சரியில்லைமாதிரி
பீடில்ஸ் உலகின் மிகவும் பிரபலமான ராக் இசை குழு மற்றும் கடந்த நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த இசை நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால், பீடில்ஸ் வெற்றி கிட்டதட்ட ஆகவில்லை என்றால் அது எவ்வளவு விசித்திரமாக இருக்கும்? துவக்கத்தில், அவர்கள் நான்கு பதினம்வயது சிறுவர்களே, ஒப்பந்தம் செய்ய விரும்பும் லேபிள் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாரும் வாய்ப்பு அளிப்பதற்கு முன் அவர்கள் நான்கு முறை மறுக்கப்பட்டனர். ஒரு பெரிய தயாரிப்பாளர் “கிட்டார் இசை இப்போதெல்லாம் யாரும் இஷ்டபடுவதில்லை” அதனால் ஆர்வமே இல்லை என்று அவர்களிடம் கூறிவிட்டார்.
பீடில்ஸை ஒருவர் நிராகரித்தார் என்று நாம் இப்போது வியப்படைவது எளிதே. அவர்களுக்கு இல்லாத ஒரு தொலைநோக்கு நமக்கு உள்ளது. முழு கதையும் நாம் பார்க்கிறோம்.
அதை போலவே, பலரும் ஏன் இயேசுவை நிராகரிக்கரார்கள் என நாம் வியப்படைவது மிகவும் சுலபம். அவரை வெறுமனே நிராகரிக்கவில்லை...அவரை சிலுவையில் ஏற்றி கொன்றனர். உண்மையில் அவர் யார் என்று எப்படி அவர்களுக்கு புரியாமல் இருந்திருக்கும்?
நம்மால் புரிந்து கொள்ள முடியாது, ஆனால் இயேசு புரிந்து கொண்டார். ஆனால் இயேசு அந்த மறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். இன்றைய பைபிள் வாசிப்பில், இயேசு தன் வாழ்வின் பெரும்பாலான நாட்களை அவதியுடனும், வேதனையிலும் கழிப்பார் என ஏசாயா தீர்க்கதரிசனம் கூறுகிறார். தமக்கு இவ்வாறு நடக்கும் என அவருக்கு தெரியும். ஆயினும் பூமிக்கு அவர் வந்தார். நிராகரிக்கபடுவதற்கு அல்லாமல் நம்மை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதை காண்பிக்கவே.p>
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் அனைவரும் சந்திக்கும் நான்கு முக்கியமான மன அழுத்தங்களைப் பற்றி பார்ப்போம் மற்றும் அவை ஒவ்வொன்றுக்கும் தேவரின் வார்த்தைகள் எவ்வாறு நமக்கு ஆறுதல், வழிகாட்டுதல் மற்றும் உதவியை வழங்குகின்றன என்பதையும் காண்போம். நீங்கள் சரியில்லாதபோது இயேசு உங்களுக்கு என்ன வழங்குகிறார், மக்கள் உங்களை நிராகரிக்கும்போது கடவுள் உங்களுக்கு தெரிய வேண்டியது என்ன, சரியானதைச் செய்வது எளிதல்லாதபோது என்ன செய்ய வேண்டும், மற்றும் நாம் கவலைப்படும்போது கடவுள் என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம்.
More