மனதின் போர்களம்Sample

தண்ணீரின் மேல் நடந்துகொண்டேயிருங்கள்!
ஒரு புதிய ஏற்பாட்டின் சம்பவத்தை நாம் நோக்கிப் பார்ப்போம். நள்ளிரவில், கலிலேயா கடலில், இயேசுவானவர் தண்ணீரின் மேல் நடந்து வருவதை, அவருடைய சீஷர்கள், படகிலிருந்து பார்த்தார்கள். அது வியக்கத்தக்க விஷயம்! ஆனால், மத்தேயு எழுதும்போது, எதிர்காற்று பயங்கரமாக வீசியது என்றும், ஆனாலும், இயேசு அந்த அலைகளின் மேல் நடந்து வந்தார் என்றும் எழுதுகிறார்.
சீஷர்கள் பயந்தார்கள் என்றால், அது இயல்பான காரியம்தான். கடல் சீற்றமில்லாமல் அமைதியாக இருந்தாலும், திடீரென்று ஒருவர் தண்ணீரின் மேல் நடந்து வருவதை யார் எதிர்பார்க்க முடியும்?
உடனே இயேசு அவர்களோடே பேசி: “திடன் கொள்ளுங்கள்;” நான் தானே, பயப்படாதிருங்கள் என்றார் (வ.27). இதுதான் இந்த சம்பவத்திலே, மிகவும் வல்லமையான நேரம். அதன் பிறகு என்ன நடந்தது. “வாங்க இயேசுவே,” என்று நகர்ந்து படகிலே இயேசுவுக்கு இடம் கொடுத் தார்களா? அல்லது, அவரைப் பார்த்தவுடன் அலைகளில் குதித்து, அவருடன் சேர்ந்து கொண்டார்களா? பயத்தினால் குன்றிப் போய், ஐயோ நாம் மனிதர்களாயிற்றே, நம்மால் தண்ணீரின் மேல் நடக்க முடியாதே என்று கலங்கினார்களா?
பேதுரு ஒருவன் தான் உண்மையான விசுவாசத்துடன் செயல்பட்டான் என்று பார்க்கிறோம். இதிலே, நாம் எந்த தவறும் செய்துவிட முடியாது. பேதுரு அவரை நோக்கி: “ஆண்டவரே! நீரேயானால், நான் ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.” இப்படிச் சொன்னது பேதுருவின் அசாத்தியமான விசுவாச செயலாகும். நீங்கள் அந்த வேத பகுதியை நன்கு கவனித்தால், பேதுரு ஒருவன்தான் அப்படி பேசினான் என்று தெரியும்.
பேதுருவுக்கு அது ஒரு விசுவாசத்தின் உன்னதமான நாழிகை என்றே சொல்ல வேண்டும். அபிஷேகிக்கப்பட தேவ குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மேல், பேதுரு கொண்ட விசுவாசம் எவ்வளவு பெரியதென்று இது சுட்டிக்காட்டுகிறது. இயேசுவானவர் தேவனுடைய குமாரன்தான் என்று சற்றும் சந்தேகமின்றி, உறுதியாய் விசுவாசித்து; அதனால் உடனே தண்ணீரின் மேல் பேதுரு நடக்க இறங்கினான்.
நம்மில் எத்தனை பேர், நடுக்கடலில், பேதுருவைப்போல் படகை விட்டு இறங்குவோம்? இதை ஏன் நான் அழுத்தம், திருத்தமாக, கேட்கிறேன் என்றால், நாம் சுலபமாக, “ஆண்டவரே, நீர் தண்ணீரின் மேல் நடப்பதை நான் காண்கிறேன், நானும் உம்மோடு தண்ணீரில் ஒரு நாள் நடக்க முடியும் என்று விசுவாசிக்கிறேன்,” என்று சொல்லிவிடலாம். ஆனால், அவரைக் கண்ட மாத்திரத்திலே, உடனே படகை விட்டு இறங்க முடியுமா? இருந்த பனிரெண்டு சீஷர்களிலே, பேதுரு ஒருவன்தான் அப்படிப்பட்ட விசுவாச அடியை எடுத்து வைத்தான்.
ஏதோ உங்கள் விசுவாசம் குறைவானது, உங்களுக்கு அப்படிப்பட்ட விசுவாசம் இல்லை என்று உங்களை குறை கூறவோ, சோர்வடையச் செய்யவோ, நான் இந்த சம்பவத்தை கூறவில்லை. விசுவாசித்த அந்த மனிதன், எப்படி உடனே வீரமாக, ஜெயமாக செயல்பட்டான் என்பதைத்தான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்! பாருங்கள், பேதுரு எந்த அளவுக்கு உறுதியாக இயேசுவானவரை விசுவாசித்திருந்தால், அவர் “வா” என்று அழைத்த மறு வினாடியே, படகை விட்டு, அடுத்த அடியெடுத்து வைத்து, கடலின் மேல் இயேசுவை நோக்கி நடக்க துவங்கியிருப்பான்!
நம்மில் அநேகருக்கு, இந்தச் சம்பவம் முழுவதும் தெரிந்திருக்கும். ஒருவேளை, நாம் இது என்ன “பெரிய விஷயம்”! அவன் படகை விட்டு இறங்கி, சில அடி இயேசுவினிடம் செல்ல நடந்தான், ஆனால் பயந்து, மூழ்க ஆரம்பித்து விட்டானே” என்று அலட்சியமாக சொல்லலாம். இயேசுவும் அவனை கடிந்துகொண்டு, “அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்” என்றார் (வ.31). சற்று சிந்தித்துப் பாருங்கள் - இயேசு இந்த வார்த்தைகளை (அற்ப விசுவாசியே) என்று பேதுருவை நோக்கி அந்த நேரமே. அந்த அற்ப விசுவாசம் கூட மற்ற சீஷர்களுக்கு இல்லையே.
இதை பேதுருவுக்கு என்று இல்லாமல், இயேசுவானவர் உங்களை உற்சாகப்படுத்த கூறிய வார்த்தைகளாக, நீங்கள் ஏன் எடுக்கக்கூடாது? இந்த சம்பவத்தைக் காண்கிற நீங்கள், “நீ நன்றாகத்தான் ஆரம்பித்தாய், என்னை விசுவாசித்தாய், படகை விட்டும் இறங்கினாய், நான் நடந்ததைப் போலவே தண்ணீரின் மேலும் நடந்தாய், உன்னால் முடிந்தது! ஆனால், சந்தேகம் உன் மனதிலே எழும்பி நீ பயந்த வேளையில், அமிழ்ந்து போக ஆரம்பித்தாய்,” என்று இயேசு சொல்வதாக நினைத்துப் பாருங்கள்.
இந்த அற்புதமான சம்பவம், உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது தெரியுமா? இயேசுவானவர் எப்பொழுதும் உங்களுடனே கூட இருக்கிறார். இயற்கையின் சூழல்களையும் மீறி, அவர் உங்களை கரிசனையோடு கவனிக்கக் கூடியவராக இருக்கிறார்.
ஆண்டவரே, என் விசுவாசக் குறைவை எனக்கு மன்னியும். உம்முடைய நடத்துதலைப் பின்பற்ற தேவையான விசுவாசத்தை எனக்கு தாரும். சுற்றியுள்ள சூழ்நிலைகள், சந்தேகம் எனும் ஆழமான தண்ணீர்களுக்குள் என்னை மூழ்கடிக்க பயமுறுத்தும்போது, உம் மேல் என் கண்களைப் பதிய வைக்க, எனக்கு உதவி செய்யும். இயேசுவின் பரிசுத்த நாமத்தில் இவையெல்லாவற்றையும் கேட்கிறேன். ஆமென்.
Scripture
About this Plan

ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
Related Plans

Spiritual Warfare

Acts 10:9-33 | When God Has a New Way

EquipHer Vol. 12: "From Success to Significance"

Ready as You Are

God in the Midst of Depression

Journey Through the Gospel of Matthew

7-Day Devotional: Torn Between Two Worlds – Embracing God’s Gifts Amid Unmet Longings

Gideon

Here I Am X Waha
