வழியைப் பயிற்சி செய்வதுமாதிரி
உங்கள் சிலுவையை எடுத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறீர்களா?
எல்லோரும் விரும்புவதில்லை.
சுவிசேஷங்களைப் படியுங்கள்: பல்லாயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடம் ஈர்க்கப்பட்டனர், ஆனால் அதிகபட்சம் சில நூறு பேர் மட்டுமே அவருடைய சீடர்களாக ஆனார்கள்.
அநேகர் இயேசுவிடம் உண்மையாக ஈர்க்கப்பட்டார்கள் (நீங்கள் எப்படி ஈர்க்கப்படாமல் இருக்க முடியும்?), ஆனால் அவர்கள் சீஷத்துவ வாழ்க்கைக்கு தயாராக இல்லை. "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்" (லூக்கா 9:59) போன்ற சாக்குப்போக்குகளை கூறினர். இது முதல் நூற்றாண்டு வழி, “எனது பெற்றோர் இறக்கும் வரை நான் காத்திருக்கட்டும், அதனால் நான் குடும்ப ஆஸ்தியைப் பெறவும், சுதந்திரமாக செல்வந்தனாகவும் இருக்க முடியும்; அதன்பின் நான் உங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன். இன்னொரு சாக்கு? "ஆண்டவரே, நான் உம்மைப் பின்பற்றுவேன், ஆனால் முதலில் நான் திரும்பிச் சென்று என் குடும்பத்தாரிடம் விடைபெற விழைகிறேன்" (வசனம் 61). அதாவது, நான் உறுதியளிக்கும் முன் எனக்கு இன்னும் சிறிது அவகாசம் கொடுங்கள்.
நம்மில் பலர் அதைத்தான் செய்கிறோம்: தாமதிக்கிறோம், ஊசலாடுகிறோம், சாக்குப்போக்கு சொல்கிறோம். உணவு கட்டுப்பாட்டில் செல்வது அல்லது உடல் வடிவம் பெறுவது அல்லது எங்கள் அலமாரியை ஒழுங்கமைப்பது போல காரியங்களை, நாம் தள்ளிப்போடுகிறோம்: "நான் அதை பின்னர் செய்கிறேன்." ஆனால் பின்னர் வருவது அரிது.
இயேசு என்ன சொன்னார்? "இறந்தவர்கள் தங்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யட்டும்" (வசனம் 60).
நமது நவீன காதுகளுக்கு அது இரக்கமற்றதாகத் தெரிகிறது, ஆனால் அது அவ்வாறு இல்லை; அது வெளிப்படையாக இருந்தது. இயேசு, "உங்களால் அதைச் செய்ய முடியும், ஆனால் நீங்கள் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தால், அது உங்களை வாழ்க்கைக்கு அல்ல, மரணத்திற்கு இட்டுச் செல்லும், என்றார்."
நீங்கள் பார்க்கிறீர்கள், இயேசு கெஞ்சவில்லை அல்லது கட்டாயப்படுத்தவில்லை அல்லது கொடுமைப்படுத்தவில்லை. வற்புறுத்துதல் ஆவியின் கனி அல்ல. அவர் அழுத்தம் அல்லது விற்பனை விளம்பரத்தையையோ வழங்கவில்லை; அவர் அழைத்தார். மக்கள் மறுக்கும் போது அல்லது சாக்குப்போக்குகளை கூறும்போது. . .
அவர் அவர்களை விலகிச் செல்ல அனுமதித்தார்.
இயேசுவின் அழைப்பிற்கு இல்லை என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
என்னால் முடியும்.
நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்தால், நீங்கள் அழைப்பை தவிர்க்க முடியாமல் நிராகரிப்பீர்கள், பின்னர் வருத்தப்படுவீர்கள். நான் நிராகரித்திருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக, இதுவரை என் வாழ்க்கையில் ஒரு சில வாய்ப்புகளை மட்டுமே என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆனால் இன்றுவரை, அவை நினைவுக்கு வரும்போது, என் முடிவுகளுக்காக நான் வருத்தப்படுகிறேன்.
இயேசுவிடம் பயிற்சி பெறுவதற்கு உங்களுக்கு முன் அழைப்பு உள்ளது.
என்ன சொல்வீர்கள்?
உங்கள் இதயத்திற்கும் வாழ்க்கைக்கும் இயேசு என்ன அழைப்பை விடுத்துள்ளார் என்பதை நீங்கள் உணர்கிறீர்கள்? இயேசுவின் ஆவியானவர் உங்கள் இருதயத்தை எதையாவது நோக்கித் தூண்டிவிட்டாரா? நீங்கள் பின்பற்றினீர்களா? இயேசுவின் அழைப்புகளுக்கு ஆம் என்று பதிலளிக்கஇன்று நீங்கள் என்ன செய்ய முடியும்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் யாராக மாறுகிறீர்கள்? 70, 80 அல்லது 100 வயதில் நீங்கள் கற்பனை செய்தால், தொலைதூரத்தில் நீங்கள் எப்படிப்பட்ட நபரைப் பார்க்கிறீர்கள்? உங்கள் மனதில் இருக்கும் கணிப்பு உங்களை நம்பிக்கையுடன் நிரப்புகிறதா? அல்லது பயத்தினாலா? இந்த தியானத்தில், ஜான் மார்க் காமர், நாளுக்கு நாள் இயேசுவைப் போல ஆன்மீக ரீதியில் எவ்வாறு உருவாகலாம் என்பதை நமக்குக் காட்டுகிறார்.
More