அப்போது பரலோகத்திலே உரத்த சத்தமான ஒரு குரல் இவ்வாறு ஒலிப்பதை நான் கேட்டேன்:
“இப்போது, நமது இறைவனுடைய இரட்சிப்பும், வல்லமையும், அரசும்,
அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் வந்துவிட்டன.
ஏனெனில் இறைவனுக்கு முன்பாக, இரவும் பகலும் நம்முடைய சகோதரர்களை குற்றம் சாட்டுகின்றவன்,
கீழே வீசித் தள்ளப்பட்டுவிட்டான்.