YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 80 OF 100

தேவனை முழுமையாக நம்புங்கள்

“நாம் எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து புண் பட்டிருக்கிறோம்?” சூழ்நிலைகளுக்கேற்ப, வித்தியாசனமான பதில்களை, இக்கேள்விக்கு நீங்கள் தருவீர்கள்; ஆனால், இந்த கேள்வியை நாம் சற்று அலசி ஆராய்ந்தால், அது நம்முடைய சிந்தைக்கு விருந்தாக அமையும்.

மற்றவர்களை அளவுக்கு மீறி நம்பி மோசம்போனவர்கள், சில சந்தர்ப்பங்களில் நம்புவதையே மறுத்துவிடுகின்றனர். ஒரு முறை, நான் ஒரு பெண்கள் குழுவோடு இணைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தேன். நான் அவர்களை அதிகமாக அன்புகூர்ந்தேன். ஆனால், ஒருவரோடொருவர் உள்ள எங்கள் உறவு, ஆரோக்கியமானதாக இல்லை என்பதை உணர்ந்தேன். நான் அளவுக்கதிகமாக அவர்களை சார்ந்து இருந்தேன். தேவனை சார்ந்திருப்பதைவிட, அவர்களை சார்ந்திருந்தேன்.

கர்த்தர் மேல்தான் நம்முடைய முழு நம்பிக்கையையும் வைக்கவேண்டும் என்பது, நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனால், சில வேளைகளிலே, தனிப்பட்ட ஒரு நபர் அல்லது சிலர் மீது, அளவு கடந்த நம்பிக்கைக் கொண்டு; நம்மையே அவர்களுக்கு முழுவதுமாக விட்டுக்கொடுத்து விடுவோம். கர்த்தர் நம்மை ஆளும் அளவுக்கு, அவர்கள் நம்மை ஆளுவார்கள். இப்படி நடக்கும்போது, நம்முடைய வாழ்க்கையே நிலைத்தடுமாறி, பிசாசிற்கு கதவை திறந்து உள்ளே விட்டு விடுவோம்.

யோவான் எழுதின சுவிசேஷத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வசனங்கள் சரியான எச்சரிக்கையாக நமக்கு அமைகிறது. இயேசுவானவர் தனக்கு அன்பான சீஷர்களிடத்தில் கொண்டிருந்த உறவைக் குறித்து இங்கு யோவான் பேசுகிறார். தன்னோடு நெருக்கமாக இருந்த சீஷர்களையும், இயேசு எந்த அளவு அதிகமாக, அல்லது எவ்வளவு குறைவாக நம்ப முடியும் என்று அறிந்திருந்தார். நம்மெல்லாருக்குள்ளிருக்கும் மனுஷீக சுபாவத்தை இயேசு நன்கு அறிந்திருந்தார்.

இயேசு எப்படி நன்கு அறிந்திருந்தாரோ, அப்படியே நாமும் மற்றவர்களை நம்புவதற்கு, நமக்கு “பகுத்தறிவு” தேவை என்பதையும் அறிந்திருந்தார். அதனால்தான்; நம்மை வழிநடத்தி, யார் யாரை நாம் நம்ப வேண்டும் என்று கற்றுத் தருவதற்கு, அவர் பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். 1 கொரிந்தியர் 12:10ல் அப்போஸ்தலனாகிய பவுல், ஆவியின் வரமாகிய ஆவிகளைப் பகுத்தறிதலைக் குறித்து, ஒரு “ஆவிக்குரிய” வரமாக எழுதுகிறார். 31ஆம் வசனத்தில், நம்மை ஆவிக்குரிய முக்கியமான வரங்களை நாடுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறார். முக்கியமான வரங்களில் ஒன்றாக, பகுத்தறியும் வரம் கருதப்படுகிறது. நல்லது எது, கெட்டது எது, என்று வித்தியாசம் கண்டுகொள்ள, அது நமக்கு உதவுகிறது. 

ஒரு பிரச்சனையை நாம் “இனம் கண்டுக்கொள்ளும்போது,” அதற்காக நம்மை “ஜெபிக்க வைப்பதே,” உண்மையான ஆவிக்குரிய பகுத்தறிதலாகும். ஒரு உண்மையான பிரச்சனையை, சரியான ஆவிக்குரிய வரத்தின் மூலம் நாம் பகுத்தறிந்ததும், அதை தீர்ப்பதற்கு சரியான வேத வசனங்கள் அடுத்து நமக்கு கிடைக்கும். பிரச்சனையை பெரிதாக்கும் மாம்சீகமான வழி நமக்கு கிடைக்காது. நாம் தேவனோடு நெருக்கமாக நடந்து, அவர் வழிநடத்துதலை அவரிடம் கேட்கும்போது, ஆவியானவர் அந்த நடத்துதலை நமக்குத் தருவார்.

நான் ஏற்கனவே சொன்னது போல, சிலருக்கு “சந்தேகத்தின்” வரம் தான் இருக்கிறது. அது புதிதாக்கப்படாத மனதிலிருந்து வருகிறது. இன்னொரு பக்கம் பார்க்கும்போது, “பகுத்தறிதல்” மறுரூபமாக்கப்பட்ட ஆவியின் கனியாக இருக்கிறது.

அப்போஸ்தல நடபடிகள் புத்தகம், நம்பிக்கைக்கும், பகுத்தறிதலுக்கும் ஒரு சரியான உதாரணத்தை தருகிறது. அந்த வேதப்பகுதியில் அனனியா, சப்பிராள் என்ற தம்பதியரைக் காண்கிறோம். எருசலேமில் தோன்றிய ஆதி சபையின் அங்கத்தினர்கள் அவர்கள். அந்த நாட்களில், விசுவாசிகள் தங்கள் நிலங்களையும் வீடுகளையும் விற்று, கிரயத்தைப் பொதுவாக அனைவரும் அனுபவித்தார்கள். இந்த தம்பதியர் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். கிரயத்திலே, ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, மற்றொரு பங்கை கொண்டுவந்து அப்போஸ்தலருடைய பாதத்திலே அனனியா வைத்தான். அது பரவாயில்லை. அவர்களுடைய பணம் தான். ஆனால், ஒரு பங்கை கொண்டுவந்து கொடுத்ததோடல்லாமல், மற்ற பங்கை வஞ்சித்து வைத்தது சரியல்ல.

பேதுரு அவனை நோக்கி: “அனனியாவே, நிலத்தில் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?” (அப்போஸ்தலர் 5:3). “அதை விற்கு முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ?” என்றான். அவர்கள் செய்த பாவம், ஒரு பங்கை கொடுத்து, அதுதான் எல்லாம் என்று சொன்னது. “நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய்,” என்றான் (வ.4).

வஞ்சித்ததின் விளைவு, கணவனும், மனைவியும் மரித்தார்கள். அந்த சம்பவம் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கிறதோ, அவ்வளவுக் கதிகமாக பரிசுத்த ஆவியானவர் நம்முடைய உள்ளத்தை அறிந்திருக் கிறார் என்ற உண்மையை நாம் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும்.

நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டும், மற்றவர்களை நம்ப வேண்டும் என்றும் கர்த்தர் விரும்புகிறார். ஆனால், “பகுத்தறிவோடு” நாம் நடத்தப்படவேண்டும். நம்முடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை - இவ்விரண்டையும் கர்த்தருக்கே செலுத்துவதற்கு நாம் ஒரு தெளிவான கோடு கிழிக்கவேண்டும். கர்த்தருக்கு உரியதை மனிதர்களிடம் செலுத்தினால், நாம் ஏமாற்றமடைவது மட்டுமல்ல, எந்த ஒரு மனுஷனும் நம்முடைய எதிர்பார்ப்புகளை சந்திக்கவும் முடியாது; நாம் தேவனையும் ஏமாற்றுகிறவர்களாக இருப்போம்.

ஆதலால், இப்படிப்பட்ட தவறுகளை நாம் இனியும் செய்யவேண்டாம். மற்றவர்களை நம்புவதிலும், அன்புகூருவதிலும், நாம் “பகுத்தறிதலை” பயன்படுத்துவோம். ஆனால், தேவனை முழுமையாக நம்பி அவரில் அன்புகூருவதில், நாம் தவறே செய்ய முடியாது.


ஆண்டவரே, நான் உம்மை நம்புகிறேன், இன்னும் அதிகமாக நம்புவதற்கும் விரும்புகிறேன். உம்மை சார்ந்திராமல், அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கு கொடுக்க நான் சோதிக்கப் படாமலிருக்க எனக்கு உதவி செய்யும். உமக்கு உண்மையாக இருக்க எனக்கு உதவும். உம்முடைய பரிசுத்த ஆவியான வருடைய நடத்துதலை நான் எப்பொழுதும் இனம் கண்டுக்கொள்ள எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

Scripture

Day 79Day 81

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More