கிறிஸ்துமஸை நாம் கொண்டாடும்போது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறோம்மாதிரி

கிறிஸ்துமஸை நாம் கொண்டாடும்போது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறோம்

4 ல் 1 நாள்

கிறிஸ்துவின் முதல் வருகையின் முக்கியத்துவம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட நாம் ஆயத்தமாகும்போது, ​​​​ஒரு தொழுவத்தில் அவருடைய தாழ்மையான வருகையை மட்டுமல்ல, வெற்றிகரமான ராஜாவாகவும் மணவாள னாகவும் வருகின்ற அவரது இரண்டாவது வருகையின் முக்கியத்துவத்தையும் நினைவுபடுத்துகிறோம். கிறிஸ்துவின் பிறப்பின் முக்கியமான கருத்தை ஆராய்வோம், தொட்டிலில் இருந்து கிரீடத்திற்கு நம் கவனத்தை திசை திருப்பும் வல்லமை மற்றும் இந்த எதிர்பார்ப்பு நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை எவ்வாறு மேன்மைப்படுத்தலாம் என்பதை காணலாம் .

பெத்லகேமில் கிறிஸ்து பிறந்த கதை ஒரு வல்லமை வாய்ந்த ராஜாவாக அல்ல மனத்தாழ்மைக்கு சான்றாகும். தாழ்ந்த தொழுவத்தில் பிறந்த அவர், தேவனின் அன்பையும் இரக்கத்தையும் உள்ளடக்கிய ஒரு உதவியற்ற குழந்தையாக வந்தார். லூக்கா 2:7 -ல், அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.” இந்த தாழ்மையான ஆரம்பம் அவரது இரண்டாவது வருகைக்கான களத்தை அமைத்தது, உண்மையான வல்லமை, மனத்தாழ்மையில் உள்ளது என்பதை நிரூபிக்கிறது.

அவரது புகழ்பெற்ற “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தாஎன்னும் நாமம்

நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது, ​​நம் கவனத்தை முன்னணையில் இருந்துகிரீடத்திற்கு மாற்றுவது அவசியம். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையானது சர்வ வல்லமையுள்ள ராஜாவாகவும் மணவாளனாகவும் அவர் வெற்றியுடன் திரும்புவதற்கான வாக்குத்தத்தமாகும். வெளி 19:16-ல் ஒரு தெளிவான சித்திரத்தை வரைகிறது: “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.”

“ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா" என்ற நாமம் இந்த எதிர்பார்ப்பைப் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மாற்றியமைத்து, நமது விசுவாசத்தை பெருகப்படுத்தலாம்

ஆழ்ந்த எதிர்பார்ப்பின் எடுத்துக்காட்டுகள்

கிறிஸ்துமஸ் காலத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான எதிர்பார்ப்பு, அவருக்காகவே காத்திருக்கும் நமக்கு சொல்லி முடியாத, மகிழ்ச்சி, அன்பு மற்றும் எதிர்பார்ப்பையும் ஊக்குவிக்கும் வல்லமைக் கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் காலத்தில் நம் பொருளாதாரத்தைப் பயன்படுத்தி பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கவும், வீடற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவும் முடிவு செய்து தேவனுக்கு கீழ்ப்படியும் வழிகளை கண்டறிவோம். நம் சமுதாயத்தில் தேவனுக்கு பயந்த ஒரு வாழ்வின் அடிப்படையில் ஈடுபடும் முறையைக் கவனியுங்கள். மிக முக்கியமான கட்டளை. ராஜா திரும்பி வருவதற்குத் தயாராகுதல் என்பது, வேதத்தில் நாம் வாசிக்கும் போது நாம் ஆச்சரியப்படும் விதத்தில் குறைவான எண்ணிக்கைக்கு உட்பட்ட சிறு கூட்டத்தை நோக்கி இயேசு கூறுவது தான் பின்வரும் கூற்று. (மத் 25:40).. “ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்பார்.

உதாரணமாக, பொருள், வெகுமதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் பரந்த மனப்பான்மை ,இரக்க உணர்வை வளர்க்க நாம் இந்தப் பண்டிகை காலத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

நம் இதயங்களை தயார்படுத்துதல்

பிறப்பின் காலத்தில் நாம் நுழையும்போது, ​​அவரிடம் திரும்புவதற்கு நம் இதயங்களை தயார்படுத்துவதற்கான அழைப்பிற்கு செவிசாய்ப்போம். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வீடுகளை அலங்கரித்து வெகுமதிகளை பரிமாறிக்கொள்வது போல், கிறிஸ்து ராஜாவாகவும், மணவாளனாகவும் வருவதற்கு நாம் நம்மை ஆயத்தப்படுத்தும் நிலையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மத்தேயு 24:44 -ல், இயேசு நமக்கு நினைவூட்டுகிறார், "நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” இந்த பிறப்பின் காலம் ஆவிக்குரிய ஆயத்தம் மற்றும் புதுப்பித்தலின் காலமாக இருக்கட்டும்.

பிரதிபலிப்பு கேள்விகள்

  • ஒரு தொழுவத்தில் இயேசுவின் தாழ்மையான பிறப்பு எவ்வாறு வல்லமை மற்றும் மகத்துவம் பற்றிய நமது உணர்வுகளை எதிர்கொள்ள செய்கிறது?
  • கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்கள் கவனத்தை முன்னணையில் இருந்து இருந்து கிரீடத்தின் மீது எந்த வழிகளில் மாற்றலாம்?
  • கிறிஸ்து ராஜாவாகவும் மணவாளனாகவும் திரும்பி வருவதற்கு உங்கள் இதயத்தைத் தயார்படுத்த என்ன நடைமுறை வழிகளை நீங்கள் எடுக்கலாம்?

கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாவது வருகையின் மிக தேவையான முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க பிறப்பின் காலம் நம்மை அழைக்கிறது. நம் கவனத்தை நாம் பெற இருக்கும் கிரீடத்திற்கு நேராக மாற்றுவதன் மூலம், நம் விசுவாசத்தை வலுப்படுத்தலாம்

நமது கிறிஸ்துமஸ் காலங்களில் நமது மணவாளனின் வருகைக்கு நம் இதயங்களை தயார் செய்வோம். இந்த பிறப்பின் காலம்மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சியின் காலமாக இருக்கட்டும், நாம் நமது தேவனின் வருகைக்காக எதிர்பார்ப்போடு காத்திருப்போம்..

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துமஸை நாம் கொண்டாடும்போது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறோம்

கிறிஸ்துவின் பிறப்பின் காலம் என்பது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு மற்றும் பிரதிபலிப்பு நேரம். நாம் கிறிஸ்துமஸைக் கொண்டாடும்போது, ​​கிறிஸ்துவின் முதலாம் வருகையின் தாழ்மையான ஒரு முன்னணையில் இருந்து அவரது இரண்டாவது வருகையின் மகிமையான கிரீடத்திற்கு நம் கவனத்தை செலுத்த இது ஒரு முக்கியமான நேரம். இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தையும் அதன் கருத்து என்ன என்பதை ஆராய்வோம். இது கிறிஸ்துவின் முதல் வருகை. ஒரு தாழ்மையான குழந்தையாக கிறிஸ்துவின் முதல் வருகையின் சத்தியங்களை வேதாகமத்திலிருந்து வாசித்து அறிந்து இக்காலத்தில் தியானிப்போம். இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை மற்றும் இரண்டாம் வருகை இவற்றுக்கிடையே இருக்கும் முக்கியத்தையும் அறிந்து கொள்ளுவோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Annie Davidக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ruminatewithannie.in/