தேடல்மாதிரி

The Quest

7 ல் 1 நாள்

இங்கு நாம் உலாவி நடந்து கொண்டிருக்கிறோம். எனவே யாரும் எந்தவொரு கேள்வியையும் கேட்காத வரை, முழுமையான உரையாடல் சுதந்திரத்திற்கான அடிப்படை விதிகள் அமைக்கப்பட்ட நீண்ட ஒரு பயணத்தில் ஒருவருடன் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். உங்கள் நாக்கு வறண்டு போகுமளவு பேசினாலும், தனிப்பட்ட கேள்விகள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. “நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” அல்லது “நீங்கள் பசியுடன் இருக்கிறீர்களா?” என்ற அடிப்படை கேள்விகள் கூட கிடையாது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் அறிக்கைகளின் பரிமாற்றம் சிறிது காலம் இருக்கும், ஆனால், விரைவில் அல்லது பின்னர், நீங்கள் இனி ஒருவருக்கொருவர் பேச மாட்டீர்கள். நீங்கள் ஒருவர் பேச ஒருவர் கேட்டுக்கொண்டிருப்பீர்கள். அது உரையாடல் அல்ல. அதுதான் வசைமாரி அல்லது பெயர் அளவில் ஆன ஒரு செய்கை உரையாடல். போதுமான வசைமாரிகளுக்கு பிறகு, கேட்பதில் சிறந்தவர் கூட கேட்பதை நிறுத்தி விடுகிறார்கள்.

வழக்கம் நம்மை சோர்வடையச் செய்து தூக்கத்தில் ஈடுபடுத்தாவிட்டால், கர்த்தருடன் நடப்பது நமது தேடல் ஆகவே இருந்திருக்கும். மேலும் ஒரு தேடலானது கேள்விகள் இல்லாமல் தேடலாகாது. பரஸ்பர விசாரணையின் கூறு கர்த்தருடனான உறவை விட வேறு கவர்ச்சிகரமானதல்ல. தொடங்குபவர்களைப் பொறுத்தவரை, அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கும்போது நாம் விரும்புவதைப் போல அவர் உரக்க பதிலளிப்பதில்லை அல்லது வானம் முழுவதும் எழுதுவதில்லை. எவ்வாறாயினும், வாழ்நாளில் நாம் உள்வாங்கக்கூடியதை விட அதிகமான பதில்களை அவர் சுருள் முழுவதும் எழுதியுள்ளார்.

நாங்கள் ஐந்து தெய்வீக கேள்விகளை நிறுவியுள்ளோம்.அவர் பாதையில் இருந்து விலகிப்போன அல்லது ஒரு முட்டு சந்திற்குள் சிக்கியது போல அல்லது களைந்து போன நீராவி போல அல்லது ஆர்வத்தை இழந்துவிட்ட அனுபவத்தில் இருக்கும் நாம் அதற்கு பதிலளிக்கத் துணிந்தோம், கர்த்தரோடு ஒரு நடைப்பயணத்தின் வாயிலாக அவற்றை மறுபரிசீலனை செய்யவும் மற்றும் மறுபடியும் ஆவியில் நம்மை கொளுந்துவிட்டு எரியச் செய்யும் வல்லமையும் இக்கேள்விகளுக்கு உண்டு. இந்த கேள்விகளை மனப்பாடம் செய்ய இன்று தொடங்குங்கள். அவற்றை உங்கள் கனவுகளிலும் பட்டியலிடும்படி, உங்கள் மூளையில் நன்கு பதிய செய்யுங்கள் முதல் இரண்டையும் பிதாவாகிய கர்த்தர் கேட்கிறார், கடைசி மூன்றையும் குமாரனாகிய இயேசு கேட்கிறார். சில எளிதில் நினைவில் கொள்வதற்காக சுருக்கமாகக் கூறப்படுகின்றன.

“நீங்கள் எங்கே?” (ஆதியாகமம் 3: 9)

“யார் அதை உங்களிடம் சொன்னார்கள்?” (ஆதியாகமம் 3:11)

“நீங்கள் எதை நாடுகிறீர்கள்?” (யோவான் 1:38)

“நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” (மத்தேயு 8:26)

“இன்னும் எவ்வளவு ...?” (லூக்கா 11:13)*

நீங்கள் முன்னோக்கி செல்லும் பாதையில் இன்னும் பல கேள்விகளை சந்தித்தாலும், இந்த ஐந்துக்கும் பதிலளிப்பது ஒரு பிரதிபலிப்பை மற்றும் நீங்கள் திரும்பிப் பார்த்து மதிப்பிடக் கூடிய ஒரு அடிப்படையையும் நிறுவும்.

உங்களின் அடுத்த சில நாட்கள் இந்த கேள்விகளே உங்களை ஆட்கொள்ளும். இங்கே விஷயம்.

இந்த பயணத்தின் விளைவுகள் உங்கள் நேர்மையை மீறாது. நீங்கள் உண்மையாக இருக்கும்வரை அவை ஆழமாகச் செல்லும். நேர்மையின்மையைத் தவிர வேறு எதுவும் எல்கை இல்லை.

இது கர்த்தருடன் நீங்கள் நடப்பதன் கணுக்காலை உடைக்கும்.

* CSB, KJV, NASB, and The Message வேதாகமங்கள் லூக்கா 11:13 ஐ ஒரு கேள்விக்குறியுடன் முடிக்கிறது, அதே நேரத்தில் ESV, NIV, and NKJV ஆகியவை ஒரு வலியுறுத்த ஒரு ஆச்சரியக்குறியை பயன்படுத்துகின்றன.

  

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Quest

இந்த 7- நாள் வாசிப்பு திட்டத்தின் மூலம், பெத் மோர் என்பவர் வேதத்தின் கேள்விகள் வாயிலாக நம்மை நன்கு அறிந்த நமது ஆண்டவரிடம் நெருங்க செய்வார். ஒரு வாக்கியத்தின் முடிவில் வளைந்த கேள்விக் குறியீடு ஆர்வம் மற்றும் சந்தேகத்தைக் கூட சிலசமயம் குறிக்கும். ஒரு கேள்வி என்பது பலவீனத்தில் அல்லது பாதிப்பில் இருந்து நெருக்கத்தை குறித்த அழைப்பாகும். அத்தகைய அழைப்பிலிருந்து வேதாகமும் விலகவில்லை. தேவனுடைய மக்கள் தங்கள் படைப்பாளரைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். அண்டசராசரத்தின் கர்த்தரும் தம்முடைய படைப்பைப் பற்றிய கேள்விகளை எழுப்புவதையும் நாம் காண்கிறோம். அழைப்பை ஏற்றுக்கொள்வது தேடலின் ஒரு சவால். வார்த்தைக்குள் தோண்டி எடுக்கவும், கர்த்தரின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், உங்கள் கேள்விகளை அவர் முன் கொண்டு வரவும் கற்றுக்கொள்ளுங்கள். வளைந்த நிறுத்தற் குறியீடு உங்களை தந்தையுடனான நெருக்கமான உறவுக்கு சுட்டிக்காட்டும் வரைபடமாக இருக்கட்டும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய பெத் மூர் மற்றும் லைஃப்வே பெண்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க:http://www.lifeway.com/thequest