பாரத்திலிருந்து விடுதலைமாதிரி
![பாரத்திலிருந்து விடுதலை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F42992%2F1280x720.jpg&w=3840&q=75)
வழி 4: துயரத்தில் துதி
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
அப்போஸ்தலர் 16:25 - 26 , 30
பவுலும் சீலாவும் இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் அடிக்கப்பட்டு, தன் கால்கள் தொழுவ மரத்தில் கட்டப்பட்ட நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இருவருக்கும் சரீரத்தில் மிகுந்த வேதனை இருந்திருக்கும். கால்களை கூட அசைக்க முடியாத நிலையில் நடுராத்திரியில், ஜெபம் பண்ணி வலி வேதனைகளை பொருட்படுத்தாமல் தேவனை துதித்து பாடினார்கள். உடனே சிறைச்சாலையின் கதவுகள் திறக்கப்பட்டு. இருவர் கட்டுகள் மாத்திரம் அல்ல சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகள் கட்டுகளும் கழன்றன. இச்சம்பவத்தின் விளைவாக சிறைச்சாலைக்காரன் மற்றும் அவன் குடும்பத்தினர் முழுவதும் இரட்சிக்கப்பட்டனர். இதுவே துதியினால் வரும் அற்புதம். துதி நாம் எதிர்பாராத அதிசயமான காரியங்களை கொண்டு வரும்.
தாவீது சுமார் 70 சங்கீதங்களுக்கு மேல் எழுதியுள்ளார். சாதாரணமாக சந்தோஷ நேரங்களில் பாட்டுகளை பாடுவது இயல்பு. அது எளிதும் கூட .ஆனால் தாவீது தன் இடுக்கன்களில் கூட சங்கீதங்களை பாடுகிற பழக்கத்தை உடையவர்.
உதாரணமாக, கீழ்க்கண்ட சங்கீதங்களில் உள்ள தலைப்புகளின் விவரங்கள்:
* சங்கீதம் 3 - தாவீது தன் குமரன் அப்சலோம்க்கு தப்பி ஓடிப்போகையில் பாடின சங்கீதம்
* சங்கீதம் 51 - பத்சேபாளிடத்தில் தாவீது பாவத்திற்குட்பட்ட பின்பு நாத்தான் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து அவன் பாவத்தை உணர்த்தினபோது பாடின சங்கீதம்
* சங்கீதம் 54 - தாவீது தங்களிடத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறான் என்று சீப்புரார் வந்து சவுலுக்கு சொன்னபோது( காட்டி கொடுத்தபோது) பாடின சங்கீதம் * சங்கீதம் 56 - பெலிஸ்தர் தாவீதை காத்தூரில் பிடித்த போது பாடின சங்கீதம்
* சங்கீதம் 57 - தாவீது சவுலுக்கு தப்பியோடி கெபியில் ஒதுங்குதையில் தனக்கு நஷ்டம் நேரிடாதபடி பாடின சங்கீதம்.
இவ்வாறு, பாடல்களை தன் இக்கட்டு நாட்களிலும் சிறையிருப்பு போன்ற அனுபவங்களிலும் பாடி, பெலன் அடைந்து விடுதலை பெற்றிருக்கிறார்.
அதனால்தான் சங்கீதம் 34:1 இல் "கர்த்தரை நான் எக்காலத்திலும்( நல்ல /தீய காலத்திலும்) ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்" என்று பாட முடிந்தது.
விடுதலை தரக்கூடிய ஆயுதங்களில் ஒன்று 'துதி'. நாம் தேவனை ஸ்தோத்தரியாமல் இருக்கும்போது இருதயம் இருளடையும், சிந்தனையில் பாதிக்கப்படுவோம் ( ரோமர் 1:21). தேவனை துதிக்கும்போது, சிந்தனையில் உண்டாகிற கட்டுகள் அறுந்துபோகும். ஆண்டவரை போற்ற முடியாத நேரத்திலும் நாம் அவரை புகழும் போது அவர் இரங்குவார். அவர் மனது குளிரும். வேண்டிய விடுதலையை கொடுப்பார்.
இந்த திட்டத்தைப் பற்றி
![பாரத்திலிருந்து விடுதலை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F42992%2F1280x720.jpg&w=3840&q=75)
" எபிரெயர் 12:1 -..., மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." லூக்கா 21:34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். இவ்வசனங்களிலிருந்து,'பாரம்' நம் கிறிஸ்துவ ஓட்டத்தை தடுக்கக் கூடியது என்று விளங்குகிறது. தீமையும் கொடுமையும் நிறைந்த இவ்உலகத்தில் 'பாரம் என்கிற சுமை' நம்மை தாக்குகையில் விடுதலையின் வாழ்க்கை வாழ வேதாகமத்திலிருந்து சில வழிகள்.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக India Revival Ministriesக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://indiarevivalministries.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)
வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
![விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52714%2F320x180.jpg&w=640&q=75)
விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)
தேவனோடு நெருங்கி வளர்தல்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)