அடுத்து என்ன: மாணவர் பதிப்புமாதிரி

What's Next: Student Edition

7 ல் 1 நாள்

தேவனின் வெளிப்பாடு

சில நேரங்களில் தேவனை பார்ப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் கவனம் செலுத்தி அவரை தேடினால் அவர் தன்னை பல வித்தியாசமான விதங்களில் வெளிப்படுத்துகிறார் என்று காண்பீர்கள்.

தேவன் தன்னை வெளிப்படுத்தும் விதங்களில் ஒன்று ரோமர் 1:20ல் சொல்லப்பட்ட படி படைப்பு. கம்பீரமான மலைகள் மற்றும் விரிந்த பெருங்கடல்களுடன் உலகம் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்று பாருங்கள். நம்மை சுற்றிலும் அழகு உள்ளது. அது தான் தேவனின் ஆச்சு — அவரது கைரேகை.

தேவன் தன்னை வெளிப்படுத்தும் மற்றொரு விதம் நம் மனசாட்சி மூலம். ரோமர் 2:15 குறிப்பிடுகிறது என்னவென்றால் நம் அனைவருக்கும் எது சரி, தவறு என்று அறிய ஒரு இயற்கையான உட்புற அறிவு இருக்கிறது. நம் மனதிலோ அல்லது இதயத்திலோ இருக்கும் அந்த சத்தத்தை நாம் கவனிக்கவோ கவனிக்காமல் இருக்கவோ தேர்ந்தெடுக்கலாம். அது நம் வாழ்வில் தேவனின் வழிநடத்துதல்.

தேவன் தம் குமாரன் இயேசுவை நமக்கு அனுப்பியதன் மூலம் தம்மை வெளிப்படுத்துகிறார். யோவான் 14:9 ல் இயேசு சொல்லுகிறார், தம்மை (இயேசு) கண்ட எவரும் பிதாவை கண்டார்கள் என்று. இயேசு, காண முடியாத தேவனின் சாயல். அவர் மூலம் நாம் தேவனை அறியலாம்.

தேவ வார்த்தை, தேவனை அறிவதற்கு மற்றொரு வல்லமையான வழி. தேவன் யார் என்றும் அவர் மனிதர்களிடம் எப்படி இடைப்படுகிறார் என்றும் வேதாகமம் வெளிப்படுத்துகிறது. வேதாகமத்தின் மூலம் நாம் தேவனின் குணத்தையும் காலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் அவரது பெரிய சம்பவத்தையும் பார்க்கிறோம்.

எனவே இப்போது தேவன் தம்மை உங்களுக்கு எப்படி வெளிப்படுத்துகிறார்? தேவனின் அனைத்து ஆதாரங்களையும், உங்களை சுற்றிலும் மற்றும் உங்கள் வாழ்விலும் உங்கள் மூலமாகவும் அவர் தம்மை எப்படி வெளிப்படுத்துகிறார் என்றும் இந்த வாரத்தில் கவனித்து பாருங்கள்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

What's Next: Student Edition

தேவன் யாரென்றும் அவர் உங்களை யாராக இருக்க படைத்திருக்கிறார் என்றும் இந்த 7 நாள் அடிப்படை திட்டத்தில் நீங்கள் தேவ வார்த்தையை திறப்பதன் மூலம் கண்டறியவிருக்கிறீர்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கும் LifeChurch.tv க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.