அர்ப்பணிப்புமாதிரி
இயேசுவிடம் அர்ப்பணிப்பு
இயேசுவிடம் நாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புதான் மற்ற காரியங்களில் நாம்
கொள்ளும் அர்ப்பணிப்பிற்கு ஆதாரமாக இருக்கிறது.
அவருக்கு அர்ப்பணிப்பதாக நாம் தீர்மானிக்கிறோம், அதற்கு பதிலாக அவரும்
நம்முடைய மற்ற அர்ப்பணிப்புகளை நிறைவேற்றும் பலனை அருள தம்மை
அர்ப்பணிக்கிறார்.
இருதயம், ஆத்துமா, மனம், பலம் என நம் ஜீவனின் ஒவ்வொரு நாடியுடனும்
முழுமையாக அவரை நேசிக்க அழைக்கப்படுகிறோம் – அப்படிச் செய்வதற்கான பலன்
நமக்குக் கிடைக்கிறது, ஏனென்றால் அவர் நம்மீது முதலில் அன்புகூர்ந்தாரே.
நம்மீதான அவருடைய அன்பை அறிந்துகொள்வதால் அதற்குக் கைம்மாறாக அவர்
மீது அன்புகூர அர்ப்பணிப்பது சுலபமாகிறது. ஏனென்றால் அவர் இயல்பாகவே
அன்புக்குப் பாத்திரராக இருக்கிறார்.
இயேசுவிடம் கொண்ட அர்ப்பணிப்பில் நிலைத்திருக்க, நம் வாழ்க்கையின் எல்லா
தருணங்களையும் மனமுவந்து அவரிடம் ஒப்புவிக்க வேண்டும். நம்முடைய நாட்களின்
எல்லா அம்சங்களிலும் முழுமனதுடன் அவரை சேர்த்துக்கொண்டு, அவருடைய
பிரசன்னத்தை எப்போதும் உணர்ந்தவர்களாக, எப்போதும் அவரோடிருக்க
முன்வருவோம். அதற்காகவே அவர் ஏங்குகிறார்.
அர்ப்பணிப்புக்கு பல்வேறு நிலைகள் இல்லை; அதை ஒரேடியாக முழுமனதுடன்
செய்ய வேண்டும்; நம்மை முழுவதுமாக கொடுத்துவிட வேண்டும். இதில் உண்மை
என்னவென்றால், தேவன் தம்மை முழுவதுமாக நமக்கு அர்ப்பணித்திருக்கிறார்
என்பதே. அவர் நமக்கு விரோதமாக அல்ல, நம் சார்பில் இருக்கிறார். அவர் நம்மை
விட்டு விலகுவதே இல்லை என்று வாக்குப்பண்ணி இருக்கிறார்; அவர் நம்மோடு
தங்கியிருக்கவே விரும்புகிறார். அவருக்கு நம்மீது விருப்பம் அதிகம், மற்றும் அவருக்கு
நாம் தேவை.
அண்டசராசரத்தின் சிருஷ்டிகரும், ராஜாதி ராஜாவுமானவர் நம்மோடு கூட
உறவுகொள்ள விரும்புகிறார் என்பது திகைப்பூட்டும் அளவிற்கு அழகாக இருக்கிறது.
அதன் ஆழத்தை நம்மால் அறிய முடியாது, அது விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பரிசு,
ஆனாலும் சிலசமயங்களில் நாம் அதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.
அவர் முதலாவது நம்மைக் கண்டு, தம்மையே முழுமையாகக் கொடுத்ததோடு, மற்ற
எல்லாவற்றையும் தாராளமாக அருளிச் செய்திருப்பதால், எல்லாவற்றிற்கும் மேலாக
அவரைத் தேடுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நம்மை முற்றிலுமாக அவருக்குக் கொடுத்து, அவரை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள
நம்மை அர்ப்பணிப்போமா?
அது மிக அழகானதொரு பரிமாற்றம், ஒருவர் செய்யக்கூடிய மிக ஆழமான
அர்ப்பணிப்பு அதுவே. ஏனென்றால் இயேசுவுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது,
அவரை முழுமையாகப் பெற்றுக்கொள்வதான ஒப்பற்ற மற்றும் சகலத்தையும்
உள்ளடக்கிய ஒரு பரிசைப் பெறுகிறோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
“ஒரு காரணத்திற்காக, ஒரு செயலுக்காக அல்லது ஒரு உறவிற்காக நம்மையே ஒப்புவிக்கும் நிலை அல்லது தன்மை” என்பது அர்ப்பணிப்பின் அகராதி அர்த்தம். கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் அர்ப்பணிப்புடன் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அர்ப்பணிப்பு மிகவும் சக்தி வாய்ந்தது, அது தேவனோடுள்ள நம் வாழ்க்கையை விடாமுயற்சியுடனும், பொறுமையுடனும், செழிப்புடனும் வாழ உந்துதலாக இருக்கிறது.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Zeroக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.zerocon.in/