YouVersion Logo
Search Icon

கொலோசேயர் 4

4
1எஜமான்களே, உங்கள் அடிமைகளை நியாயமாகவும் சமமாகவும் நடத்துங்கள். ஏனெனில் பரலோகத்தில் உங்களுக்கும் ஒரு எஜமான் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
அறிவுறுத்தல்கள்
2விழிப்புள்ளவர்களாயும், நன்றி உள்ளவர்களாயும் தொடர்ந்து மன்றாடுங்கள். 3அதேசமயம், கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட மறைபொருளை நாங்கள் அறிவிக்கும்படி, நற்செய்தியை அறிவிக்கும் வழிகளை இறைவன் திறக்க வேண்டும் என்று எங்களுக்காகவும் மன்றாடுங்கள். இந்தப் பணிக்காகவே நான் சிறை வைக்கப்பட்டிருக்கிறேன். 4நான் அந்த மறைபொருளைத் தகுந்தபடி தெளிவாய் வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். எனவே அப்படியே செய்ய வேண்டும் என்பதற்காக மன்றாடுங்கள். 5விசுவாசிகள் அல்லாத வெளியாருடன் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுங்கள். எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 6உங்களது உரையாடல் எப்போதும் கனிவானதாயும் சுவையுள்ளதாயும்#4:6 சுவையுள்ளதாயும் – கிரேக்க மொழியில் உப்பு சேர்க்கப்பட்டது போன்று என்றுள்ளது. இருக்கட்டும். அப்போதுதான் அனைவருக்கும் தக்க பதிலைச் சொல்ல முடியும்.
இறுதி வாழ்த்துரை
7என்னைப் பற்றிய செய்தி எல்லாவற்றையும் என் அன்புச் சகோதரனாகிய தீகிக்கு உங்களுக்குச் சொல்வான். அவன் கர்த்தரின் உண்மையுள்ள ஊழியக்காரனாகவும், எனது சக வேலைக்காரனாகவும் இருக்கின்றான்.
8நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை உங்களுக்கு அறியத் தந்து, உங்களை உற்சாகப்படுத்தவே அவனை உங்களிடம் அனுப்புகிறேன். 9உங்களில் ஒருவனும், எங்கள் நம்பிக்கைக்குரிய அன்புள்ள சகோதரனுமான ஒநேசிமுவும் அவனுடன் வருகின்றான். அவர்கள் இங்கு நடப்பவை எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்வார்கள்.
10என்னுடன் சிறையில் இருக்கும் அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறான். அப்படியே பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரனான மாற்குவும் வாழ்த்துதல்களை அனுப்புகிறான். (அவனைக் குறித்து ஏற்கெனவே நீங்கள் அறிவுறுத்தல் பெற்றிருக்கிறீர்கள். அவன் உங்களிடம் வந்தால், அவனை ஏற்றுக்கொள்ளுங்கள்.)
11யுஸ்து என அழைக்கப்படும் யேசுவும் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறான். யூதர்களில்#4:11 யூதர்களில் – கிரேக்க மொழியில் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் என்றுள்ளது. இவர்கள் மட்டுமே இறைவனுடைய அரசின் வேலையில் எனது சக ஊழியர்களாக இருக்கின்றார்கள்; இவர்கள் எனக்கு ஆறுதலாகவும் இருந்து வருகின்றார்கள்.
12உங்களில் ஒருவனாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய ஊழியனாகவும் இருக்கின்ற எப்பாப்பிராத்து உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். நீங்கள் இறைவனுடைய சித்தம் முழுவதிலும் முதிர்ச்சியடைந்தவர்களும், முழு நிச்சயம் உடையவர்களுமாய் உறுதியாய் நிற்க வேண்டும் என்பதற்காக அவன் உங்களுக்காக எப்போதும் வருந்தி மன்றாடுகிறான். 13உங்களுக்காகவும் லவோதிக்கேயா மற்றும் எராப்போலியில் இருக்கின்றவர்களுக்காகவும் அவன் ஊக்கமாய் வேலை செய்கின்றான் என்பதற்கு நானே சாட்சி.
14எங்கள் அன்புக்குரிய வைத்தியன் லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள்.
15லவோதிக்கேயாவிலிருக்கின்ற சகோதரர்களுக்கும் நிம்பாவுக்கும் அவளுடைய வீட்டில் ஒன்றுகூடுகின்ற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.
16இந்தக் கடிதம் உங்களிடையே வாசிக்கப்பட்ட பின், லவோதிக்கேயாவிலிருக்கின்ற திருச்சபையிலும் இதை வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். அதேபோல, லவோதிக்கேயாவில் இருந்து வருகின்ற கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.
17“கர்த்தரிடம் நீ பெற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றும்படி பார்த்துக்கொள்” என்று அர்க்கிப்புவிடம் சொல்லுங்கள்.
18பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை என் கைப்பட எழுதுகிறேன். நான் சிறை வைக்கப்பட்டிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களுடனே இருப்பதாக. ஆமென்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in