கோபத்தை மேற்கொள்வது எப்படி?மாதிரி

கோபத்தை மேற்கொள்வது எப்படி?

7 ல் 2 நாள்

கோபத்தை உனக்குள் வேரூன்ற விடாதே!

கோபம் என்பது மனுஷனின் உணர்வு, ஆண்டவர் அதை ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்படுத்துவதில்லை. கோபம் மனிதனுக்கு வரும் என்பதை தேவன் புரிந்துகொள்கிறார். நீ ஒரு சாதாரண மனிதன்தான், சூப்பர் ஹீரோ அல்ல! கோபப்படுவது பாவம் அல்ல. கர்த்தர்தாமே சில சமயங்களில் கோபப்படுகிறார். (வேதாகமத்தில் ரோமர் 1:18 மற்றும் எரேமியா 10:10ஐ வாசித்துப் பார்க்கவும்)

இருப்பினும், கோபத்தைப் பற்றிக்கொள்ள வேண்டாம் என்று வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது… "நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது" வேதாகமத்தில் (எபேசியர் 4:26ஐ வாசித்துப் பார்க்கவும்)

எனவே, இந்த உணர்வை, இந்த உணர்ச்சியை நீண்ட நேரத்திற்குப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டாம் என்று ஆண்டவர் உன்னை ஊக்குவிக்கிறார். நீ விட்டுவிட மறுக்கும் கோபமானது மனக்கசப்பாகவும், கசப்பாகவும், மன்னிக்க இயலாமையாகவும் மாறும். அது பின்நாளில் உன் ஆத்துமாவுக்கு ஆபத்தாக மாறிவிடும்.

இன்றைக்கு, இதோ உனக்கு சில அறிவுரைகளை வழங்குகிறேன் ... உனக்கு கோபம் வரும்போது, உடனடியாக நிலைமையை ஆண்டவருடைய கரங்களில் கொடுத்துவிடு. உன் கோபம் அடுத்த நாள் வரை நீடிக்காதபடிக்கு, உன் இருதயத்தின் மீது அவரது கரத்தை வைத்து, கோபத்தின் இந்தக் காலகட்டத்தை எவ்வளவு விரைவாக கடக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கடக்க உதவுமாறு அவரிடம் கேள்.

ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக!

நீ ஒரு அதிசயம்!

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

கோபத்தை மேற்கொள்வது எப்படி?

கோபம் என்பது உனக்குள் இருக்கும் மிகவும் வலிமையான ஒரு உணர்ச்சி, அதை உன் வாழ்வில் அனுமதித்தால், அது நம்மை குருடாகவும் செவிடாகவும் மாற்றிவிடும். சில நேரங்களில் ஏன் கோபப்படுகிறாய் என்று தெரியாமலேயே நீ கோபப்படுகிறாய். மறைந்திருக்கும் இந்தக் கோபம் எங்கிருந்து வருகிறது? கோபம் ஒரு திருடன். உனது சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நேரத்தையும் அவன் திருடிவிடுவான். உன் வாழ்விற்கு விஷமாக மாறும் இந்தத் தீங்கிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதையும் கோபத்தை மேற்கொண்டு நம் அன்றாட வாழ்க்கையில் சமாதானத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்பதை வேத வசனங்களின் வெளிச்சத்தில் நாம் தியானிக்கலாம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamilovercomeanger