இருதயத்தின் எதிரிகள்மாதிரி

Enemies Of The Heart

5 ல் 3 நாள்

ஆண்டி ஸ்டான்லி: இருதயத்தின் எதிரிகள்

தியானம் நாள் 3

காயங்களையும் கோபங்களையும் விட்டுவிடுதல்

வேதப்பகுதி: எபேசியர் 4:25-32

இருதயத்தின் இரண்டாவது எதிரி கோபம். நாம் கோபமாக இருக்கும்போது நமக்கு வேண்டியவற்றை அடைவதில்லை.

ஒரு கோபக்காரரை எனக்குக் காண்பியுங்கள், அவரால் காயப்பட்ட ஒருவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். தன்னிடம் இருந்த ஏதோ ஒன்று எடுத்துக்கொள்ளப்பட்டதினால் தான் அவர் காயப்பட்டிருப்பார் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். அவர்களுக்கு யாரோ ஒருவர் கடன் பட்டிருக்கிறார்கள்.

"நீ என் நற்பெயரைக் கெடுத்துவிட்டாய்." "என் குடும்பத்தை எடுத்துக்கொண்டாய்." "என் வாழ்க்கையின் சிறந்த நாட்களைப் பறித்துவிட்டாய்." "என் முதல் திருமணத்தைப் பறித்துக்கொண்டாய்." "என் வாலிப நாட்களைப் பறித்துக்கொண்டாய்." "என் தூய்மையைப் பறித்துக்கொண்டாய்." "நீ எனக்குக் கொடுக்கவேண்டிய பதவியுயர்வைக் கொடுக்கவில்லை." "எனக்கு ஒரு வாய்ப்பை நீ வழங்கவில்லை." இவ்வாறு தங்கள் கோபத்தை வெளிப்படுத்துபவர்களை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.

கோபத்தின் ஆணிவேர் நம்மிடமிருந்து ஏதோ ஒன்று பறிக்கப்பட்டது என்ற எண்ணமே. யாரோ நமக்குக் கடன்பட்டிருக்கிறார்கள். கடன் கொடுத்தவருக்கும் கடன் பெற்றவருக்குமான ஒரு உறவு அங்கே ஏற்படுகிறது.

நீங்கள் எப்படி? எந்த கடன் உங்கள் கோபத்திற்குக் காரணமாக இருக்கிறது?

எவ்வளவு நாட்கள் தான் உங்களைக் காயப்படுத்தியவரை உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த அனுமதிக்கப் போகிறீர்கள்? இன்னும் ஒரு மாதமா? ஒரு வருடமா? ஒரு பருவமா? எவ்வளவு நாட்கள்?

நான் உங்களுக்குச் சொல்கிறேன் இன்றே உங்களுக்கு ஏற்பட்ட காயங்களை விட்டுவிடுங்கள்!

நடந்து முடிந்தவற்றை இனி மாற்றமுடியாது என்பது உண்மை தான், ஆனால் நம் கடந்த காலம் நம் வருங்காலத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை என்பதும் உண்மையே.எபேசியர் நான்காம் அதிகாரத்திலே, " சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது" என்று கட்டளையிடப்பட்டிருக்கிறோம். நாம் அதை எப்படிச் செய்வோமெனில் "கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."

கோபத்திற்கு மருந்து மன்னிப்பு. நமக்கு ஏற்பட்ட எல்லா காயங்களுக்கும் நமக்கு சரிக்கட்டவேண்டும் என்று நாம் காத்துக்கொண்டு இருப்போமெனில், நாம் தான் அதற்கான விலையைக் கொடுக்கிறவர்களாய் இருப்போம். அதுவே நமக்கு உரியக் கடன்களை நாம் மன்னிப்போமானால் நாம் விடுதலை அடைவோம்.

நாம் பார்த்துவரும் கொடூரமான நான்கு எதிரிகளில் இதுவே - வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ நமக்குப் பிறர் ஏற்படுத்திய காயத்தினாலே உண்டான தீர்க்கப்படாத கோபம் - மிகவும் பாதிப்பைத் தரக்கூடியது என்று நான் கருதுகிறேன்.எனினும் ஒரு வகையில் மிகச் சுலபமாக மேற்கொள்ளக்கூடியதும் இதுவே. நம்மைக் காயப்படுத்தியவரை மன்னிக்கவேண்டும் என்று நாம் முடிவு செய்தால் போதும். நாம் அதை முடிவு செய்து "இனி நீ எனக்கு எந்தவகையிலும் கடன்பட்டு இருக்கவேண்டியதில்லை" என்று அறிக்கை செய்தால் போதும்.

இந்த நான்கு படி செயல்முறையைப் பின்பற்றுங்கள் (1) யாரிடம் நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்று கண்டுபிடியுங்கள். (2) அவர் உங்களுக்கு எந்த வகையில் கடன்பட்டிருக்கிறார் என்று தீர்மானியுங்கள். (3) அவரை மன்னித்து அந்த கடனை ரத்து செய்யுங்கள்.(4) மறுபடி அந்த கோபம் உங்களிடம் வளராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Enemies Of The Heart

எப்படி ஒரு ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களுடைய சரீரத்தைப் பாதிக்க முடியுமோ, அப்படியே உணர்வு மற்றும் ஆவிக்குரிய ரீதியாக ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களையும், உங்கள் உறவுகளையும் பாதிக்க முடியும். அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு, ஆண்டி ஸ்டான்ட்லி அவர்கள் உங்களுக்குள் காணப்படுகிற இருதயத்தின் நான்கு பொதுவான எதிரிகளான குற்றவுணர்ச்சி, கோபம், பேராசை, மற்றும் பொறாமை போன்றவைகளை உற்றுநோக்க உதவிசெய்து, அவைகளை எவ்வாறு அகற்றுவது என்பதைப் போதிக்கட்டும்.

More

ஆண்டி ஸ்டான்லி மற்றும் மல்ட்னோமா அவர்களுக்கு இத்திட்டத்தினை வழங்கியமைக்காக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய bit.ly/2gNB92i க்கு செல்லவும்