The Chosen - தமிழில் (பாகம் 5)மாதிரி
நானே ஆதியும் அந்தமுமானவர்
என் அன்பரே, கடந்த நாட்களில் நாம் வாசித்த ஒவ்வொரு வேதாகமகதாபாத்திரத்தின் சாட்சியையும் நீ பெரிதும் ரசித்திருப்பாய் என்று என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நம்புகிறேன்.
ஒரு ஆசிரியராக எனக்கு, The Chosen தொடரில் சித்தரிக்கப்பட்ட இந்த கதாபாத்திரங்களின் கதையில் மூழ்கி, அவர்களின் வாழ்க்கை இயேசுவால் தொடப்பட்டு மாற்றப்பட்ட விதங்களை உள்ளூர அனுபவிப்பது ஒரு அசாதாரணமான அனுபவமாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு ஆழமான, யதார்த்தமான கதை சித்தரிப்பே "The Chosen" தொடரை மிகவும் சிறப்புமிக்க ஒன்றாக திகழச்செய்கிறது என்று நான் நம்புகிறேன். வெவ்வேறு கதாபாத்திரங்களின் இருதயங்களை என்னால் சரியாக வர்ணிக்க முடிந்தது என்றும் அவர்களின் கதைகள் உன்னை ஊக்குவித்தது என்றும் நம்புகிறேன்.
இயேசு யார் என்பதையும், உன் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதமான காரியங்களுக்காகவும் உன் அன்பையும் ஸ்தோத்திரங்களையும் அவருக்கு செலுத்து. அவருடைய அன்பு உனக்குள் பெருகட்டும், அவருடைய நாமத்தின் மகிமைக்காக அதே அன்பை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள். ஏனென்றால் அவரே முதலும் முடிவுமானவர் (வெளிப்படுத்தின விசேஷம் 1:8)
மறந்துவிடாதே: நீ ஒரு அதிசயமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்!
என்றும் கிறிஸ்துவின் அன்புடன்,
Christian Misch
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=tamilchosen