அமைதியில் அமர்ந்திருத்தல்: ஏழு நாட்கள் தேவனுடைய வாக்குத்தத்திற்குள் காத்திருத்தல்மாதிரி
நாள் 1
அமைதியான இடங்களில்: அமைதியாய் அமர்ந்திருங்கள்
நமது தொடக்கத்தின் இவ்வேளையில், தேவனிடம் அசீர்வாதம் பெறுவதற்கு பல காலம் முன்னரே வாக்குத்தத்தம் பெற்றவரை பார்ப்போம். எனது வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இருப்பதைப் போல உணரும் வேளையில் ஆபிரகாம் மற்றும் சாராளின் அனுபவம் எப்போதும் எனக்கு விடாமுயற்சியைத் தரும்.
பெரும்பாலும் நாம் ஒரு ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும் வெகு நாட்களுக்கு முன்னதாகவே தேவன் நமக்கு வாக்குத்தத்தை தந்து விடுகிறார். சாராளின் வயது முதிர்ந்த காலத்தில் அவள் ஒரு பிள்ளையை பெறுவாள் என ஆண்டவர் வாக்களித்தார், ஆனால் எந்த வயதில் என்பதை தேவன் கூறவில்லை. அவரது வாக்குத்தத்தம் நிறைவேற சாராளிடம் ஆண்டவர் உதவி கோரவும் இல்லை. காலம் கடந்தது சாரளும் ஆபிரகாமும் ஆண்டவரிடம் கேட்ட வாக்குத்தத்தங்களுக்கு ஏற்றவாறு எந்த காரியத்தை பார்க்கவும் இல்லை கேட்கவும் இல்லை. அவர்கள் ஆண்டவருக்கு இந்த வாக்குத்தங்களை நிறைவேற்ற தங்களது உதவி தேவை என நினைத்து விட்டனர். இதை தவறை நாமும் எத்தனை முறை செய்திருக்கிறோம்?
தேவன் நமக்கு வழிகாட்டும் முன்னதாகவே நமது இலக்கை காண்பித்து விடுகிறார். ஒன்றுமே நடவாதது போல இருக்கும் அந்த அமைதியான சூழ்நிலையில் நமக்கு நம்பிக்கை தருவதற்காக அப்படி செய்திருக்கலாம். அமைதியான சூழல் மிகவும் முக்கியமானது ஏனெனில் அங்கே தான் நம்முடைய விசுவாசம் காட்சிப்படுத்தப்படுகிறது, பலப்படுத்தப்படுகிறது. நாம் பாடங்களை கற்றுக் கொள்கிறோம், பொறுமையைக் கற்றுக் கொள்கிறோம், கீழ்படிதலை கற்றுக் கொள்கிறோம், விடாமுயற்சியை கற்றுக் கொள்கிறோம்.
நமக்கான திட்டம் நிறைவேறுவதற்காக அவசரப்பட்டு தேவனுக்கு உதவி செய்ய எத்தனிப்பதைக் காட்டிலும் எதுவுமே நடக்காது போன்று சூழ்நிலையில் நாம் தேவனுக்கு உண்மையாக இருப்பது என்பது மிகவும் அவசியமான காரியம். உணர்ச்சிவசப்பட்டு, இதை நான் செய்வதை தேவன் விரும்புவார் என்றெண்ணி தவறான எந்த முடிவும் எடுக்காதிருக்க வேண்டும். Io.
அமைதியான சூழ்நிலையில் நாம் தேவனுடைய சத்தத்தையும் அவருடைய அமைதியையும் அறிந்து கொள்ள கற்றுக் கொள்கிறோம். தேவனுடைய சத்தம் கேளாமல் ஒரு அடி எடுத்து வைத்து விட்டால், தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தை விட்டு விடுவோம் அல்லது தாமதிக்க செய்து விடுவோம். சாராளும் ஆபிரகாமும் தேவன் இல்லாமல் நகர முடிவு செய்தனர். இது தேவ வாக்குத்தத்தம் நிறைவேற உதவாமல் அவர்களுடைய வாழ்க்கைக்கும் மற்றோருடைய வாழ்க்கைக்கும் தேவையில்லாத அழுத்தத்தையே விளைவித்தது.
நமது வாக்குத்தத்தை அடைய அவசரப்படுகையில், சாராளையும் ஆபிரகாமையும் போல தேவனுக்கே உதவி செய்ய முயற்சிக்கிறோம். அழுத்தமே இல்லாத வாக்குத்ததத்திற்கு அழுத்தத்தை சேர்க்கிறோம். அமைதியான சூழலில் தேவனுக்கு காத்திருக்க மறுத்து உங்கள் வாக்குத்தங்களை இழந்து போகாதீர்கள். உங்களுக்காக தேவன் தனது வேலையை செய்ய விட்டுக்கொடுங்கள். அமைதியான சூழ்நிலையில் பொறுத்திருந்து வாக்குத்தத்தத்தை பற்றி கொண்டு அவர் உங்களுக்காக வைத்திருக்கும் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளுங்கள் சந்தோஷமாய் அதனை அனுபவியுங்கள். அதற்கு அமைதியான சூழலில் அசையாதிருங்கள், சந்தேகப்படாதிருங்கள், முறுமுறுக்காதீர்கள், முயற்சி செய்யாதிருங்கள், தேவனுக்காக காத்திருப்பதை தவிர வேறு ஒன்றுமே செய்யாதிருங்கள். அவருடைய வாக்குத்தத்திற்காக, உங்கள் வாழ்க்கைக்காக அவர் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்.
இந்த திட்டத்தைப் பற்றி
சில நேரங்களில் தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தம் இருக்கும், ஆனால் நம்முடைய வாழ்க்கைக்கும் அந்த வாக்குத்தத்துக்கும் சம்பந்தமே இராது. அல்லது நம் வாழ்வில் முச்சந்தியில் வந்து நின்றிருப்போம், எந்தப்பக்கம் செல்வது என்ற கேள்விக்கான பதிலை தேவன் பேச காத்துக்கொண்டிருப்போம், ஆனால் நமக்கு கேட்பது அவரது மௌனம் மாத்திரம். இந்த 7 நாள் தியானம் தேவன் மௌனமாய் இருக்கும்போது நாம் எப்படி அவரது சித்தப்படி செயல்படுவது என்று போதிக்கிறது.
More