அர்ப்பணிப்புமாதிரி

அர்ப்பணிப்பு

3 ல் 2 நாள்

உண்மையுள்ள உக்கிராணத்துவத்தில் அர்ப்பணிப்பு

நம்முடைய பரம பிதா நம்மிடம் ஒப்புவித்திருக்கும் வரங்கள், தாலந்துகள் மற்றும்

பொருளாதாரங்களுக்கு கவனமும், கருத்தும் கொண்ட உக்கிராணக்காரராக இருப்பது

நம் கடமை.

உண்மையுள்ள உக்கிராணத்துவத்திற்கு அர்ப்பணிப்பது என்பது, நம் நேரம்,

திறமைகள், பொருளாதாரம் ஆகியவற்றை ராஜாதி ராஜாவைக் கனம் பண்ணவும்,

அவரது ராஜ்ய மேன்மைக்காகவும் திறம்படப் பயன்படுத்துவதாகும்.

உக்கிராணத்துவத்தைப் பற்றிய ஆலோசனைகளை வேதம் மீண்டும் மீண்டும்

கொடுக்கிறது. இயேசுவும் உண்மையும் உத்தமமுமான உக்கிராணத்துவத்தின்

முக்கியத்துவத்தைப் பற்றிய உவமைகளைச் சொல்லியிருக்கிறார் (மத்தேயு 25:14-30).

ராஜாதி ராஜாவின் பிள்ளைகளாகிய நாம் நம்முடைய தனித்தன்மையுள்ள

தாலந்துகளையும் திறமைகளையும் பயன்படுத்தி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு

பகுதியிலும் அவரை உயர்த்தி, மகிமைப்படுத்த அழைக்கப்படுகிறோம்.

நம் வேலையில் ஜாக்கிரதையாக இருந்து, அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் (1

பேதுரு 4:10, கொலோசெயர் 3:23, நீதிமொழிகள் 3:27).

மேலும், நம்முடைய உடைமைகள் அனைத்தும் தேவனுக்குச் சொந்தமானவை

என்பதை உணர்ந்து, பொருளாதாரத்தைக் கையாள்வதிலும், தேவையுள்ளவர்களுக்கு

தாராளமாகக் கொடுப்பதிலும் உண்மையுள்ளவர்களாக இருக்கும்படி

அழைக்கப்படுகிறோம்.

உண்மையுள்ள உக்கிராணத்துவத்திற்கான நம் அர்ப்பணிப்பு பொருள் உடைமைகள்

மீது இருப்பதையும் தாண்டி, நம் செயல்களிலும், மனப்பான்மைகளிலும் இருக்க

வேண்டும்.

நாம் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்கவும், வீண்பேச்சைத் தவிர்க்கவும்.

அமைதி மற்றும் சாந்தமுள்ள ஆவியைக் கொண்டிருக்கவும் அழைக்கப்படுகிறோம்

(நீதிமொழிகள் 16:28, 1 தெசலோனிக்கேயர் 4:11).

எல்லாவற்றையும் கர்த்தருக்குச் செய்வது போலச் செய்து, பாத்திரரான நம் தேவனை

ஆராதிக்கும் விதமாக சிறந்த விதத்தில் உழைக்க வேண்டும் (கொலோசெயர் 3:23).

உண்மையுள்ள உக்கிராணத்துவத்தில் கொண்டிருக்கும் அசையாத அர்ப்பணிப்பின்

மூலம் தேவனுடைய போஷிப்பின் மீதான நம்முடைய ஆழமான பயபக்தியை

பிரதிபலிக்கிறோம், அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதைச்

செயலில் காண்பிக்கிறோம், மற்றும் நிறைவாக அவருடைய நாமத்திற்கு மகிமை

செலுத்துகிறோம்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

அர்ப்பணிப்பு

“ஒரு காரணத்திற்காக, ஒரு செயலுக்காக அல்லது ஒரு உறவிற்காக நம்மையே ஒப்புவிக்கும் நிலை அல்லது தன்மை” என்பது அர்ப்பணிப்பின் அகராதி அர்த்தம். கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் அர்ப்பணிப்புடன் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அர்ப்பணிப்பு மிகவும் சக்தி வாய்ந்தது, அது தேவனோடுள்ள நம் வாழ்க்கையை விடாமுயற்சியுடனும், பொறுமையுடனும், செழிப்புடனும் வாழ உந்துதலாக இருக்கிறது.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Zeroக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.zerocon.in/