இருதயத்தின் எதிரிகள்மாதிரி
ஆண்டி ஸ்டான்லி: இருதயத்தின் எதிரிகள்
தியானம் நாள் 5
"உங்கள் ஆசைகளைத் தேவனிடம் எடுத்துச் செல்லுதல்."
வேதப்பகுதி: யாக்கோபு 4:1-3
இருதயத்தின் ஒவ்வொரு எதிரியும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு வகையில் கடன்பட்டிருக்கிறார் இருக்கிறார் என்ற எண்ணத்தினாலேயே பலனடைகிறது. குற்றவுணர்வோ "நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன்" என்று சொல்கிறது. கோபமோ "நீ எனக்குக் கடன்பட்டிருக்கிறாய்" என்ற எண்ணத்தால் மூட்டப்படுகிறது. "நமக்கு நாமே கடன்பட்டிருக்கிறோம் என்ற எண்ணத்தால் பேராசை தழைக்கிறது. நான்காம் எதிரியும் இதற்கு விதிவிலக்கல்ல. பொறாமை பொறாமை தேவன் எனக்குக் கடன்பட்டிருக்கிறார் என்று சொல்கிறது.
பொறாமை என்றவுடன் நாம் நம்மில் உள்ள குறைபாடுகளை - நம் அழகில், திறமைகளில், வாய்ப்புகளில், ஆரோக்கியத்தில், உயரத்தில், பரம்பரை சொத்துக்களில், மற்றும் பல குறைபாடுகளையே எண்ணுகிறோம். நிமிடம் இல்லாதவற்றைப் பெற்றிருக்கும் நபர்களே நம்முடைய பிரச்சனை என்றெண்ணுகிறோம். ஆனால் சிந்தித்துப்பாருங்கள் தேவனால் இவை அனைத்தையும் சரிசெய்திருக்க முடியும். உங்கள் நண்பருக்குக் கொடுத்த எல்லாவற்றையும் உங்களுக்கும் கொடுத்திருக்க முடியும். இதனாலேயே ஒருவேளை தேவன் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறார் என்று நீங்கள் எண்ணலாம்.
பொறாமை உங்கள் வாழ்க்கையை திகிலடைய செய்து, உங்கள் உறவுகளை முறித்து போடலாம். ஆனால் ஓர் நற்செய்தி என்னவெனில் இந்த எதிரிக்கும் மற்ற மூன்று எதிரிகளை போல ஒரு பலவீனம் உண்டு. அது நீங்கள் எதிர்பார்க்கா ஒன்று, பிறரிடம் இருப்பதைக் கண்டு ஆசை கொள்வதை நிறுத்தி, உங்களுக்கு எது நல்லதென்று தேவன் எண்ணுகிறாரோ அதை கேட்கத் தொடங்குங்கள்.
யோவான் கூறுவது போல நமக்குள் நடக்கும் வாக்குவாதங்களும் சண்டைகளும், நம் அவயங்களில் போர்செய்கிற ஆசைகளினாலேயே. நமக்கு வேண்டிய ஒரு விஷயம் நமக்குக் கிடைக்கவில்லை என்பதால் பிறருடன் சண்டை போடுகிறோம். யோவான் இந்த வேதப்பகுதியில் கூறும் ஆசைகள் தீர்க்க முடியா தாகங்கள் - பொருட்களுக்கான, பணத்திற்கான, அங்கீகாரத்திற்கான, வெற்றிக்கான, முன்னேற்றத்திற்கான, நெருக்கத்திற்கான, கௌிக்கைக்கான, காமத்திற்கான, உறவுகளுக்கான தாகம்.
உங்களுக்கு இருக்கும் ஒவ்வொரு தேவையும் தேவனுக்கு முக்கியமானதே, ஏனெனில் நீங்கள்தேவனுக்கு முக்கியமானவர். உங்கள் கவலை உங்கள் குடும்பத்தைக் குறித்தோ, உங்கள் வேலையைக் குறித்தோ, உங்கள் பெற்றோரைக் குறித்தோ, உங்கள் பிள்ளைகளைக் குறித்தோ, உங்கள் படிப்பைக் குறித்தோ, உங்கள் தோற்றத்தைக் குறித்தோ, எதுவாக இருந்தாலும் தேவனிடம் கூறுங்கள். உங்கள் கவலையை அவர் பார்த்துக்கொள்வார் என்ற சமாதானமும், முழங்கால்களிலிருந்து எழுந்து அந்த நாளை சந்திக்கும் தன்னம்பிக்கை வரும்வரை அவரிடம் உங்கள் தேவைகளை அவரிடம் கூறுங்கள்.
உங்கள் இருதயம் அவருக்குப் பிரியமானதாய் இருக்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.
உங்கள் இருதயம் எதற்காக ஏங்குகிறது? சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் ஏக்கங்களைக்குறித்து தேவனிடம் ஒளிவுமறைவின்றி உரையாடுங்கள். உங்களுக்கு எது நன்மையென்று அவர் கருதுகிறாரோ, அந்தப்படியே உங்களை ஆசீர்வதிக்க - அதன் மூலமாய் அவர் அன்பை உங்களுக்குக் காண்பிக்க அவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
ஆண்டியின் "இருதயத்தின் எதிரிகள்" - 5 நாள் YouVersion தியானம் உங்களுக்கு பிரோயஜனமாய் இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இன்னும் ஆழமான மற்றும் நிரந்தரமான சுகமும் புதுப்பித்தல் அடைய, உங்கள் அருகாமையில் உள்ள கடைகளில் ஆண்டி ஸ்டான்லியின் - Enemies of the Heart, புத்தகத்தை வாங்கி படியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எப்படி ஒரு ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களுடைய சரீரத்தைப் பாதிக்க முடியுமோ, அப்படியே உணர்வு மற்றும் ஆவிக்குரிய ரீதியாக ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களையும், உங்கள் உறவுகளையும் பாதிக்க முடியும். அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு, ஆண்டி ஸ்டான்ட்லி அவர்கள் உங்களுக்குள் காணப்படுகிற இருதயத்தின் நான்கு பொதுவான எதிரிகளான குற்றவுணர்ச்சி, கோபம், பேராசை, மற்றும் பொறாமை போன்றவைகளை உற்றுநோக்க உதவிசெய்து, அவைகளை எவ்வாறு அகற்றுவது என்பதைப் போதிக்கட்டும்.
More