YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 89 OF 100

நன்றியுடன் இருக்க, சில குறிப்புகள்

நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பது அனைவருமே அறிந்த ஒன்றாகும். கர்த்தரும் நாம் அப்படி இருக்கவேண்டும் என்று சொல்லுகிறார். நாமும் நம்முடைய அனுபவத்தில், கர்த்தரைத் துதிக்க, துதிக்க, நம்முடைய பாரங்களும், பிரச்சனைகளும் இலேசாக மாறியதை கண்டறிந்திருக்கிறோம்.

நன்றியறிதலின் ஒரு பகுதியாக இந்த வல்லமை இருக்கிறது. நாம் நிறுத்தி நிதானமாக கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்துள்ள நன்மைகளுக்காக அவரைத் துதிக்கும்போது, நமக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் காரியங்களுக்காகவும் கூட நாம் அவரை மெச்சிக் கொள்ளுகிறோம்.

ஒரு நாள், நான் ஒரு அலுவலக கட்டிடத்திற்குள் நுழையும்போது, அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் எனக்கு கதவை திறந்து விட்டார். நான் புன்முறுவலுடன் அவருக்கு நன்றி சொன்னேன். “உங்களுடன் சேர்த்து, இதுவரை ஐந்து பேரக்கு கதவை நான் திறந்து விட்டேன். ஆனால், ஒருவரும் என்னை பார்த்து சிரிக்கவும் இல்லை; இரண்டாவதாக எனக்கு நன்றி சொல்லவும் இல்லை,” என்றார்.

நான் இரண்டாவது முறையாக அவருக்கு நன்றி சொன்னேன். அப்புறம் நான் நினைத்துப்பார்த்தேன். மற்றவர்கள் நமக்கு தெரியாதவர் களாயிருந்தாலும்; இப்படிக் கதவைத் திறப்பது போன்ற சிறிய உதவிகளை அவர்கள் நமக்கு செய்யும்போது, நாம் அதை ஒரு பெரிய காரியமாக எண்ணுவதேயில்லை.

எல்லாம் இப்படித்தான் நடக்கும் என்பதை நாம் ஒத்துக்கொள்வதை விட, நாம் ஒரு நன்றியுள்ள சிந்தனையை பழக்கிக்கொள்வது நல்லது. உங்கள் பஸ் நேரத்திற்கு வந்து சேர்ந்ததா? அதற்கு ஓட்டுநருக்கு நன்றி சொன்னீர்களா? ஓட்டலில் சாப்பிட அமர்ந்திருக்கும்போது, உங்கள் கப்பில் காபியை ஊற்றிய பரிமாறியவருக்கு நன்றி சொன்னீர்களா? இப்படியாக நான் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், நான் சொல்ல விரும்பும் கருத்து என்னவென்றால்; மற்றவர்களிடம் நன்றி காட்டுவதை, ஒரு பழக்கமாகவே ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

மற்றொரு குறிப்பு: உங்கள் குடும்பத்திலுள்ளவர்களை “மெச்சிக் கொள்ளுங்கள்”, விசேஷமாக நீங்கள் திருமணம் புரிந்திருக்கும் உங்கள் கணவன் / மனைவியை பாராட்ட துவங்குங்கள். எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், நான் என் கனவர் டேவ்வை அடிக்கடி பாராட்டுவதுண்டு. அவர் என்னோடு பொறுமையாகவும், கரிசனையுடனும் இருப்பார். இதை நான் தெரிவிப்பதால், அந்த நன்றி சொல்லும் சில வார்த்தைகளானது நமக்குள் நன்றியுள்ள மனதையும், சிந்தையையும் ஏற்படுத்துகிறது.

நீங்கள் ஒருவரைப் பாராட்டும் போது, கேட்பவர்களுக்கு நன்றாக இருக்கும். அதுமட்டுமல்ல, சொல்லுகிற உங்களுக்கும் சந்தோஷத்துடன் கூடிய ஒரு விடுதலை உண்டாகும். சிறு சிறு வழிகளிலேயும், நம்முடைய வாழ்க்கையையும், பிறருடைய வாழ்க்கையையும் நாம் வளமாக்குவோம். இதை முயன்று பாருங்களேன்! 

மற்றொருக்காரியம் கூட நாம் செய்யலாம். எந்தெந்த காரியங்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும் என்பதை தியானிக்கலாம். என்னுடைய நண்பர் ஒருவர் படுக்கையை விட்டு காலையில் எழும்புவதற்கு முன், பத்து காரியங்களுக்காவது கர்த்தருக்கு நன்றி சொல்லாமல் எழும்பமாட்டார். தன் விரலை விட்டு எண்ணுவார். எல்லாம் சிறிய காரியங்களாகத்தான் இருக்கும். நல்ல நம்பிக்கையான காருக்காக, ஓய்வு நாள் பள்ளியின் அங்கத்தினராக தான் இருப்பதற்காக, அல்லது தான் சுகத்துடன் இருப்பதற்காக...

இரவு தூங்கப்போகும்போது குறைந்த பட்சம், நன்றாக நடந்த மூன்று காரியங்களில் கவனம் செலுத்தியவாறு தூங்கப் போவாராம். நிஜவாழ்வில் நடந்த அந்த மூன்று முற்போக்கான காரியங்களுக்காக துதிக்க ஆரம்பிப்பார். அவருடைய மேற்பார்வையாளருக்காக, இவர் செய்த நல்ல வேலைக்காக, அல்லது அவருடைய நண்பரிடமிருந்து வந்த நல்ல கடிதம், போன்ற காரியங்களாகும்.

மற்றுமொரு குறிப்பு: நம்மைக் குறித்து உண்மையை சொல்பவரிடம், நன்றி சொல்ல வேண்டும். யாருக்குமே பிற்போக்கான காரியங்கள் கேட்பதில் விருப்பமில்லை. சில நேரங்களில் நாம் அப்படிப்பட்ட காரியங்களை கேட்க வேண்டி இருக்கும். அது அந்த சமயத்தில் உங்களை புண்படுத்தும். ஆனால், அந்த அனுபவத்தின் மூலம் நாம் கற்று வளர்வதற்கு பிரயோஜனமாயிருக்கும்.

“இரண்டு விதமான மக்கள் தான் நம்மைக்குறித்து உண்மையை சொல்லுவார்கள். நம் மீது அதிக கோபமாக இருப்பவர்கள், அல்லது நம்மை மிகவும் நேசிக்கும் நபராக இருக்கவேண்டும்,” என்று என் நண்பர் சொல்லுவார். இந்த இரண்டு விதமான மக்களையும், தேவன் நம் வாழ்க்கையில் பயன்படுத்துவார்.

அதனால் நாம், நம்மைக் குறித்து உண்மையை சொல்பவரிடம், நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் சொல்லும் காரியத்தை நாம் கேட்க விரும்பாவிட்டாலும், நாம் உண்மையான காரியத்தை - அதுவும் நமக்கு தெரியாததைக் கேட்கும்போது, நாம் அதை மாற்றிக் கொள்ளமுடியும். நீங்கள் மாறிய பிறகு; நீங்கள் நன்றி சொல்ல, இதுவும் ஒரு காரணமாக மாறிவிடும் இல்லையா?


ஆண்டவரே, என்னுடைய வாழ்க்கையில் நீர் அனுப்பும் நல்ல காரியங்களுக்காக உமக்கு நன்றி. என் வாழ்க்கையில் பயங்கரமான, காரியங்களை அனுமதிக்காததற்காக உமக்கு நன்றி. என்னுடைய வாழ்க்கையில் நான் உம்மோடு நெருங்கி வரவும், உமக்கு அதிக நன்றியுள்ளவனாக இருக்கவும் உதவும் மக்களுக்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

Day 88Day 90

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More