இயேசு யார்?மாதிரி

Who Is Jesus?

5 ல் 1 நாள்

திமிர்வாதக்காரனின் கதை: இயேசுவே பாவங்களை மன்னிக்கிறவர்

ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்ட ஒரு கதாநாயகனாக உங்களால் இருக்க முடியுமானால், நீங்கள் எந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை விரும்புவீர்கள்? பதில் கூறுவதற்கு முன் மிகவும் யோசிக்க வேண்டிய கடினமான கேள்வி இது. 

பறக்கும் சக்தியா?

மறையும் சக்தியா?

மனதை கட்டுப்படுத்தும் சக்தியா?

ஒருவராலும் அழிக்க முடியாத சக்தியா? 

"இது எல்லாம்" என்னும் ஒரு வாய்ப்பு இருந்தால்? 

மேலோட்டமாக பார்த்தால், சூப்பர் ஹீரோக்கள் மீதான நமது ஈர்ப்பு, பொழுதுபோக்காகவும், அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களில் இருந்து தப்பிப்பதற்கான ஆசையாக இருக்கலாம். ஆனால் ஆழமாக நோக்கினால், உலகை அல்லது தனி மனிதனை காப்பதற்கான நமது உள்ளார்ந்த ஏக்கத்தினாலும், அசாதாரணமான, சாத்தியமில்லாத சக்திக்கு மேலிருக்கும் நமது ஆசையினாலும் நாம் சூப்பர் ஹீரோக்களால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். 

மார்வெல் படங்களைப் போல இயேசு அப்படிப்பட்ட சூப்பர் ஹீரோ அல்ல, ஆனால் நற்செய்தி நூல்களை வாசித்துப் பார்த்தால் அசாதாரணமான சக்தி இயேசுவுக்கு இருந்தது, பிசாசுகளை விரட்டுதல், வியாதிக்காரர்களை சுகமாக்குதல் போன்றவை. இதனால் இயேசு பெருங்கூட்டத்தை ஈர்த்தார், அவருடைய சக்தியை பற்றி பேச்சுகள் காட்டுத்தீ போல பரவியது. 

இக்கதையில் நான்கு மனிதர் இயேசுவின் சக்தியைப் பற்றி கேள்விப்பட்டனர், அவரை காண்பதற்கான முயற்சி எடுத்தனர். மிகவும் பாதிக்கப்பட்ட அவர்களது நண்பனை இயேசுவிடம் காட்ட வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தனர், ஆனால் அங்கே பெருங்கூட்ட மக்கள் மதில் சுவராக இருந்தனர்.

“‭‭ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.” (வ. 4). 

இங்கே சற்று நிதானிப்போம்.

அந்த நான்கு பேரும் ஒருவருடைய வீட்டையே கலைத்தனர்!

நல்ல வேலையாக இயேசு அதனை பெரிதுபடுத்தாமல், அந்த திமிர்வாதக்காரனை நோக்கி, “ மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்று சொல்லி அவனது கால்களை சுகமாக்கினார். குழுமியிருந்த கூட்டம் ஆச்சரியத்தில் மூழ்கியது, ஆனால் மத தலைவர்களோ, “ தேவனே அன்றி வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?”  என்னும் கேள்வியுடன் இருந்தனர்.

எல்லா பாவங்களும் புண்படுத்தப்பட்டவர் யாரோ அவரே எல்லா பாவங்களையும் மன்னிக்க முடியும் — அதாவது, தேவன் தாமே பாவங்களை மன்னிக்க முடியும். 

மறுபடியும் இச்சம்பவம் நமக்கு இயேசுவினுடைய அடையாளத்தை பற்றி ஒரு சிறு குறிப்புக் கொடுக்கிறது. இங்கே எந்த தயக்கமும் இன்றி இயேசு கடவுளுடைய இடத்தில் இருந்து பேசுகிறார், செயல்படுகிறார். இயேசு தனது தெய்வீக அதிகாரத்தை நிரூபிக்கத்தக்கதாக அற்புத அடையாளங்கள் மூலமாக ஆதாரங்களை வைத்தார். வேறுவிதமாக சொன்னால, இச்சம்பவம் இயேசுவே தெய்வம் என்று நமக்கு சொல்கிறது! 

நாம் இச்சம்பவத்தில் வரும் மனிதனைப் போல உடல்ரீதியாக முடக்கப்படாமல் இருக்கலாம். 

ஆனால் நாம் அனைவருமே தவறுகள் புரிந்திருக்கிறோம், அவமானத்தால், பயத்தால், தகுயின்மையால் முடக்கப்பட்டதைப் போல உணர்கிறோம். நமது கால்கள் நன்றாக இயங்கலாம், ஆனால் நமது வாழ்க்கை முடக்கப்பட்டதாகத் தோன்றுகிறது ஏனெனில் நமது பிரச்சனைகள் உடலில் அல்ல ஆவியில். 

நமது பாதுகாப்பின்மை எனும் உணர்வுக்குள் நுழைந்து நம்மை முழுமைப்படுத்தும் அந்த தேவனுடைய சுகமாக்கும் வல்லமையை அனுபவிக்க — நமது ஆழமான தேவை மன்னிக்கப்படுதலும் படைத்தவரோடு சமரசம் ஆகுதலும்.

சினிமாவில் வரும் கதாநாயகன் அல்ல இயேசு. 

இயேசு உண்மையான நாயகன். 

மேலும் நாம் இயேசுவண்டை கிட்டிச் சேரும்போது அழகான காரியங்கள் நடக்கின்றன: நமது சரீரம் நலமடைகிறது, மனம் சுகமடைகிறது, பயங்கள் நின்று போகிறது, நம்பிக்கை பிறக்கிறது, அவமானங்கள் நீக்கப்படுகிறது fears. 

எனவே, நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு, அவைகளை மன்னிக்கவும் நம்மை விடுதலையாக்கவும் இயேசுவிற்கு இடம் கொடுக்கலாமே? அதற்கும் மேல், இவை எல்லாவற்றையும் இயேசு நமது நண்பர்களுக்கும் செய்வார் என விசுவாசிக்கிறோமா? அப்படியானால், இயேசுவை நமது நண்பர்களிடம் அறிமுகப்படுத்த எதையும் செய்யலாமே? 

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Who Is Jesus?

இயேசுவே கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாய் இருக்கிறார். இந்த 5 நாள் திட்டம் இயேசு யார் என்பதை பற்றிய ஆழமான தோற்றத்தைக் காண்பிக்கிறது. இயேசு: பாவங்களை மன்னிக்கிறவர், பாவிகளின் சிநேகிதர், ஒளியாயிருக்கிறவர், அற்புதங்களை நடப்பிக்கிறவர், உயிர்த்தெழுந்த கர்த்தர்.

More

இத்திட்டத்தை வழங்குவோர் ஆல்பா மற்றும் ஆல்பா யூத் சீரிஸ். இத்திட்டம் வாழ்க்கையின் பெரிய கேள்விகளை ஆராயும் 13-பகுதிகளை உடையது.மேலும் அறிந்து கொள்ள: http://alpha.org/youth