சரியில்லைமாதிரி

Not Okay

28 ல் 11 நாள்

நிராகரிப்பு பல்வேறு இடங்களிலிருந்து வரலாம் . . .

உங்களோடு இனி மேல் நேரம் செலவிட வேண்டாம் என தீர்மானம் செய்தால் நண்பர்கள் மூலம் நிராகரிக்கபடலாம்.

உங்களிடம் இருந்து பிரிவதற்கான சமயம் என தீர்மானம் செய்தால் பங்காளி உங்களை நிராகரிக்கலாம்.

நீங்கள் முயற்சி செய்யும் விளையாட்டு குழுவால், நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை அல்லது கல்லூரி, அல்லது நீங்கள் பெறுவீர்கள் என நினைத்த உதவித்தொகை மூலம் நீங்கள் மறுக்கப்படலாம். மேலும் என்ன வென்றால். . . எந்த இடத்திலிருந்து வந்தாலும், மறுப்பு எப்போதுமே வலிக்கும். இது எளிதில் மாறாது. மறுப்பு எப்போதும் தனிப்படையாக உணரப்படுகிறது. அதிலிருந்து மீண்டு கடந்து, செல்லவது கடினம்.

இந்த நிராகரிப்பின் மூலம் எங்கிருந்து வந்தாலும், அதை ஒரே இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். பேதுரு இன்று உள்ள வேத வாசிப்பில், நமது மனஅழுத்தம் மற்றும் கவலைகளை கடவுளிடம் ஒப்படைக்கலாம் என்று எழுதுகிறார். வேதனையுடன் சிறிது நேரம் இருந்தாலும், நமது கவலைகள், மன அழுத்தம். ஏன் நிராகரிப்பு எடுத்து கொள்வேன் என தேவன் சத்தியம் செய்கிறார். வேதனை ஒரே இரவில் போகும் என்று அர்த்தமல்ல. நிராகரிப்பு அவ்வாறு செயல்படுவதில்லை. ஆனால் நீங்கள் இதை தனிமையில் அனுபவிக்க வேண்டியதில்லை என அர்த்தமாகும்.

பேதுரு இன்று உள்ள வாசிப்பில் இன்னொரு நல்ல நினைவூட்டலைக் கூறுகிறார் . . . இந்த அனுபவம் நமக்கு மாத்திரமே இல்லை. நாம் மறுக்கப்படும் போது, தனிமையாக உணர்வது எளிது. ஆனால் உண்மையில், பலர் இதே அனுபவத்தை கடந்துள்ளனர் மற்றும் இறுதியில் அடுத்த பக்கத்தில் வந்துள்ளனர். இப்போது அது எப்படி தோன்றினாலும், ஒரு நாள் நீங்களும் மீண்டு எழுவீர்கள்.

வேதவசனங்கள்

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

Not Okay

நாம் அனைவரும் சந்திக்கும் நான்கு முக்கியமான மன அழுத்தங்களைப் பற்றி பார்ப்போம் மற்றும் அவை ஒவ்வொன்றுக்கும் தேவரின் வார்த்தைகள் எவ்வாறு நமக்கு ஆறுதல், வழிகாட்டுதல் மற்றும் உதவியை வழங்குகின்றன என்பதையும் காண்போம். நீங்கள் சரியில்லாதபோது இயேசு உங்களுக்கு என்ன வழங்குகிறார், மக்கள் உங்களை நிராகரிக்கும்போது கடவுள் உங்களுக்கு தெரிய வேண்டியது என்ன, சரியானதைச் செய்வது எளிதல்லாதபோது என்ன செய்ய வேண்டும், மற்றும் நாம் கவலைப்படும்போது கடவுள் என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Stuff You Can Use-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://growcurriculum.org