அநியாயக்காரர்களுக்கு இறைவனுடைய அரசில் உரிமைப் பங்கு இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாற்றப்படாதிருங்கள். பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவர்களோ, சிலை வணக்கக்காரர்களோ, தகாத உறவில் ஈடுபடுகின்றவர்களோ, விலை ஆடவர்களோ, ஓரினச் சேர்க்கையாளர்களோ, அல்லது திருடரோ, பேராசைக்காரர்களோ, குடிவெறியரோ, பழிசொல்லித் தூற்றுவோரோ, ஏமாற்றுக்காரரோ இறைவனுடைய அரசில் சொத்துரிமை பெற மாட்டார்கள்.