YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 44 OF 100

ஒரு அலைபாய்யும் மனது

“நான் வியப்படைகிறேன்,” என்று சொல்வது, களங்கமற்ற ஒரு உண்மையான சொல்லைப்போல் இருந்தாலும்; சில வேளைகளில் அந்த சொல், நாம் சரியான தீர்மானங்களை எடுக்காமல் தவிர்க்கிறோம் என்பதையும் குறிக்கும்.

ஒரு அலுவலகத்தின் பொறுப்பாளராக நீங்கள் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தினமும் இருபது பேராவது உங்களிடம் வந்து, முக்கியமான தீர்மானங்களுக்கு, முடிவான பதிலை உங்களிடம் எதிர்பார்க் கிறார்கள். உங்கள் பதில் தான் அந்த நிறுவனத்தில் இறுதியான பதில் என்று வைத்துக்கொள்ளுவோம். முடிவான, உறுதியான பதில்களை நீங்கள் கொடுக்காமல்; அதற்கு பதில், உங்கள் தாடையை தடவிக்கொண்டே, அங்கிருக்கும் ஜன்னல் வெளியே வெறித்த பார்வையோடு,“எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதே, என்ன செய்வதென்று திகைப்பாக இருக்கிறதே;” என்று சொன்னால், எப்படி இருக்கும்?

தீர்மானங்களை திடமாக செய்யாதவர், எத்தனை நாட்கள் அந்த பொறுப்புள்ள பதவியில் இருக்க முடியும்? உங்கள் தீர்மானம்தான், அந்த அலுவலகத்தின் நலனுக்கும், வெற்றிக்கும், பெரிய இடம் வகிக்கிறது என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம்? நீங்கள் “திகைப்பதற்கு” வழியில்லை - செயல்பட்டே ஆக வேண்டும்.

நம்முடைய விசுவாச வாழ்க்கையும் இப்படித்தான் என்பதை நம்மில் அநேகர் மறந்துவிடுகிறோம். அநேக வேளைகளிலே, எதை நாம் செய்ய வேண்டுமோ, அதைத் தெரிந்துகொள்ளாமல், அந்த சூழ்நிலையை எதிர்நோக்குவதை தவிர்த்து, “எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ‘திகைக்கிறேன்’,” என்று சொல்லுகிறோம்!

நான் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால்; நானும் இப்படி செய்ததால், அது எனக்கு நன்கு தெரியும். ஆரம்ப நாட்களில், என்னை யாராவது ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்கு அழைத்தார்களானால், “நான் என்ன உடையணிவது என்று தெரியாமல் ‘திகைக்கிறேன்’,” என்று சொல்லி, என் துணிகள் அடுக்கப்பட்டிருக்கும் அலமாரி முன், நிறைய நேரத்தை அநாவசியமாக வீணடிப்பேன். எந்த நிறம், எந்த மாதிரி உடை என்று பார்த்துக்கொண்டேயிருப்பேன். இது ஒரு சிறிய காரியமாக தென்படலாம். அது உண்மையிலேயே சிறிய காரியம் தான். பிரச்சினை என்னவென்றால், ஒவ்வொரு காரியத்திற்கும் நாம் இப்படிப்பட்ட “திகைப்புகளை” அனுமதித்தால், நம் வாழ்க்கையில் எதையும் செய்துமுடிக்க முடியாத நிலையில், “திகைத்து” நிற்போம். இதுவே, நம்முடைய இயல்பான மனநிலையாக மாறிவிடும்! நாம் தீர்மானம் செய்ய முடியாமல், “திகைக்கவைக்கும்” இந்நிலை, நம்மை முன்னேற முடியாமல் செய்து, தோல்விக்குள்ளாக நம்மைத் தள்ளிவிடும்.

இந்த அதிகாரத்தின் துவக்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும் வசனப் பகுதியில், கனி கொடுக்காத அத்திமரத்தைக் குறித்துப் பார்க்கிறோம். சீஷர்கள் நின்று, ஒருவேளை ஏன் இந்த மரம் கனி கொடுக்கவில்லை என்ற ஆராய்ச்சி நடத்தி, திகைத்து நின்றிருக்கலாம். ஒருவேளை சரியாக சூரிய வெளிச்சமும், தண்ணீரும் அதற்கு இல்லையோ என்று வியந்திருக்கலாம். கனியே கொடுக்காத மரத்தை, அதன் சொந்தக்காரன் ஏன் இன்னும் வெட்டிபோடவில்லை என்றும் ஆச்சரியப்பட்டிருக்கலாம். வியந்து, நேரத்தை வீணாக்குவது தேவையற்றதாக இருந்தது.

இயேசுவானவர், “பட்டுப்போ” என்று சொல்லி, அது பட்டுப் போனதும், வீணான சிந்தனைகளுக்கு இயேசு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த அத்திமரத்தின் நிகழ்ச்சியை, சீஷர்களுக்கு ஒரு உவமையாக வைத்து, அவர்கள் விசுவாசத்தில் வளருவதற்கு அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர்கள் உண்மையாகவே விசுவாசித்தால், அவர்கள் அவரிடம் எதைக்கேட்டாலும் அதை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர்களுக்கு புரியும்படி கூறினார்.

சில வேளைகளில் கர்த்தருடைய பிள்ளைகள் பெரிய காரியங்களை, தேவனிடத்தில் கேட்கவே தயங்குகிறார்கள். ஆனால், நாம் விசுவாசத் தோடு தைரியமாக அடியெடுத்து வைத்து, அவரிடம் கேட்கவேண்டும் என்று இயேசுவே நமக்கு அனுமதி வழங்கியிருக்கிறார். ஆனால், ஒரு சிலர், போய் நேரத்தை வீணடிக்கிறார்கள். கர்த்தர் மட்டும் எனக்கு ஒரு நல்ல வேலையை கொடுத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதில் வியக்கிறார்கள். இன்னும் பெரிய வீடு கொடுத்தால் எப்படி இருக்கும், என்ற நினைப்பே அவர்களை “திகைக்க” வைக்கிறது.

நாம், மனதில் காரியங்களை நினைத்து “திகைத்துக்” கொண்டிருப்பது, நேரத்தை வீணடிப்பதாகும். மனதில் நினைப்பதை, நாம் செயல்படுத்த வேண்டும். இது, திகைக்கும் மனதைக்குறித்து நான் கற்றுக்கொண்ட ஒன்றாகும். ஒரு விருந்துக்கு செல்வதற்கு, என்ன உடை அணிவது என்று நான் திகைத்து நிற்க வேண்டிய அவசியமில்லை. என் உடைகளை பார்த்து, உடனே தீர்மானிக்கிறேன். ஞானமாக தெரிந்துகொள்ள தேவன் எனக்கு திறைமையை கொடுத்திருக்கிறார். அதனால், நான் நேரத்தை வீணடிக்காமல், எதைச் செய்யவேண்டும் என்று தீர்மானிக்க முடிகிறது.

தீர்மானங்களை செய்ய முடியாமல் “திகைத்து” நிற்பது, நம் மனதில் அரண்களை உண்டாக்கும். அது நம்மை இன்னும் குழம்பின உணர்வுக்குள் கொண்டு செல்லும். மேலும், பாதுகாப்பற்றவராக, திறமையற்றவராகவும் மாற்றும். ஆனால், அது தேவனுடைய திட்டமல்ல. நாம் விசுவாசித்து, ஜெபித்து, பதிலை பெற்றுக்கொண்டு; இப்படிப்பட்ட மனநிலையை மேற்கொள்ளவேண்டும் என்றே தேவன் விரும்புகிறார்.

“நீங்கள் எந்தக் காரியத்தை குறித்தாகிலும் ‘திகைத்துக் கொண்டே’ ஜெபம்பண்ணுங்கள். அது உங்களுக்கு கிடைக்கும்,” என்று இயேசு இப்படியாக சொல்லவில்லை; என்பது நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று. அதற்கு பதிலாக, “ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளை பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும், என்று சொல்லுகிறேன்,” என்று அவர் சொன்னார்.


ஆண்டவரே, உம்முடைய திட்டத்தில் நான் முன்னேறி செல்ல முடியாமல் திகைத்து நிற்கும் மனநிலையை மேற்கொள்ள எனக்கு உதவிச்செய்யும். உம்முடைய நாமத்தினாலே, நான் விசுவாசத்தோடு தைரியமாக என் தேவைகளை கேட்டுப் பெற்றுக்கொள்ள, எனக்கு உதவி செய்யும். ஆமென்.

Scripture

Day 43Day 45

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More