YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 49 OF 100

கிறிஸ்துவேயன்றி வேறொன்றுமில்லை

பவுல் வாழ்ந்த நாட்களில், கொரிந்து அல்லது கிரேக்க பட்டணங்களுக்குச் சென்று; அங்கிருந்த ஞானிகளிடத்திலும், மேதைகளிடத்திலும் பேசினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அவர்களிடம் எல்லாவற்றையும் கற்று, அவர்கள் வாக்குவாதங்களையெல்லாம் அறிந்து இருந்தாலும், அவர்களுடைய எதிர்ப்புகளை ஜெயிக்க தேவனை நாடி ஜெபித்திருப்பேன்.

பவுல் என்ன செய்தார் என்று தெரியவில்லை. ஆனால், அவருடைய பதில் ஆச்சரியமாயிருக்கிறது. எதிர்ப் பேசினவர்களிடத்தில் புத்திக்கூர்மையுடனும், மனுஷீக ஆற்றலோடும் வாதாடாமல், முற்றிலும் எதிர்திசையிலே பவுல் சென்றார். மேலும் ஒரு வருடங்கள் கொரிந்து பட்டணத்திலேயே தங்கி, இன்னும் அநேகரை கிறிஸ்துவிடம் நடத்தினார். அதன் பின்பு, “இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன் (1 கொரி 2:2) என்று சொல்லுகிறார். அதுதான் ஆச்சரியமாயிருக்கிறது. எல்லா ஞானத்தோடும், திறமையோடும், கிரேக்கர்களிடத்தில் பேசி, அவர்களுடைய பிழைகளை எடுத்துரைக்க சாதுரியம் இருந்தாலும், பவுல் அப்படிச் செய்யாமல், ஆவியானவருக்கு இசைந்து கொடுத்து, தேவன் அவரை பயன்படுத்தி இன்னும் அநேகரை இரட்சிப்புக்குள் நடத்த தீர்மானித்தார்.

பல நூற்றாண்டுகளுக்கு பின், இப்போது, நான் அவருடைய அணுகு முறையைப் பாராட்டுகிறேன். நீண்ட நாட்களாக, நான் மனுஷீகமாக எல்லாவற்றிற்கும் விளக்கங்களைத் தேடி, காரணங்களை கண்டுபிடிக்க விரும்பினேன். ஆனால், அது பயனளிக்காதபோதெல்லாம், நான் மிகவும் சோர்ந்து போய்விடுவேன்.

நான் எப்போதும் துருதுருவென்று பதில்களைத் தேடி, ஆராய விரும்புவேன். அதன் பிறகு தேவன் என் வாழ்க்கையில் இடைபட ஆரம்பித்தார். என்னுடைய இந்த பழக்கமானது, தேவன் எனக்குத் தர விரும்புகிற பல ஆசீர்வாதங்களை நான் பெற்றுக்கொள்ளத் தடையாக இருக்கிறது என்று அவர் காண்பித்தார். “உனக்கு சரியான பகுத்தறிவு வேண்டும். நீ மாம்சீகமாக இப்படி யோசித்துப் பார்ப்பதை எல்லாம் விட வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

இது எனக்கு ஒரு நீண்ட போராட்டமாக இருந்தாலும், (கர்த்தருக்கு எல்லாம் தெரியும் என்று உணர்ந்து) இப்படி மாம்சத்தில் சகலத்தையும் ஆராய முயற்சிப்பதற்கு என்னை நானே அடிமைப்படுத்திக் கொண்டதை புரிந்துகொண்டு, அதை விட்டுவிட்டேன்.

ஆனால், இது எளிதாய் இருக்கவில்லை. போதை மருந்துகளுக்கும், குடிபழக்கத்திற்கும் மனிதர்கள் விலகும்போது உள்ளதைப் போல, நானும் உணர்ந்தேன். எதையோ இழந்தது போல, பயந்து போய், தனிமையை உணர்ந்தேன். இவ்வளவு காலமாக இப்படி மாம்சத்திலே எல்லாவற்றையும் ஆராய, என்னுடைய சொந்த முயற்சிகளையே நம்பி வாழ்ந்த நான்; இப்போது பவுலைப் போல, தேவனை சார்ந்து வாழத் தீர்மானம் செய்தேன்.

தேவனை சார்ந்து வாழ்வது என்றால், மிக எளிதாகவும் இயல்பாகவும் செய்துவிடலாம் என்று பலர் எண்ணுகின்றனர். எனக்கோ அப்படி இருக்கவில்லை. ஆனால் தேவனோ, இரக்கமும், பொறுமையும் உள்ளவராக என்னோடு இருந்தார்.“இன்னும் நான் விரும்பும் நிலைக்கு, நீ வந்து சேரவில்லை ஜாய்ஸ்; ஆனால், நீ முன்னேறி வருகிறாய். இது கஷ்டமாக இருப்பதன் காரணம், புதிய விதத்தில் வாழ நீ கற்று வருகிறாய்,” என்று என் காதுகளில் அவர் மெல்ல உச்சரிப்பது போன்ற உணர்வு.

நாம் வெற்றியுள்ளவர்களாக இருக்கவே தேவன் விரும்புகிறார், என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் அறிவேன். முன்பிருந்ததை விட, பெரிய அளவில் வெற்றியுள்ளவளாக நான் நடக்கிறேன் - இனியும் காரண காரியங்களை அறிந்துதான் செயல்படுவேன், என்று இருக்கமாட்டேன்.


பரலோக பிதாவே, எல்லா பதில்களும், காரணங்களும் தெரிந்தால்தான் செயல்படுவேன் என்று இருந்த என்னையும், அப்படி இருக்கும் மற்றவர்களையும் பொறுத்தருளும். சிறந்ததைத்தான் என் வாழ்க்கையில் எனக்கு தருவீர், என்று உம்மை அப்படியே விசுவாசிக்க எனக்கு இயேசுவின் நாமத்தில் உதவும். ஆமென்.

Day 48Day 50

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More