திட்ட விவரம்

தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் கண்டடையுங்கள்!மாதிரி

தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் கண்டடையுங்கள்!

3 ல் 3 நாள்

அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் நீங்கள் பிரவேசிக்க விரும்புகிறீர்களா?

தேவன் வாக்களிக்கிறவர் என்பதையும், தாம் வாக்குப்பண்ணியதை காத்துக்கொள்ள உண்மையுள்ளவர் என்பதையும் இப்போது நாம் அறிந்திருக்கிறோம்; அவற்றை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும்படி, அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்க நாம் என்ன செய்யவேண்டும்?

உங்களது கருத்தின்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களை அடைய நிபந்தனைகள் ஏதேனும் உள்ளதா?

வேதாகமத்தில் “முன்நிபந்தனைகள்” அல்லது “அடைவதற்கான நிலைமைகள்” பற்றி குறிப்பிடப்படவில்லை. உண்மையில், தேவன் எல்லா நபர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்குகிறவர். அதாவது, அவர் பட்சபாதமில்லாதவர்... அவர் பாரபட்சம் காண்பிப்பதில்லை! அவர் ஒருவனையும் புறக்கணி்ப்பதில்லை, அவர் உங்களையும் புறக்கணிக்கமாட்டார்! (ரோமர் 2:11 ஐக் காண்க)

மேலும், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் இயேசுவின்மீது நம்பிக்கைவைக்கிற அனைவருக்கும் சொந்தமானது என்று வேதம் சுட்டிக்காட்டுகிறது.

சிலகுறிப்பிட்ட "விசுவாச வீரர்கள்” தேவனுடைய வாக்குத்தத்தங்களை எந்த சூழ்நிலையில் சுதந்தரித்தார்கள் என்பதையும் வசனம் குறிப்பிடுகிறது. உதாரணமாக, சாராள்:

எபிரெயர் 11:11: “விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்”.

தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள விசுவாசம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். உங்களது மிக அற்புதமான ஜெயத்தைப் பெற்றுக்கொள்ள, பெரும்பாலும் நீங்கள் அசைக்க முடியாத விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும்; ஏனென்றால், இந்த விசுவாசம்தான் மிகக் கடினமான சூழ்நிலைகளின் மறுபக்கம் நமக்காக காத்திருக்கும் வெகுமதியைக் காண்கிறது.

வாக்குத்தத்தமானது நிறைவேறக் காலதாமதமாகும்போது, பொறுமையாய்க் காத்திருத்தல் உங்களுக்கும் உதவும்…

எபிரெயர் 6:15: “அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்”.

சில நேரங்களில், வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கு முன்பு, நீண்ட காலம் காத்திருக்க நேரிடலாம்... ஆகவே, எல்லாவற்றையும் செய்யக்கூடியவர் மீதான உங்கள் விசுவாசத்தில், விடாப்பிடியாகவும் உறுதியுடனும் இருப்பது நல்லது.

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உங்களுக்கானது; நீங்கள் அடைந்துகொள்ளும்படி உங்களுக்குமிக அருகிலேயே இருக்கிறது. விட்டுவிடாதீர்கள்!

நீங்கள் இருப்பதற்கு நன்றி!

இந்த வாசிப்பின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து எடுக்கப்பட்டது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை பெறுவதற்கு இங்கே இலவசமாக பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் கண்டடையுங்கள்!

தேவன் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மனிதர்களுக்கு உறுதியளிப்பது மிகவும் அவசியம் என்பதை தேவன் அறிந்திருந்தார்: அதாவது, மனிதர்கள் எல்லா நேரத்திலும் ஆண்டவர் மீது நம்பிக்க...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=ReadingPlan&utm_content=discovergodspromises

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்