YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 81 OF 100

இனிய சொற்கள், சுகமாக்கும் சொற்கள்

நம்முடைய “சிந்தனைகள்;” நம்மை பிரச்சனையில் சிக்க வைக்கவும் முடியும், அல்லது நம்முடைய பிரச்சனைகளுக்கு மேலே நம்மை கொண்டு செல்லவும் முடியும். ஆனால், அடிக்கடி நம்முடைய மனது கெட்ட காரியங்களில் ஆழ்ந்து சிந்தித்து, தவறானவைகளையே அசைபோடுவதை நாம் அனுமதித்துவிடுகிறோம். மேலே கூறப்பட்டுள்ள வசனத்தில், ஞானியின் இருதயம் (சிந்தனை), அவனுடைய வாய்க்கு போதிக்கும். இதைப் பார்த்தால், நம் இருதயத்தில் குடிகொண்டுள்ள சிந்தனைகள் தான், வார்த்தைகளாக வெளிவருகின்றன என்று அர்த்தமாகிறது. நம்முடைய வார்த்தைகள் ஊக்குவிப்பவைகளாக இருந்தால்; அது நமக்கும், மற்றவர்களுக்கும், மேலே எழும்ப பிரயோஜனமாக இருக்கும்.

இந்த சிந்தனைகள் மற்றவர்களைக் குறித்து மட்டுமல்ல. நாம் நம்மை எப்படி பிரதிபலிக்கிறோம் என்பதிலும் அடங்கும். நான் பள்ளியில் படிக்கும்போது, “நான் மற்றவர்களைவிட, அறிவில் குறைவுள்ளவளாக இருப்பதாக உணருகிறேன்,” என்று என் தோழி அவளைப்பற்றியே என்னிடம் சொன்னாள். எனக்கு அதிர்ச்சி. அவள் நன்றாக படிப்பவள். அவளுடைய தகப்பனார் அடிக்கடி அவளை, மதியற்றவள் என்று திட்டினாராம். அவர் எதையாவது சொல்லும்போது, முதல் தடவையே அவன் அதை புரிந்துகொள்ளாவிட்டால், உடனே மதியற்றவள் என்று சொல்வார். அவளுடைய மனதிலே அது பதிந்து விட்டதால், அவளுடைய சிந்தனையில், “நீ காரியங்களை புரிந்துகொள்ளும் அளவுக்கு, உனக்கு அறிவில்லை,” என்று பதிவாகி விட்டது.

நம்முடைய வார்த்தைகள், மற்றவர்களை எப்படி அழித்து விட முடியும் என்பதற்கு, இது ஒரு நல்ல உதாரணமாகும். ஆனால், நம்முடைய நல்வார்த்தைகளினாலே, மற்றவர்களை நாம் உயர்த்தி விடவும் முடியும். மனிதர்களிடம் இருக்கும் நல்ல காரியங்களை நாம் பார்த்து, அதை அவர்களிடம் சொல்லி, மெச்சிக்கொள்ளும்போது, நாம் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் போல இருப்போம்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், நான் திரள் கூட்டமான மக்களுக்கு முன்பாக நின்று அநேக தடவைகளில் பேசியிருக்கிறேன். நான் வெற்றியடைந்தவளாக இருப்பதால், நான் எப்பொழுதும் வெற்றியுள்ளவன் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். அவர்களைபோல போராட்டம் எனக்கில்லை என்று கணிப்பார்கள். சில நேரங்களில், யாராவது ஒருவர் வந்து; “ஜாய்ஸ், கர்த்தர் உண்மையாகவே இன்று இரவு உங்களை உபயோகப்படுத்தியிருக்கிறார். நான் இங்கு வரும்போது, கர்த்தாவே நான் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியுடன் மிகவும் சோர்ந்துபோய் வந்தேன். செய்தியின் நடுவில் திடீரென்று கர்த்தர் உங்கள் மூலமாக என்னிடம் பேசினார்,” என்பார்கள்.

இந்த வார்த்தைகள் மிகவும் அருமையானவை - தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தேனைப்போல. ஆனால், நான் எவ்வளவு போராடி, சத்துரு வினிடம் யுத்தம் செய்து மேற்கொண்டு, என் மனதை விடுவித்து, அன்று அப்படி ஆசீர்வாதமாக இருந்தேன் என்பது அவர்களுக்கு தெரியாது. “அவர்களுக்கு நான் ஆசீர்வாதமாக இருக்கிறேன்,” என்று அவர்கள் என்னிடம் சொல்லும்போது, அந்த வார்த்தைகள் எனக்கு எவ்வளவு “அர்த்தமுள்ளவைகள்” என்பதையும் அவர்கள் உணர முடியாது.

நாமனைவரும் விரும்புவது, இனிமையான சுகம் தரும் சொற்களாகும். எனக்கிருக்கும் போராட்டம், கஷ்டம், பாடுகள், மற்றவருக்கு இல்லை என்று நாம் நினைப்பது சுலபம். நம் அனைவருக்குமே போராட்டமுண்டு, அதில் ஒரு சிலர் கடினமாக போராடுகிறோம். கர்த்தர் எவ்வளவுக் கதிகமாக நம்மை உபயோகிக்க விரும்புகிறாரோ, பிசாசு அவ்வளவுக் கதிகமாக, தன்னுடைய வல்லமையை நம்மேல் துஷ்பிரயோகம் செய்கிறேன் என்று நான் நினைக்கிறேன்.

நாம் உண்மையாகவே இனிய வார்த்தைகளை பேசும்போது, ஒருவருக்கொருவர் உதவி செய்கிறதோடு மட்டுமல்லாமல், பிசாசை சக்தியிழக்கச் செய்கிறவர்களாயுமிருப்போம். நாம் ஒருவரையொருவர் கட்டுகிறவர்களாயிருப்போம். நாம் எந்த அளவுக்கு மற்றவர்களால் உற்சாகத்தை பெறவேண்டும் என்று விரும்புகிறோமோ, அந்த அளவுக்கு மற்றவர்களையும் கட்டி எழுப்ப வேண்டும்.

நான் இரக்கமுள்ள வார்த்தைகளை சொல்லவேண்டும் என்று விரும்பின நாட்களுண்டு. அப்புறம் இப்படி நினைப்பேன், “ஓ, அவளுக்கு அது தெரிந்ததாக இருக்கும். இப்படிப்பட்ட வார்த்தைகளை ஏற்கனவே கேட்டிருப்பான்.” ஆனால், அவள் என்னிடமிருந்து அந்த கனிவான வார்த்தைகளைக் கேட்கவில்லையே. மற்றவர்களுடைய வார்த்தை களைக் காட்டிலும் என்னுடைய வார்த்தை மேலானது என்றதல்ல. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாயின் வார்த்தைகளை அபிஷேகித்து, அதன் மூலம் அவர்களுக்கு சௌக்கியத்தையும் ஷேமத்தையும் கொண்டு வருகிறவராயிருக்கிறார்.

நாம் ஒவ்வொருவரும் இப்படி யோசித்தால் என்ன? நான் காயம்பட்ட, புண்பட்ட, இருதயங்களுக்கு சுகத்தைக் கொண்டுவரும் தேவனுடைய ஊழியக்காரர்கள். நம்முடைய இனிய, ஆற்றும், மென்மையான கட்டி எழுப்பும் வார்த்தைகளினால், மக்களை தூக்கியெடுக்க கர்த்தர் நம்மை தெரிந்துகொண்டிருக்கும்போது; நாம் பிசாசை ஓட ஓட துரத்துவதோ டல்லாமல், நம்முடைய சந்தோஷமும், மற்றவருடைய சந்தோஷமும் மேலோங்கச் செய்வோம். ஏனெனில் கர்த்தர், மற்றவர்களை மகிழ்விக்க நம்மை ஒரு சுகமாக்கும் கருவியாக பயன்படுத்தியதால்; நாம் இன்னும் நன்மை செய்வோம், என்பதை நான் கற்றுக்கொண்டேன். அடிக்கடி உற்சாகப்படுத்தும், கரிசனையுள்ள, எளிய வார்த்தைகளை நாம் பேசும்போது, அதுவே மற்றவர்களை நாம் “அரணவணைப்பது” போல் இருக்கும். 


பரிசுத்த பிதாவே, எனக்குள் புதைந்திருக்கும் உமது வார்த்தையை எனக்கு ஞாபகப்படுத்தும். நல்லதை பற்றிக் கொள்ளவும், இரக்கமானதை இறுக கட்டிக்கொள்ளவும், மேலே உயரும் சிந்தையையும் எனக்கு நினைவுப்படுத்தும். மற்றவரையும் என்னையும் பழித்து, புண்படுத்தி, பாழாக்கும் வார்த்தைகளை தூக்கியெறிய உதவிச்செய்யும். இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறேன். ஆமென்.

Day 80Day 82

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More