நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் ஓய்வுமாதிரி

கடின உழைப்பு
கடந்த கடந்த இரண்டு நாட்களாக நாம் கிறிஸ்தவர்களாக தேவனை விசுவாசிப்பதிலும் கடினமாக உழைப்பதன் நடுவில் நம்முடைய காரியங்களை நடப்பிக்க எவ்வாறு சமநிலையை பெறவேண்டும் என்று தியானித்து வருகிறோம். நாம் நேற்று பார்த்ததுபோல், சாலொமோன் நம்முடைய வேலையை தேவனிடம் ஒப்புக்கொடுப்பதிலிருந்து இந்த தலைப்பை தொடர்ச்சியாக செய்ய ஒரு வரிசையை காட்டுகிறார் (நீதிமொழிகள் 16:3). அதே அதிகாரத்தின் ஒன்பதாவது வசனத்தில், சாலொமோன் நம்மை கடினமாக உழைக்க உற்சாகப்படுத்துகிறார், " மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்."
ஆம். தேவன் அவரை விசுவாசிக்கும்படியாக நம்மை அழைத்திருக்கிறார், ஆனால் நாமே யோசித்து கிரியை செய்ய கிருபையாக மனதையும் நமக்கு கொடுத்திருக்கிறார். நாம் தேவனிடம் நம்முடைய வழிகளை ஒப்புக்கொடுத்தவுடன், நாம் கடினமாக உழைக்கும் படி அழைக்கப்படுகிறோம், மனப்பூர்வமாய்ச் செய்ய அழைக்கப்படுகிறோம் (கொலோசெயர் 3:24).
அநேக வேளைகளில் கிறிஸ்துவர்களாக நாம் விசுவாசிப்பதிலோ உழைப்பதிலோ எதோ ஒன்றில் மாத்திரம் அதிக கவணம் செலுத்துகிறோம். சில கிறிஸ்தவர்கள் வேதகமத்திற்கு எதிரான சோம்பேறித்தனத்திற்கு "தேவனில் காத்திருப்பது" என்ற பதத்தை உபயோகிக்கிறார்கள், சிலர் சரீரப்பிரகாரமாக, ஆவிக்குரியரீதியாக சுகவீனமடையுமட்டும் மும்முரமாய் இருப்பார்கள். நீதிமொழிகள் 16:9-இன் அழகு என்னவென்றால் இந்த இரண்டு சத்தியத்திற்கும் இடையே உள்ள சமநிலையை புரிந்து நம்மை அது ஆசீர்வதிக்கிறது. ஆம் "நம்முடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்" என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும், அதே நேரத்தில் நம்முடைய "வழியை யோசிக்கவும் வேண்டும்", அதை வடிவமைத்து, கட்டி, பாதுகாத்து, நிரம்பூசி, எழுதி, விளம்பரம் செய்து, விற்கவேண்டும்.
நம்முடைய அயலாகத்தானை நேசித்து இந்த உலகை நேசிப்பதற்கு நம்முடைய வேலைதான் முக்கிய வழி. ஏதேன் தோட்டத்தில் மனிதன் வீழ்ந்ததற்கு முன்னமே உழைப்பு இந்த உலகில் இருந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தேவனுடைய சுபாவத்தையும் அன்பையும் வெளிக்காட்ட தேவனால் அமைக்கப்பட்ட நல்ல காரியம்தான் வேலை. அதனால், நம்மை வேலை செய்ய தூண்டும் வேலைக்கான குறிக்கோள் நல்லதுதான். ஆனால் நாம் திட்டத்தின் கடைசி நாளான நாளை பார்க்கவிருப்பதுபோல் உழைப்போடு விசுவாசம் இருந்தால் தான் நாம் உண்மையான இளைப்பாறுதலை பெறமுடியும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கடினமாக உழைக்க நம்முடைய வேதாகமம் கற்றுக் கொடுக்கிறது, இருப்பினும் கர்த்தர் சொல்லுகிறார் -நாம் அல்ல- கிரியைகளின் பலனைத் தருபவர் கர்த்தர் ஒருவரே என்பதாக. இந்த நான்காவது நாளின் திட்டத்தில், ஒரு கிறிஸ்தவராக, நம்பிக்கைக்கும் தடுமாற்றத்துக்கும் நடுவிலிருக்கும் பதற்றத்தை விளக்கி உண்மையான ஓய்வு நாட்களை ஆசரிக்க நாம் கற்றுக் கொள்ளபோகிறோம்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

பரிசுத்த யுத்தம்: கடின உழைப்பை தழுவுங்கள், நன்கு-ஓய்வு கொள்ளுங்கள்

தேவன் + இலக்குகள்: ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை எவ்வாறு அமைப்பது

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

உங்கள் வேலைக்கு அர்த்தம் கொடுங்கள்

தீர்க்கமான பிராத்தனைகள்

அமைதியின்மை

உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் திட்டம்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்
