தெளிவாக சிந்திக்க போதுமான இடம் மாதிரி
ஓய்வு நாளைப் பற்றி தெரியவும் அதை அனுசரிக்கவும் நீங்கள் மத நம்பிக்கை உடையவராகக் கூட இருக்கத் தேவையில்லை - வாரத்தின் ஓய்வு நாள். நாம் அனைவருமே நெடுநேர தூக்கத்திலோ அல்லது தொடர் வேலையிலிருந்து விடுப்பு எடுத்தோ மந்தமான வாரஇறுதி நாளை ரசிப்போம். ஆனால் ஓய்வு நாளை வெறும் அமைதியான ஞாயிற்றுக்கிழமையாகக் கருதுவோமென்றால் முக்கிய அம்சத்தை தவற விடுவோம் - அதுவே மூச்சுவிடும் அறையாகும்.
யாத்திராகமத்தில் இன்றைய வேத வாசிப்பு பகுதியில் கர்த்தர் ஓய்வு நாளை நியமிக்கிறார். இங்கிருந்து சற்றே முன் உள்ள கதையை கவனிப்போம். இஸ்ரவேலர் எகிப்தில் 400 வருடங்கள் அடிமைகளாக தினந்தோறும் பகல்முழுவதும் வேலை செய்தார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு பாலைவனம் வழியே மேலும் 40 வருடங்கள் நடந்து சென்றனர். இங்கு தான் கர்த்தர் அவர்களுக்கு ஓய்வுநாள் பிரமாணத்தை ஏற்படுத்தினார் - வாரத்தில் ஒரு நாள் ஓய்வு
கர்த்தர் நூற்றுக்கணக்கான ஆண்டுகாலமாய் எந்நேரமும் உழைத்து இப்போது ஆயிரமாயிரம் ஜனங்களுக்கு பாலைவனத்தின் நடுவில் சாப்பாடு கொடுக்க முயற்சி செய்யும் நேரத்தில் அவர்களை ஓய்வு எடுக்கும்படி சொல்கிறார். இது அவர்களுக்கு முட்டாள்தனமாக தெரிந்திருக்கும்! அவர்கள் அன்று வேலை செய்யாவிட்டால் அன்று சாப்பாடு கிடையாது.
கர்த்தர் ஏதோ செய்யவிருந்தார். யாத்திராகமம் 31:13ல் ஓய்வுநாளை அனுசரிப்பதின் மூலம் இஸ்ரவேலர் "நான் தான் தேவன்" என்று அடையாளம் காட்டுகிறார்கள் என்று கர்த்தர் விளக்குகிறார். கர்த்தர் அவர்களிடமும் (நம்மிடமும்) சொல்வதென்னவென்றால் நீங்கள் என்னை நம்பலாமென்று உங்களுக்கு நிரூபிக்க விரும்புகிறேன். பசிக்குமோ என்று நீங்கள் பயப்படுவீர்களென்று நான் அறிவேன். ஆனால் வாரந்தோறும் என்னை நம்பலாமென்று நிரூபிக்க விரும்புகிறேன்.
மீதமுள்ள கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கர்த்தர் வாரந்தோறும் பசியைக்குறித்த அவர்களது பயத்தைப் போக்க காடைகளையும் மன்னாவையும் தந்து தினசரி போஷித்தார், அவர்களை வேலையிலிருந்து ஓய்ந்திருக்கச் சொன்ன நாளிலும் கூட.
நாம் ஓய்ந்திருக்க வேண்டுமென்ற கர்த்தருடைய கட்டளை என்பது அவரை நாம் நம்ப விடுக்கும் அழைப்பே. அந்த அழைப்பை நாம் நிராகரிப்பது நம் சிநேகிதனின் மனதை புண்படுத்துமென்று நாம் பயந்தால் அந்த நட்பை உறுதிப்படுத்த நாம் கர்த்தரை நம்பலாம். நம் வீடு சிறியதென்றோ, நம் கார் மிகப் பழையதாகிவிட்டதென்றோ, நம் ஆடைகள் மிக சாதாரணமானவை என்றோ நாம் பயந்தால் நமது மதிப்பு அவற்றில் பொதிந்து இல்லைஎன்று கர்த்தரை நம்பலாம். நாம் பற்களை கடித்துக் கொண்டு நம் எல்லை மீறி வழிதேடி அலைவதைப் பார்க்கிலும் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தலே மூச்சுவிடும் அறையை அடைவதாகும்.
இந்த திட்டத்தைப் பற்றி
எல்லாவற்றையுமே செய்ய வேண்டுமென்று முயற்சிக்கும் காரணத்தால், எந்த விஷயத்திலும் விருப்பம் இல்லாதது போல நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா? இந்த வாழ்க்கைப் பயணத்தில் விரும்பியவருடன் பற்பலவற்றை ஒரேநேரத்தில் செய்கிறோம். . .நீங்கள் திறமையாளர்தான். ஆனால் சோர்வடைந்துவிடுகிறீர்கள். அத்தகைய நேரத்தில் காற்றோட்டமான ஒரு அறை உங்களுக்கு சிறிது தேவைப்படும். ஒரு சாதாரணமான ஆனால் ஆச்சரியமான வரவேற்பின் மூலம், கர்த்தர் உங்களுடைய அதிவேகத்தை சமாதானம் நிறைந்த ஒன்றால் இறுதியாக மாற்றியமைக்க வழிவகை வழங்குகிறார். இந்த திட்டம் அதை எப்படியென காண்பிக்கும்.
More