மனதின் போர்களம்Sample

ஒரு குழப்பமடைந்த மனம்
ஒரு திருட்டைப்பற்றிய விசாரணையை நடத்தும்படி, நீதிமன்றத் திலிருந்து ஒரு அழைப்பு என்னுடைய சிநேகிதி ஈவாவிற்கு வந்தது.
ஒரு வீட்டை உடைத்து, பலபொருட்களை திருடியதற்காக குற்றம் சாட்டப்பட்டவனுடைய ஆதாரங்களைக் கொடுத்து, வழக்கறிஞர் இரண்டு நாட்களாக பனிரெண்டு பேரை விசாரித்து வந்தார். ஈவா, அவனை குற்றவாளி என்று தீர்ப்பு சொல்ல ஆயத்தமாக இருந்தாள்.
மூன்றாவது நாளில், குற்றவாளி தரப்பில் ஆஜரான வக்கீல், குற்றத்தின் மறுபக்கத்தை வெளிப்படுத்தினார். ஈவா எந்த அளவுக்கு கூர்ந்து கவனித்தாளோ, அந்த அளவுக்கு குழம்பிப் போனாள். ஆரம்பத்தில் சரியாக தென்பட்ட இந்த வழக்கு, இப்பொழுது சந்தேகத் திற்கிடமாக, முரண்பாடாக தென்பட்டது.
நீதிமன்றம் அந்த நபரை குற்றவாளியென்று தீர்ப்பளித்தாலும், ஈவா சரியான முடிவை எடுக்க கஷ்டப்பட்டாள். ஒவ்வொரு வழக்கறிஞர் பேசும் போதும், அவர் சொல்வதுதான் சரியென்பது போல இருந்தது.
அநேக விசுவாசிகள் தினமும் இப்படித்தான் வாழுகிறார்கள். யாக்கோபு சொல்வது போல, இப்படிப்பட்டவர்கள், இருமனமுள்ளவர் களாக இருக்கிறார்கள். ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பார்கள். வேறு ஏதாவது நடந்து விட்டால், அதன்பிறகு உடனே மறுபக்கம் தாவி விடுவார்கள்.
அவர்கள் இருமனமுள்ளவர்களாயிருப்பதால், இரு நினைவுகளால் இரண்டு அபிப்பிராயங்களின் நடுவே சிக்கி, இப்படியும் அப்படியுமாக இருக்கிறார்கள். என்ன செய்யவேண்டும் என்று தீர்மானமாக தெரிந்தாலும், திடீரென்று தாங்கள் செய்வதை மாற்றிக்கொண்டு விடுகின்றனர். ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய தீர்மானித்து, அதிலே அவர்கள் நிலைத்திருக்கவேண்டும் என்று யோசிக்கும்போதே, இந்த தீர்மானம் சரிதானா என்று “திகைக்க” ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் எடுத்த முடிவையே, அவர்கள் தொடர்ந்து சந்தேகித்து, கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
“திறந்த” மனதோடு இருப்பது, இதற்கு நேர் மாறான காரியமாகும். திறந்த மனதோடு என்று சொல்லும்போது, ஒரு காரியத்தை எல்லா பக்கமும் கேட்டு, அலசி ஆராயவேண்டும் - வழக்கறிஞர் ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்வது போல. ஆனால், முடிவில் நாம் நம் வாழ்க்கையில் சாட்சிகளையோ, சூழ்நிலைகளையோ பிரித்து, வகைப் படுத்தி, “இதைத்தான் நான் செய்யப் போகிறேன்,” என்று சொல்ல வேண்டும்.
இது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அநேகருக்கு எதைக்குறித்தாவது ஒரு முடிவு எடுக்கவேண்டுமானால், ரொம்ப கஷ்டம். “நான் ஏதாவது தவறு செய்து விட்டால் என்ன செய்வது? தவறான முடிவுகளை எடுத்து விட்டால் என்ன செய்வது?” என்று கேட்பார்கள். இவை நியாயமான கேள்விகள்தான். ஆனால், இவைகள் தேவனுடைய பிள்ளைகளை செயலற்று போக செய்து, அவர்கள் எதையும் செய்யாமல் இருக்க செய்துவிடும். விசுவாசிகள் ஒன்றுமே செய்யாமல், சும்மா இருப்பதற்கு, பிசாசு பயன்படுத்தும் கருவிகளாக இவை அமைந்துவிடும்.
நான் இதில் மிகவும் தேறினவள். யாக்கோபு எழுதுவது போல், நானும் அநேக ஆண்டுகள் இருமனமுள்ளவளாகத்தான் இருந்தேன். நினைத்ததையே, திரும்பத் திரும்ப நினைப்பதற்கு, நிறைய பெலன் தேவை. எனக்கு அப்படி இருக்கப் பிடிக்கவில்லை. ஆனால், தவறு செய்துவிடக் கூடாதே, என்று நான் பயந்ததன் காரணமாக, நல்ல முடிவுகளை எடுக்க என்னால் முடியவில்லை. பிசாசு, என் மனதை ஒரு போர்களமாக வைத்து, என்னோடு யுத்தத்திற்கு நிற்கிறான் என்பதை அறிய, எனக்கு பல ஆண்டுகள் ஆனது. நான் அறிந்த அந்த கணப்பொழுதே, எல்லா வற்றையும் குறித்து எனக்குள் ஒரே குழப்பம். ஏனென்று தெரியவில்லை.
அநேக கர்த்தருடைய பிள்ளைகள்; நான் அப்பொழுது எந்த நிலையில் இருந்தேனோ, அப்படித்தான் இப்பவும் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக சிந்திக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு விளைவுகள், உறவுகள், காரணங்கள் என்று வகை பிரிக்கும் திறமை உண்டு. அவர்கள் உண்மையாக சூழ்நிலைகளை நன்கு புரிந்து, அவற்றை நடந்த சம்பவங்களோடு சம்பந்தப்படுத்தி, ஆராய்ந்து அறிவுத் திறனுடன், தக்க முறையில் முடிவெடுக்கக் கூடியவர்கள்.
இப்படிப்பட்டவர்களிடம், அடிக்கடி பிசாசானவன் குறுக்கிட்டு கர்த்தருடைய சித்தத்தின்படி செய்யாமல், அவர்களை வழிவிலகச் செய்வான். தேவன், அவர்களிடத்தில் ஒரு காரியத்தைக் குறித்து பேசியிருக்கலாம். ஆரம்பத்தில், அது அவர்களுடைய புத்திக்கு, அது அறிவுள்ள செயலாக தென்படாது. உடனே பிசாசானவன், இதுதான் சமயம் என்று அவர்கள் மனதில் கேள்விகளை போடுவான் - இருமன முள்ளவர்களாக மாறி விடுவார்கள்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், நான் கொடுத்து மற்றவர்களை ஆசீர்வதிக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார், என்று உணர்ந்திருக்கிறேன். அடிக்கடி, ஏதாவது துணிமணி அல்லது நகைகளை நான் கொடுக்கவேண்டியதாகும். சில நேரங்களில், இதுவரை நான் அணிந்து கூட இருக்கமாட்டேன். என்னுடைய புதிய, விலையுயர்ந்த ஆடையை கர்த்தர் கொடுக்க சொல்லுவார். இயற்கையாக யோசித்தால், அது எனக்கு அது ஒரு புத்தியுள்ள செயலாகத் தோன்றாது. ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு என்னுடைய மனதைத் திறந்து கொடுக்கும் போது, அது சரியான செயல் தான் என்ற உறுதி எனக்குள் வந்து விடும்.
இயற்கையாகவும், இயல்பாகவும் நாம் சிந்தித்து “குழம்புவதிலிருந்து” நம்மை விடுவிக்க, ஆவியானவர் எப்பொழுதும் காத்திருக்கிறார். யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கும் தேவனிடத்தில் கேளுங்கள். தீர்மானங்களை எடுக்க முடியாமல், இருமனதோடு தவிக்கும் உங்களை விடுதலையாக்குவார்.
அன்புள்ள பிதாவே, நான் கடந்த நாட்களில், குழம்பிப்போய் இருமனதோடு, பிசாசுக்கு இடம் கொடுத்திருந்தேன். தயவு செய்து எனக்கு மன்னியும். பிசாசின் குழப்பங்களை மேற்கொள்ளத்தக்க ஞானத்தை எனக்கு தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
Scripture
About this Plan

ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More