அமைதியில் அமர்ந்திருத்தல்: ஏழு நாட்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்குள் காத்திருத்தல்மாதிரி
நாள் 3
அமைதியான சூழலில் அமர்ந்திருத்தல்: தேவன் இங்கே இருக்கிறார்
நம்மில் பலர் இதற்கு மேல் வேறு வழியே இல்லை என்னும் சூழ்நிலையில் இருந்திருக்கிறோம். விரும்பாத மருத்துவ ஆய்வு அறிக்கையோ, வேலை இழப்போ, அல்லது நாம் நேசிக்கும் ஒருவரின் இழப்போ, இது போன்ற சூழ்நிலைகளில் தேவனைக் காண்பது மிகவும் கடினம். இது போன்ற சூழலில் நம் மாட்டிக்கொண்டது போல உணர்வோம். நான்கு பக்கங்களும் அடைப்பட்டது போல் உணர்வோம்.
வேதத்தில், யாக்கோபு தான் உருவாக்கிய ஒரு சூழலில் இருந்து தப்பி ஓடுவதை காண்கிறோம். அவனுடைய செயலைப் பார்த்தால், அவன் தேவ தயவுக்கு தகுதியற்றவன் என்று சிலர் சொல்லக்கூடும், ஏனெனில் அவன் ஏமாற்றுக்காரனாகவும் உண்மையற்றவனாகவும் இருந்தான். தேவன் தன்னோடு இல்லாதது போன்று யாக்கோபு உணர்ந்திருப்பான் என்று நிச்சயமாக சொல்லுகிறேன். யாக்கோபு தான் செய்த எல்லா தவறில் இருந்தும் தப்பித்து ஓடி தனிமையான, நம்பிக்கையற்ற ஒரு இடத்தில் தலை சாய்க்கும்போது, தேவன் அவனை சந்தித்தார். யாக்கோபு உருவாக்கின எல்லா குழப்பங்களுக்கு மத்தியில், இந்த இடத்தில் தேவனை சந்திப்போம் என்று அவன் எதிர்பார்த்து இருக்கவே மாட்டான். ஆனாலும் அவனது எல்லா தவறுகளின் மத்தியிலும், அவனது கனவில் தேவன் அவனை சந்தித்து, இந்த இருளான நேரத்திலும் அவனோடு தேவன் இருப்பதை உறுதி செய்தார்.
தேவனுடைய இந்த தெய்வீக சந்திப்பிற்கு முன்பதாக யாக்கோபு தனிமையாக தொலைந்து போனவனாக பயத்தை உணர்ந்திருக்க கூடும். தேவனிடம் தயவோ உதவியோ கேட்பதில் பலன் இல்லை என்று உணர்ந்திருக்க கூடும். யாக்கோபை போலவே நாமும் சில நேரங்களில் நம் தகுதியற்றவர்கள் என்று எண்ணும்போது அல்லது தேவன் நமக்கு தவறிழைத்து விட்டார் என்று எண்ணும்போது தேவனிடமிருந்து நம்மை அடைத்துக் கொள்கிறோம் அல்லது மறைத்துக் கொள்கிறோம். நற்செய்தி என்னவென்றால் நம்முடைய இருளான நேரங்களிலும் தேவன் நம்மை விட்டு விலகுவதில்லை நம்முடைய பிரச்சனைகளை அவர் அமைதியாக இருக்கும்போதும் கூட.
யாக்கோபு, தேவன் தன்னோடு இருக்கிறார் என்பதை எப்பொழுது கண்டுபிடித்தாரோ அப்பொழுதே அவருக்கு தனது பாதையில் முன் செல்வதற்கான தைரியம் வந்தது, தேவன் அவன் தன்னோடு வருவார் என்று தன்னை பாதுகாப்பார் என்று தைரியம் வந்தது. இது தேவனோடு அவனுக்கு இருந்த தனிப்பட்ட ஒரு உறவின் தொடக்கமாக இருந்திருக்கலாம். யாக்கோபு தேவனே தனது தகப்பனுடைய தேவனாக அறிந்திருக்கலாம் ஆனால் இன்னும் தேவனுடன் தனக்கான தனிப்பட்ட உறவே ஸ்தாபித்துக் கொள்ளவில்லை. ஆனால் பல இன்னல்கள் சச்சரவுகளுக்கு இடையில், அமைதியான தருணங்களில் தேவனுடனான உறவுத் தொடங்கிற்று.
இப்பொழுது நீங்கள் சாத்தியமே இல்லை என்பது போன்ற சூழலில் இருப்பீர்களானால், சிறிது நேரம் எடுத்து நீ தான் எங்கள் ஜெபியுங்கள் நீங்கள் இருக்கும் சொல்லில் தேவனை பாருங்கள், அவர் உங்களோடு தான் இருக்கிறார். சரணம் அற்ற அமைதியாக இருந்தாலும் தேவனை தொடர்ந்து தேடுங்கள் அவர் அங்கே தான் இருக்கிறார் அவருடைய நேரத்தில் அவர் தன்னை சரியாக வெளிப்படுத்துவார் தேவன் நம்மை விட்டு விலகுவதில்லை ஆனால் நாம் வாழ்வை அவரோடு கடக்கும்படி அவர் விடுத்த அழைப்பை ஏற்கும் வரை காத்திருக்கிறார். தேவனுடைய பாதுகாப்பின் கீழ் தேவனோடு முன் செல்ல வேண்டும் என்று யாக்கோபு உணர்ந்தது போல, நமது சூழ்நிலையிலும் நாம் தேவனோடு முன் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். நீங்கள் அவரது அழைப்பை ஏற்றுக் கொள்கிறீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சில நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தம் இருக்கும், ஆனால் நம்முடைய வாழ்க்கைக்கும் அந்த வாக்குத்தத்துக்கும் சம்பந்தமே இராது. அல்லது நம் வாழ்வில் முச்சந்தியில் வந்து நின்றிருப்போம், எந்தப்பக்கம் செல்வது என்ற கேள்விக்கான பதிலை தேவன் பேச காத்துக்கொண்டிருப்போம், ஆனால் நமக்கு கேட்பது அவரது மௌனம் மாத்திரம். இந்த 7 நாள் தியானம் தேவன் மௌனமாய் இருக்கும்போது நாம் எப்படி அவரது சித்தப்படி செயல்படுவது என்று போதிக்கிறது.
More