இயேசு யார்?மாதிரி

Who Is Jesus?

5 ல் 3 நாள்

இயேசுவே ஒளி

நீங்கள் என்றாவது இருளில் பயந்திருக்கிறீர்களா? 

இப்பொழுதும் இரவு விளக்கு எரியச் செய்த பின்னர் தூங்குகிறீர்களா? 

நீங்கள் அதை ஒத்துக் கொள்ளலாம். இது பாதுகாப்பான ஒரு இடம். 

நம்முடைய முதுகை சிலிர்க்க செய்கிற தள்ளாட செய்கிற எதோ ஒன்று மையிருட்டில் இருக்கிறது. 

நீங்கள் இருளுக்கு பயப்படும்போது ஒளியை நேசிக்க கற்றுக் கொள்கிறீர்கள். 

ஒளி நமது சுற்றுப்புறத்தை ஒளிர செய்கிறது. நமது பாதத்தை அடுத்து எங்கே வைப்பது என வழிகாட்டுகிறது. ஒளி நாம் நேசிப்போரை ரசிக்கச் செய்கிறது. நமது வாழ்விற்கு ஒளி அவசியம் ஆவிக்குரிய ரீதியாகவும் மாம்சத்திற்குரிய ரீதியாகவும். 

வேதாகமத்தில்,ஒளி அறிவார்ந்த புரிதலுக்கும் மற்றும் நியாயமான தூய்மையையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருளில் நடப்பது என்பது தேவனுக்கு விரோதமான கழகத்தில் நடப்பதையும் அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டத்திற்கு விரோதமாக நடப்பதையும் குறிக்கிறது, ஆனால் ஒளியில் நடப்பது என்பது தேவன் யார் என்பதை அறிவது அவரை பின்பற்றுவது கற்றுக் கொள்வது. இதற்கு நமக்கு இயேசுவின் உதவி தேவை. 

நம் இப்பொழுது வாசித்த போதனையில், இயேசு தானே உலகத்தின் ஒளி என்று சொல்லுகிறார்! 

தேவனுடைய முகத்தை பிரதிபலிக்கிற ஒளி இயேசு மேலும் அவர் நமது பூரண வாழ்க்கைக்கான பாதைக்கு வழிகாட்டுகிறார். 

இயேசு மாத்திரம் இவ்வுலகத்தின் ஒளி அல்ல; நீங்களும் தான்! மத்தேயு 5:14ல் இயேசு தனது சீஷர்களிடம், “ நீங்கள் இவ்வுலகத்தின் ஒளியாய் இருக்கிறீர்கள்” என்று கூறுகிறார்.  

இயேசு குமாரனாகையால், அவரைப் பின்பற்றுகிறவர்கள் ஒரு கண்ணாடியை போல அவரைப் பிரதிபலிக்க வேண்டும். 

நாம் இயேசுவின் அன்பையும் சத்தியத்தையும் நமது பள்ளியில், நமது வீட்டில், நமது நட்பில் பிரதிபலிக்கும் போது, நமது உலகில் உள்ள இருளை பின்னுக்குத் தள்ளுகிறோம்; மக்கள் நமது ஒளியைக் கண்டு இயேசவைக் கண்டடைவார்கள் என்று நம்பிக்கை கொண்டு, இயேசுவின் நாமத்தில் நம்பிக்கையும் அன்பையும் கொண்டுவருகிறோம்!

ஒளியை மறைத்து மூடியோ வைக்கக் கூடாது.

ஒளி எல்லாரும் பார்க்கத்தக்கதாக திறந்த வெளியில் இருக்க வேண்டும். 

இருளை ஒழிப்பதே ஒளியின் நோக்கம். 

எனவே நீங்கள் அன்பான வார்த்தையினால் அல்லது நல்ல நடக்கையினால் எவ்வழியில் தேவனுடைய அன்பை உங்கள் பள்ளியில், உங்கள் குடும்பத்தில் கொண்டு வர இயலும் என யோசிங்கள். 

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Who Is Jesus?

இயேசுவே கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாய் இருக்கிறார். இந்த 5 நாள் திட்டம் இயேசு யார் என்பதை பற்றிய ஆழமான தோற்றத்தைக் காண்பிக்கிறது. இயேசு: பாவங்களை மன்னிக்கிறவர், பாவிகளின் சிநேகிதர், ஒளியாயிருக்கிறவர், அற்புதங்களை நடப்பிக்கிறவர், உயிர்த்தெழுந்த கர்த்தர்.

More

இத்திட்டத்தை வழங்குவோர் ஆல்பா மற்றும் ஆல்பா யூத் சீரிஸ். இத்திட்டம் வாழ்க்கையின் பெரிய கேள்விகளை ஆராயும் 13-பகுதிகளை உடையது.மேலும் அறிந்து கொள்ள: http://alpha.org/youth