ஆனால் இப்போது நான் உங்களுக்கு எழுதுகின்றதாவது, தன்னை ஒரு சகோதரன் என்று கூறிக்கொள்கின்றவன் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகின்றவனாகவோ, பேராசைக்காரனாகவோ, விக்கிரக வழிபாடு செய்கின்றவனாகவோ, பழிசொல்லித் தூற்றுகின்றவனாகவோ, குடிகாரனாகவோ, அல்லது ஏமாற்றுகின்றவனாகவோ இருந்தால், அப்படிப்பட்டவனோடு நீங்கள் கூடிப் பழகக் கூடாது. அப்படிப்பட்டவனுடன் சேர்ந்து உணவு உண்ணவும் கூடாது.