ஏன் வலி?மாதிரி

ஏன் வலி?

3 ல் 2 நாள்

வலி எவ்வாறு கடவுளை மகிமைப்படுத்தும்?

வலியிலிருந்து தப்பிக்க முடியாது. இது உங்கள் வாழ்க்கையில் வருமா அல்லது உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு நடக்குமா என்பது முக்கியமல்ல; மாறாக, அது எப்போது, எவ்வளவு என்பதுதான். நீங்கள் ஒரு புயலில் இருந்து வெளியே வருகிறீர்கள் அல்லது மற்றொரு புயலுக்கு செல்கிறீர்கள்.

கடவுள் சில சமயங்களில் வலி, துன்பம் அல்லது சோதனைகள் வழியாக செல்ல அனுமதிக்கிறார், அதனால் அவருடைய பெயர் மகிமைப்படுத்தப்படுகிறது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ மற்றும் தானியேல் ஆகியோர் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நின்றனர், சோதனை நேரத்தில் குறை கூறாமல், வாழும் கடவுளை நம்பினர். எனவே, கடவுள் அவர்கள் நான்கு பேரையும் மனிதர்களுக்கு முன்பாக எவ்வாறு ஆசீர்வதித்து கௌரவித்தார் என்பதை நீங்கள் பார்க்கலாம்.

முதல் வாதைக்குப் பிறகு இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேற கடவுளால் உதவியிருக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? அவர் ஏன் அவர்களை பத்து வாதைகள் வழியாக செல்ல அனுமதித்தார்? நிச்சயமாக, கடவுள் அவற்றை அகற்றியிருக்கலாம். ஆனால் அவர் செய்தாரா? இல்லை, ஏன்? அவருடைய வல்லமையை நிரூபிப்பதற்காகவும் அவருடைய பெயரை மகிமைப்படுத்தப்படவும் அப்படி செய்தார். ஒவ்வொரு பத்து வாதைகளிலிருந்தும் கடவுள் எப்படி இஸ்ரவேலரை விடுவித்தார் என்பது ஒரு அதிசயம், ஆனால் கடவுள் இன்னும் அவரின் வல்லமையை காட்ட வேண்டியிருந்தது. செங்கடலைப் பிரிப்பது தான் கடவுள் விடுவிக்க விரும்பியவர்கள் மீது தம்முடைய அற்புத கரங்களையும், அவர் தண்டிக்க விரும்பியவர்கள் மீது அவருடைய தீர்ப்பையும் காட்டுவதற்கான இறுதி அதிசயம். பார்வோனின் இதயத்தை கடினப்படுத்துதல் செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

லாசரு மரித்தோரிலிருந்து எவ்வாறு உயிர்த்தெழுந்தார் என்பதைப் பற்றி யோவான் 11 ஆம் அத்தியாயத்தில் படித்தோம். தம்முடைய நல்ல நண்பர் நோய்வாய்ப்பட்டிருப்பதை இயேசு அறிந்தபோது, இந்த நோய் கடவுளை மகிமைப்படுத்துவதற்காக என்று கூறினார். நான்கு சுவிசேஷங்களில், நோய்வாய்ப்பட்டவர்களையும் இறந்தவர்களையும் அணுகுவதற்கு இயேசு எப்போதும் தயாராக இருப்பதை நாம் காணலாம். உதாரணமாக, யவீருவின் மகள் மற்றும் நயீன் ஊர் விதவையின் மகன். இருப்பினும், லாசரஸின் விஷயத்தில், ஆச்சரியமான அற்புதத்தின் மூலம் கடவுளுடைய பெயர் மகிமைப்படும்படி இயேசு வேண்டுமென்றே தனது வருகையை நான்கு நாட்கள் தாமதப்படுத்தினார். இயேசு அந்த துயரமான மரணத்தை வாழ்வாக மாற்றினார். தானியேல், அவருடைய நண்பர்கள் மற்றும் லாசரு ஆகியோருடன் அவர் செய்தது போல் கடவுள் இப்போது கிரியை செய்ய முடியும். அவர் சரியான நேரத்தை அறிந்திருக்கிறார், மேலும் அவர் தனது நேரத்தில் எல்லாவற்றையும் அழகாக்குகிறார்.

நீங்களும் கூட, உங்களால் தாங்கமுடியாதது என்று நீங்கள் நினைக்கும் கடுமையான பிரச்சனையை சந்திக்கலாம். ஆனால் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், என் அன்பான சகோதரனே சகோதரியே, கடவுள் அவருடைய கிரியையை செய்ய அனுமதியுங்கள், அவர் உங்கள் மீது கரங்களை வைப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது நெருக்கடியை எதிர்கொண்டாலும் நீங்கள் நிறைவாக இருக்கும்போது நீங்கள் ஐஸ்வர்யவான்கள். எதுவாக இருந்தாலும் கடவுளை நம்ப கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கடவுளை நம்பி, உங்கள் மூலம் செயல்பட அனுமதித்தால், உலக அக்கினி அல்லது சிங்கம், ஏன் மரணம் கூட உங்களுக்கு தீங்கு செய்யாது. உங்களை படைத்தவர் உங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்பார், அவருடைய ராஜ்யத்தின் விரிவாக்கத்திற்காக அவருடைய பெயர் மகிமைப்படுத்தப்படும்.

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

ஏன் வலி?

இன்று நீங்கள் போராடும் பகுதி, நாளை கடவுள் உங்களைப் பயன்படுத்துவார். மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்கு கடவுளுடனும் அவருடைய வார்த்தையுடனும், கடவுள் ஏன் நம் வாழ்வில் வலியையும் துன்பத்தையும் அனுமதிக்கிறார் என்பதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். இந்தத் திட்டத்தில் சேர்ந்து, வலியின் பின்னால் மறைந்திருக்கும் திட்டங்களைக் கண்டறியுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Evans Francis க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.evansfrancis.org