தேடல்மாதிரி

The Quest

7 ல் 2 நாள்

தேவன் உங்கள் இருதயத்தை ஏற்கனவே அறிந்திருக்கிறார். உங்கள் நினைவுகளெல்லாம் அவருக்கு ஏற்கனவே தெரியும். நீங்கள் படித்து முடித்ததும், நீங்கள் விரும்பினால் உங்கள் குறிப்பேட்டைக் கிழித்து விடலாம் அல்லது எரித்து சாம்பலாக்கி விடலாம், ஆனால் அவ்வப்போது, உண்மையான நீங்கள் சர்வலோகத்தின் உண்மையான எஐமானோடு கூட இருக்கிறீர்கள். பதிலுக்கும் மேலாக ஏதோ ஒன்றை நீங்கள் விரும்புகிறீர்கள். வெளிப்பாட்டை நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் அதற்காகவே உண்டாக்கப் பட்டீர்கள். நானும் அப்படித்தான்.

பதில்களை ஏற்கனவே தேவன் அறிந்திருக்கும் போது ஏன் அவர் மனிதனிடம் கேள்விகளைக் கேட்க வேண்டும்? ஒருவேளை, ஒரு நாள் அவர் அதைக் குறித்து நிறைய விளக்கங்கள் அளிக்கலாம், ஆனால் திரும்பத் திரும்ப வேதம் இதையே சொல்லுகிறது: நம்மை உண்டாக்கினவரும், மீட்பரும், இராஜாவுமாகிய தேவன், நம்முடைய பலவீனங்கள், சந்தேகங்கள் மற்றும் தோல்விகளின் மத்தியிலும் கூட தம்முடைய விலைமதிப்பற்ற படைப்போடு இடைபட விரும்புகிறார். இடைபடுவது மட்டுமல்ல. அவர் இணைந்திருக்க விரும்புகிறார். இணைந்திருப்பது மட்டுமல்ல. அவர் நெருக்கமாயிருக்க விரும்புகிறார்.

உங்களோடு. நீங்கள் யாராயிருக்கும் படி விரும்புகிறீர்களோ அல்லது மற்றவர்களுக்கு முன்பதாக நீங்கள் உங்களை எப்படி பிரதிபலிக்கிறீர்களோ அப்படிப் பட்ட உங்களோடு அல்ல. உண்மையான உங்களோடு.

ஆதியாகமம் 1:26–2:17 மற்றும் 3:1-9 வசனங்களை வாசியுங்கள், தேவன் ஆதாமோடு நேரடியாகப் பேசும் வார்த்தைகளை உள்ளடக்கிய ஒவ்வொரு வசனத்தையும் கூர்ந்து கவனியுங்கள், வேண்டுமென்றால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். என்ன கேள்வியை தேவன் ஆதியாகமம் 3:9 இல் கேட்கிறார்?

இப்போழுது, ஆதாமுடைய இடத்தில் உங்களை வையுங்கள் தெய்வீக விசாரணை உங்கள் மீது வந்தமரட்டும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள் ஏதோ ஓரிடத்திற்குப் போக வேண்டியிருக்கிறது, ஆனால் நீங்கள் போகுமிடத்திற்கான எந்த ஒரு சரியான வழியும் நீங்கள் இப்பொழுது இருக்கும் இடத்திலிருந்தே தொடங்குகிறது. ஒரு நாளேட்டில், இப்பொழுது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எங்கே இருக்கிறீர்கள் என்பதை விவரித்து நேரடியாக தேவனுக்கு எழுதுங்கள். நீங்கள் ஓரளவு நல்ல இடத்தில் இருப்பீர்களானால், அதைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள். உங்கள் மேல் உண்மையான அக்கறையுள்ள மற்றும் உங்களோடு கூட மகிழக் கூடிய ஒருவரிடம் சொல்வது போல அதைக் குறிப்பிட்டு அவரிடம் சொல்லுங்கள். இன்னொரு விதத்தில், நீங்கள் மாற்றமேயில்லாத அல்லது துரதிர்ஷ்டமான, வேதனையுள்ள அல்லது தனித்து விடப் பட்ட இடத்தில் இருக்கலாம்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை முழுமையான பேச்சு சுதந்திரத்தோடு தேவனுக்கு விவரித்துச் சொல்லுங்கள். எல்லா விதத்திலும், நீங்கள் ஒரு அடைமொழியினால் விவரிக்க முடியாத மிகவும் நம்பகமான இடத்தில் இருக்கிறீர்கள். உங்கள் சிக்கல்களை அவரிடம் சொல்லுங்கள்.

உண்மை சொல்லப்பட வேண்டும், ஒருவேளை இதே கேள்வியை தேவனிடம் கேட்கும் படி நீங்கள் விரும்பலாம்: “கர்த்தாவே, நீர் எங்கே இருக்கிறீர்? சமீப காலமாக நீர் எங்கே இருந்தீர்?” அல்லது “எங்கே இருந்தீர் எப்பொழுது …?” ஒருவேளை இதற்கான பதிலை வேதாகம பூர்வ மற்றும் இறையியல் சார்ந்த முறைகளில் நீங்கள் அறிந்திருக்கலாம். வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களான அவர் உங்களை விட்டு விலகுவதும் இல்லை உங்களைக் கைவிடுவதும் இல்லை என்பதை உங்கள் மனது அறியும், ஆனால் உங்கள் இருதயம் தற்சமயம் அவரை எங்குமே கண்டுபிடிக்க முடியாதது போல் உணரும். அவர் எங்கே இருக்கிறாரென்றோ அல்லது, கடந்த காலத்தைக் குறித்ததானால், அவர் எங்கே இருந்தாரென்றோ நீங்கள் உண்மையாகவே அவரிடம் கேட்க முடியும்.

இன்றைய உங்கள் பதிவேட்டை சங்கீதம் 139:7-10 வசனங்களிலுள்ள, சங்கீதக்காரனுடைய அதே வார்த்தைகளைக் கொண்டோ அல்லது அவன் சொன்னவைகளை உங்களது சொந்த வார்த்தைகளில் எழுதியோ நிறைவு செய்யுங்கள்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

The Quest

இந்த 7- நாள் வாசிப்பு திட்டத்தின் மூலம், பெத் மோர் என்பவர் வேதத்தின் கேள்விகள் வாயிலாக நம்மை நன்கு அறிந்த நமது ஆண்டவரிடம் நெருங்க செய்வார். ஒரு வாக்கியத்தின் முடிவில் வளைந்த கேள்விக் குறியீடு ஆர்வம் மற்றும் சந்தேகத்தைக் கூட சிலசமயம் குறிக்கும். ஒரு கேள்வி என்பது பலவீனத்தில் அல்லது பாதிப்பில் இருந்து நெருக்கத்தை குறித்த அழைப்பாகும். அத்தகைய அழைப்பிலிருந்து வேதாகமும் விலகவில்லை. தேவனுடைய மக்கள் தங்கள் படைப்பாளரைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். அண்டசராசரத்தின் கர்த்தரும் தம்முடைய படைப்பைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதையும் நாம் காண்கிறோம். அழைப்பை ஏற்றுக்கொள்வது தேடலின் ஒரு சவால். வார்த்தைக்குள் தோண்டி எடுக்கவும், கர்த்தரின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், உங்கள் கேள்விகளை அவர் முன் கொண்டு வரவும் கற்றுக்கொள்ளுங்கள். வளைந்த நிறுத்தற் குறியீடு உங்களை தந்தையுடனான நெருக்கமான உறவுக்கு சுட்டிக்காட்டும் வரைபடமாக இருக்கட்டும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய பெத் மூர் மற்றும் லைஃப்வே பெண்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க:http://www.lifeway.com/thequest