தானா கணக்கொப்புவிக்க வேண்டும்” என்று குறுக்கிட்டாள். “இல்லை நான் சொல்வதை நீ கேட்கவில்லை. எல்லா வம்பு பேசும் பழக்கத்தில் இருந்தும் உனக்கு விடுதலை வேண்டும். ஆனால், நீ என்ன நினைக்கிறாயோ, அந்த உன் எண்ணங்களை மாற்ற உனக்கு விருப்பமில்லை. இது ஒரு போதும் வேலை செய்யாது. உன்னுடைய சிந்தையிலே உனக்கு விடுதலை வேண்டும். அதன்பிறகு உன் வார்த்தைகளும், செயல்பாடும் மாறும்.”

அவள் என்னுடைய வார்த்தைகளை எதிர்த்தாள். ஆனாலும், தனக்காக ஜெபிக்குமாறு கேட்டுக்கொண்டாள். நான் ஜெபித்து, முடித்ததும், அவள்: “நான் முதல் ஆளாக தகவல்களை பெற்று மற்றவரிடம் அதை சொல்லும்போது, எனக்குள் நல்ல ஒரு உணர்வு இருக்கும் - கொஞ்ச நேரத்திற்காவது - நான் முக்கியமானவளாக உணர்வேன். நீங்கள் ஜெபிக்கும்போது; நான் எவ்வளவு முக்கியமற்றவள், சிறுமை யானவள் என்று உணர்வதாக கர்த்தர் எனக்கு காண்பித்தார்,” என்று அழுதுக்கொண்டே சொன்னாள்.

அவளுடைய இந்த நடத்தை மாற என்னை தொடர்ந்து ஜெபிக்கும்படிக் கேட்டாள். அவள், அவளுடைய சிந்தனையை மாற்றி, தேவன் அவளை அன்புகூருவதையும், அவளைத் தகுதிப்படுத்தியிருப்பதையும், அவளை அவள் இருக்கும் வண்ணமாகவே ஏற்றுக்கொள்வார் என்பதையும் அறிய ஆரம்பித்து, அவள் ஒரு சில வாரங்களில் தன்னுடைய சிந்தனைகளை மாற்றக் கற்றுக்கொண்டாள். அதன்பிறகு அவளுடைய நாவு அவளுக்கு பிரச்சனையாக இல்லை.

நம்முடைய மனப்பான்மைகளை மாற்றாமல், கெட்ட நடத்தைகளை, நல்ல நடத்தைகளாக மாற்றவே முடியாது. நம்முடைய எண்ணம் முதலில் மாறவேண்டும்.

பவுல், எபேசியர் 4ஆம் அதிகாரத்தில், பழைய சுபாவத்தை, மறுரூபமான மனதோடு வித்தியாசப்படுத்தி: “அந்தப்படி முந்தின நடக்கைக்குரிய மோசம் போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்து போட்டு, உங்கள் உள்ளத்தில் புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்,” (4:22-24) என்று அவர் கட்டளையாக காட்டியுள்ளார்.

மற்றொரு மொழிப்பெயர்ப்பு இப்படியாகக் கூறுகிறது, “ஆவியானவர், நீங்கள் நினைக்கும் விதத்தை மாற்றி, உங்களை புதிய மனுஷனாக மாற்றுவாராக. நீங்கள் தேவனைப்போல இருக்க சிருஷ்டிக்கப்பட்டீர்கள், அதனால் நிங்கள் அவரை பிரியப்படுத்த வேண்டும், உண்மையாகவே பரிசுத்தமாயிருக்க வேண்டும்” (4:22-24).

பரிசுத்த ஆவியானவர், உங்கள் சிந்தனையை மாற்றும்போதுதான், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிரந்தரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.


பரிசுத்த பிதாவே, என்னுடைய சிந்தனைகளை மாற்றும். உம்முடைய வல்லமைக்காக, ஆற்றலுக்காக நன்றி. என்னுடைய பழைய மனுஷனையும், பழைய எண்ணங்களையும், உரிந்து போட எனக்கு உதவிச் செய்யும், அப்பொழுது நீர் என்னில் அதிகமாக கிரியை செய்து என்னை இயேசுவைப்போல மாற்ற முடியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

Scripture

Day 83Day 85

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More