உறுதிமொழிமாதிரி
முன்னுரிமைக்கான உறுதிமொழி
யோனத்தான் மற்றும் மிஷேல் கடந்த 10 வருடங்களாக திருமணமாகி மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும் நண்பர்களோடு அமர்ந்து சிரித்து மகிழவும் கூடிய தம்பதிகளாக தங்களை அடையாளம் காட்டுகிறார்கள்.
யோனத்தான:
“என்னையல்லாமல் வேறு தேவர்கள் உங்களுக்கு இல்லாதிருக்க கடவது.”
இது மிக எளிமையாக தோன்றும். நான் மற்ற மதங்களின் தெய்வங்களை வணங்குவது இல்லை. நிச்சயமாக ஒரு கட்டுக்கதையின் தெய்வத்தை வணங்கவோ மற்ற நம்பிக்கைகளின் பாடங்களை பின்பற்றவோ நான் செய்யவில்லை. இந்த கட்டளையை நான் கடைபிடித்து விட்டேன். இது என் திருமணத்தை எப்படி சார்ந்து இருக்கிறது?
அவ்வளவு சுலபமாக இதை கடந்து வந்துவிட முடியாது. இதை வாசித்து பாருங்கள், "கொண்டிருக்காதே வேறு எந்த பொருளையோ அல்லது வேறு எந்த நபரையோ எனக்கு மேலாக.” கிறிஸ்துவுக்கு மேலாக நான் வைக்க கூடிய காரியங்கள்: என் திருமணம், என் வேலை, என் பிள்ளைகள், என் ஆரோக்கியம், இன்னும் பல காரியங்கள். எல்லா நல்ல காரியங்களும். தேவனை முதன்மையான இடத்தில் இருந்து நீக்கும் வரை. பிறகு அவைகள் தேவர்கள் தான். நான் கண்டு உணர்ந்தது இதுதான்: ஜீவியத்தின் தேவைகள் தாங்கமுடியாமல் போகும்போது, அது அநேக வேளைகளில் தேவனை காட்டிலும் வேறு ஏதோ ஒன்றையோ அல்லது வேறு நபரையோ முதலாவது வைத்ததினால்தான்.
கிறிஸ்துவுக்கு முன்பாக எதையும் வைக்காமல் இருப்பது சுலபம் அல்ல, ஆனால் அது உன் நன்மைக்கே. உன்னுடைய முன்னுரிமைகள் சரியாக இருக்கும்போது-தேவன் முதலாவது, திருமணம் இரண்டாவது-உன் திருமணத்தில் இணக்கம் மாத்திரம் அல்ல, அதோடுகூட ஆழமான சமாதானம், அமரிக்கை மற்றும் ஆவிக்குரிய நம்பிக்கை உன்னில் இருக்கும், அது தடுத்து நிறுத்த முடியாதது.
மிஷேல்:
அநேக வேளைகளில், நான் தேவனை முதல் இடத்திலிருந்தும் யோனத்தானை இரண்டாவது இடத்திலிருந்தும் நான் தற்செயலாக நீக்கி முன்னுரிமை கொடுக்க தேவையில்லாத காரியங்களை கொண்டு மாற்றியிருக்கிறேன்! என்னுடைய பொழுதுபோக்கு காரியங்களைக்கூட சிலவேளைகளில் முதலாவதாக கருத்தியிருக்கிறேன்!
தேவனை முதலாவது வைப்பது என்றால் வேண்டுமென்றே நேரம் அவரோடு செலவிடுவதாகும், அவர் வார்த்தையை வாசித்து, மற்ற எல்லா காரியங்களை காட்டிலும் முதலாவது தேவனை கருதுவது ஆகும். எல்லா காரியங்களை காட்டிலும்! என்னுடைய முன்னுரிமைகள் தவறாக இருக்கும்போது, என்னுடைய தேவைகள் சந்திக்கப்படுவதில்லை. நான் யோனத்தான் அவைகளை சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். உண்மையில், யோனத்தான் என்னை முதலாவது எல்லா இடத்திலும் வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அது சரியான பழக்கம் இல்லை. தேவன் மாத்திரம் தான் என் தேவைகளை முழுவதுமாக தீர்க்க முடியும். நல்லபடியாக நான் தேவனோடு பலமாக உறவில் இருந்தால் தான் என் திருமணமும் பலமாக இருக்கும் என்று மறுபடியும் மறுபடியும் கற்றுக்கொண்டிருக்கிறேன். தேவனை முதலாவது வைப்பது மாத்திரம் தான் சரியான முடிவாக இருக்க முடியும்!
ஜெபிக்க வேண்டியது: தேவனே, நான் எதை முதலாவது வைத்திருக்கிறேன்? இரண்டாவது? மூன்றாவது? என்னுடைய முன்னுரிமைகளை சரியாக கொண்டிருக்க எனக்கு பெலன் தர மாடீரா? ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த லயிஃப் சபையின் வேதாகம திட்டத்தில், ஆறு தம்பதியினர் சபையில் அதிகாரப்பூர்வமாக சொல்லாத ஆறு திருமண உறுதிமொழிகளைப் பற்றி எழுதுகிறார்கள். ஆயத்தம், முன்னுரிமை, பின்தொடர்தல், ஒற்றுமை, தூய்மை மற்றும் பிரார்த்தனை ஆகிய இந்த உறுதிமொழிகளே திருமணத்திற்கு முன்பே திருமணங்களை நிலைக்க செய்கின்றன. நீங்கள் திருமணமானவராக இருந்தாலும் சரி அல்லது அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவராக இருந்தாலும் சரி, உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் இது
More