YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 87 OF 100

பயப்படாதீர்கள்!

நம்முடைய வாழ்க்கையில் “பயம்” இல்லாவிட்டால், எல்லாவற்றையும் நன்றாக செய்யலாம் அல்லவா? சில விதமான பயங்கள் நமக்கு வரும் ஆபத்தைக் குறித்து நம்மை எச்சரிப்பவை, அவை உண்மையிலேயே நமக்கு தேவை - நம்மை பாதுகாப்பதாக அவை இருப்பதால், அது நல்லதாகும். கர்த்தருக்கு பயப்படும் “பயம்” என்று ஒன்று இருக்கிறது. அது அவர் மேல் நாம் வைத்திருக்கும் பரிசுத்தமான “பயபக்தியாகும்.” நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிற; பலமும், அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியை தடைசெய்யும், சாத்தானுடைய பயத்தினால், நமது உடலை உருக்கும் “பயத்தை” அவன் தினந்தோறும் நமக்கு கொண்டு வருவான்.

நான் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டது போல, நீங்கள் எப்பொழுதாவது, கவலை, சோர்வு, பாரமான உணர்வு இவைகளை அனுபவித்திருப்பீர்கள். அது பயத்துடன் வரக்குடியவைகளாகும். எந்த ஒரு காரணமோ, நோக்கமோ இல்லாமல், நிறைய மக்கள் பயத்தினால் போராடுகிறார்கள். எவ்வளவுதான் முயன்றாலும், எதற்கு பயப்படுகிறோம் என்று தெரியாமல் புரியாமல், திகைப்பார்கள். இன்னும் சிலர், ஒவ்வொரு நிமிடமும், என்ன நடக்குமோ என்று கவலைப்படுவார்கள். “ஒருவேளை...” என்பது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான சொற்றொடர். “ஒருவேளை செலவுகளையெல்லாம் சந்திக்க முடியாமல் போய் விட்டால்?” “ஒருவேளை என் குழந்தைக்கு அடிபட்டு விட்டால்?” இந்த முடிவில்லாத துயரங்கள், துரதிர்ஷ்டசாலிகளான இவர்களை தினமும் அவர்கள் வாழ்க்கையில் கட்டப்பட்ட நிலையில் வைத்திருக்கும்.

உலகில் எத்தனையோ முக்கியமானக்காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாம் அவைளைக்குறித்து அறிந்துகொண்டு, அதற்கேற்றவாறு ஆயத்தப்படுவது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. அதே நேரத்தில், நமக்கு பயம் வரும்போது, அதை நாம் எதிர்க்கவேண்டியவர்களாயிருக்கிறோம். கர்த்தருடைய வார்த்தை இப்படியாக கூறுகிறது, “தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” (2 தீமோத்தேயு 1:7).

சில நேரங்களில், பயத்தை நாம் ஒரு உணர்ச்சி என்று நினைக்கிறோம். ஆனால், பயம் ஒரு “ஆவி” என்பதை நாம் உணரவேண்டும். பிசாசான வனுக்கு பயம் ஒரு பிடித்தமான ஆயுதம் என்று நினைக்கிறேன். அதுவும் விசுவாசிகளை அலைகழிக்க, அவன் அதை உபயோகிப்பது அவனுக்கு அலாதி பிரியம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உங்களிடம் வந்து, உங்கள் செவிகளில், “தேவன் உன்னை மறந்து விட்டார், உனக்கு நம்பிக்கையே இல்லை,” என்று கூறுவான். அதனால், அவன் பயத்தினால் நம்மை அச்சுறுத்துவான்.

ஆனால் இயேசுவோ, “விசுவாசிக்கிறவனால் எல்லாம் கூடும்!” (மாற்கு 9:23) என்று சொன்னார். கர்த்தருக்குள் அக்கினியாக இருக்கும், பயமற்ற விசுவாசி, எதிரியானவனுக்கு ஒரு சவாலாக அமைகிறான். வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் என்று இயேசு நமக்கு வாக்களிக்கவில்லை. நாம் அனைவருமே பிரச்சனைகளையும், சவால் களையும், சந்திக்கிறோம். ஆனால், அதன் விளைவாக, நாம் கர்த்தரை விசுவாசிக்கிறோமா அல்லது பயந்து போகிறோமா என்பதுதான் கேள்வி.

சங்கீதம் 23:4 சொல்லுகிறது, “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்கு பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும்.” சங்கீதக்காரன், பள்ளத்தாக்கிலே நடந்தேன் என்று சொல்லுகிறான்.

நாம் எதற்காவது பயப்படும்போது, அது தேவனுடைய கிரியை அல்ல அது பிசாசின் தந்திரம் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். தேவன் நம் மீது அன்புகூரவில்லை, நம்முடைய செயல்களுக்கு நம்மை தண்டிக்க விரும்புகிறார் என்று அவன் சொல்வதை நாம் நம்பினால்; நாம் நம்முடைய போராட்டத்தில தோல்வி பெற தொடங்கிவிடுவோம்.

தேவன் அன்பாகவே இருக்கிறார். இதை போதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதோடு ஒரே ஒரு வார்த்தையை நாம் சேர்க்க முடியும்: தேவன் “என்னிடம்” அன்பாக இருக்கிறார் என்பதே. பயம் என்ற ஆவி தானாகவே நம்மை விட்டுபோகாது - அதை நாம்தான் சரியாக, நேருக்கு நேர் சந்தித்து, ஒழித்து கட்ட வேண்டும். தேவனுடைய வார்த்தையை சொல்லி, பயத்தை நம்மை விட்டு அகன்று போக கட்டளையிட வேண்டும். அடுத்த முறை, “பயம்” உங்கள் கதவைத் தட்டும் போது, உங்கள் “விசுவாசம்” அதற்கு பதிலளிக்கட்டும்!


அன்புள்ள பரலோக பிதாவே, உம்முடைய வார்த்தைகளை நான் படிக்கும்போது, உம்முடைய அன்பைக்குறித்து உறுதிப்பாட்டை நான் பெற்றுகொள்ளுகிறேன். நிறைய நேரங்களில், உம்முடைய அன்புக்கு நான் தகுதியற்றவள் என்று உணரும்போது, என்னுடைய தகுதியின் அடிப் படையில் நீர் என்னில் அன்புகூரவில்லை என்பதையும் உணருகிறேன். நீர் அன்பாகவே இருப்பதினால் என்னில் அன்புகூருகிறீர். இயேசுவே உம்முடைய அன்பின் உறுதிமொழிக்காக, என்னை உண்மையாகவே அன்புகூறு வதற்காகவும், அதனால் நான் பயப்படவே அவசியமில்லை என்பதற்காகவும் உம்முடைய நாமத்தில் நன்றி கூறுகிறேன். ஆமேன்.

Day 86Day 88

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More