நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் ஓய்வுமாதிரி
இளைப்பாறுதல்
நாம் கடந்த வாரங்களில் பார்த்ததுபோல, விசுவாசிப்பதென்பது கடினமாக இருந்தாலும் முடிவுகளை கொண்டுவருவது நாம் அல்ல தேவன் தான் என்று புரிந்துகொள்ளும் எளிய கிரியையாக இருக்கிறது. முக்கியமான முதல் படியை நாம் எடுத்துவிட்டால், நாம் சலசலப்பை உண்டாக்கி நம்முடைய அழைப்பை நிறைவேற்ற தேவன் தந்த தாலந்துகளை உபயோகிக்கலாம். ஆனால் நாம் எப்படி விசுவாசிக்கவும்மற்றும் சலசலப்பையும் உண்டாக்குகிறோம் என்று அறிந்துகொள்வது? சலசலப்பை உண்டாக்குவதை எளிதில் கண்டுபிடிக்கலாம். அது நம் மின்னஞ்சல் பெட்டிகளிலும், நாம் செய்யவேண்டும் என்று எழுதி வைக்கும் பட்டியல்களிலும் மற்றும் நம்முடைய குழப்பமான மண்துகளிலும் இருக்கும். ஆனால் முடிவுகளை கொண்டுவர நாம் எப்படி உண்மையில் தேவனை விசுவாசிக்கிறோமா அல்லாது நம்மை நாமே விசுவாசிக்கிறோமா என்று கண்டுகொள்வது? உண்மையில் சொன்னால் அதற்க்கு சிறந்த குறிப்பு நாம் இளைப்பாறுதலில் இருக்கிறோமா இல்லையா என்பதுதான்.
இளைப்பாறுதல் தான் நாம் எல்லாரும் ஏங்கும் ஒரு காரியம்.வெறுமனே அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுப்பது மாத்திரம் இளைப்பாறுதல் அல்ல. வேலைக்கும் வீட்டிற்கும் வித்தியாசம் குறைத்துக்கொண்டு வரும் வேளையில், தொடர்ச்சியான வேலைபளுவிலிருந்து நம்மை பிரித்துக்கொள்வது முடியாத்தாக் காரியமாக தோன்றலாம். வீட்டில் இருக்கும்போதும் நாம் மின்னஞ்சல், நாள்குறிப்பு, இன்ஸ்டாகிராம் போன்றவற்றை சரிப்பார்க்கிறோம். நாம் எப்போதும் இயங்கிக்கொண்டேயிருக்கிறோம். நாம் இளைப்பாறுதலற்று இருக்கிறோம்.
நாம் வாஞ்சையாக ஏங்கும் இளைப்பாறுதலை எப்படி பெற்றுக்கொள்வது? பரிசுத்த ஆகஸ்டின் அதற்கு பதில் அளிக்கிறார், "உம்மில் இளைப்பாறுதல் பெரும் மட்டும், எங்கள் இருதயங்களை இளைப்பாறுதலற்று இருக்கின்றன." நாம் தேவனின் மாத்திரம் இளைப்பாறும் மட்டும், நாம் இளைப்பாறுதலின்றி இருப்போம். இதற்க்கு அர்த்தமென்னவென்றால் நாம் நிச்சயம் சலசலப்பை உண்டாக்க வேண்டும், ஆனால் அவருடைய மக்களுக்கு சரித்திரம் முழுவதும் உண்மையுள்ளவரான தேவனை நாம் முதலாவது விசுவாசிக்க வேண்டும். நாம் தேவனுடைய சுபாவத்தில் விசுவாசித்து, அவர் கொடுத்த தாலந்துகளை சரியாக உபயோகித்தால், நாம் முடிவு அவர் கையில் இருக்கிறது என்றும் அவர் ஆட்சியில் உள்ளாரென்றும் அனைத்தையும் நம் நன்மைக்காக செய்வார் என்றும் இளைப்பாறலாம். நீதிமொழிகள் 16:33-இல் சாலொமோன் சொன்னதுபோல, "சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்."
இதுவே மனரீதியான, ஆவிக்குரிய, உண்மையான இளைப்பாறுதலுக்கு ஒரே வழியாக இருக்கிறது, அது ஓய்வுநாளைக்குறித்து தேவன் சொன்ன காரியத்திற்கு ஒப்புக்கொடுக்குப்பதில் துவங்குகின்றது. பாஸ்டோர் தீமோத்தேயு கெல்லர் சொல்லும்போது, "ஓய்வுநாளை ஒரு விசுவாச கிரியையாக நாம் பார்க்க வேண்டும். தேவன் கிரியை செய்கிறார், இளைப்பாறவும் செய்கிறார் என்பதை நினைவுப்படுத்தவே ஓய்வுநாளை அமைத்திருக்கிறார். ஓய்வுநாளை கடைப்பிடிப்பது நீ உலகத்தை நடத்துவதில்லை, உன் குடும்பத்திற்கு ஏற்படுகளை செய்வதில்லை, உன் வேலை திட்டங்களை நடத்துவது இல்லை என்று உணர ஒரு ஒழுக்கமான விசுவாசம் நிறைந்த கிரியையாக இருக்கிறது.”
விசுவாசம் மற்றும் சலசலப்பை உண்டாக்குவதன் இடையில் சமநிலையை கொண்டிருப்பது ஏன் முக்கியம்? ஏனென்றால் முடிவில் நாம் தேவனை விசுவாசிக்காமல் சலசலப்பை மாத்திரம் உண்டாக்குவோமென்றால், நாம் தேவனைப் போல் பாவிக்க முயன்று அவருடைய மகிமையை திருடப்பார்ப்போம், அது இரண்டுமே இளைப்பாறுதலற்ற நிலையைத்தான் உருவாக்கும். கிறிஸ்துவனே திடன்கொள். இந்த வேதாகம கட்டளைகள் ஒன்றிர்க்குஒன்று முரணப்பட்டவைகளல்ல. நீ உன் தேவனை விசுவாசிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கின்றாய். மற்றும் கடினமாக வேலைசெய். நாம் நம்மை அழைத்தவருடன் சரியான உறவிலிருக்கிறோம் என்று அறிந்து இளைப்பாறலாம்.
இந்த வாசிப்பு திட்டத்தை நீங்கள் விரும்பினால், என்னுடைய வாராந்திர தியாகங்களையும் நீங்கள் விரும்புவீர்கள், அது உங்கள் வேலைக்கு சுவிசேஷத்தை ஆழமாக இணைக்க உதவும். இங்கு இலவசமாக இணையுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கடினமாக உழைக்க நம்முடைய வேதாகமம் கற்றுக் கொடுக்கிறது, இருப்பினும் கர்த்தர் சொல்லுகிறார் -நாம் அல்ல- கிரியைகளின் பலனைத் தருபவர் கர்த்தர் ஒருவரே என்பதாக. இந்த நான்காவது நாளின் திட்டத்தில், ஒரு கிறிஸ்தவராக, நம்பிக்கைக்கும் தடுமாற்றத்துக்கும் நடுவிலிருக்கும் பதற்றத்தை விளக்கி உண்மையான ஓய்வு நாட்களை ஆசரிக்க நாம் கற்றுக் கொள்ளபோகிறோம்.
More