எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்மாதிரி
![Worry for Nothing](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F29446%2F1280x720.jpg&w=3840&q=75)
கவலையின்றி வாழுங்கள்
நாம் கவலைபடுவது தேவனுடய சித்தம் அல்ல என்பதை நாங்கள் ஒன்றாகக் கண்டுபிடித்தோம். கவலைக்கான மாற்றுமருந்து அமைதியை உருவாக்கும் பிரார்த்தனை என்பதையும் நாங்கள் கண்டு அறிந்தோம்.
ஆனால் கவலை நம்மைப் பிடிக்கும் முன் அதை எப்படி நிறுத்துவது.
அமைதியான வாழ்க்கையை வளர்ப்பதே இதற்குப் பதில் என்று நான் நம்புகிறேன்.
ரோமர் 12:18:
ல் இதையே வேதாகமமும் கூறுகிறது‘'கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.’
எல்லா மனுஷரோடும். இது நம்மையும் உள்ளடக்கியது!
நாம் மற்றவர்களுடன் அல்லது நமக்குள்ளேயே போரில் ஈடுபட்டால், அதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கும். ஆனால் நாம் அமைதியான வாழ்க்கையை வடிவமைத்திருந்தால், நாம் கவலையின்றி வாழலாம்.
அமைதியாக வாழ்வதில் ஞானம் பெரும் பங்கு வகிக்கிறது.
- முடிந்த வரையில் செலவு செய்வதை விட, சேமியுங்கள். அப்போது உங்கள் நிதிநிலையில் நிம்மதி ஏற்படும்.
- ஒவ்வொரு நாளும் 10 நிமிடம் தாமதமாக வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக, 10 நிமிடங்கள் முன்னதாக செல்லுங்கள். அப்போது உங்கள் பணியிடத்தில் கிடைக்கும் நல்ல நற்பெயரால் நீங்கள் நிம்மதி அடைவீர்கள்.
- கடைசி நிமிடத்தில் உங்களை படுக்கையில் இருந்து இழுப்பதை விட, முன்னதாக எழுந்து உங்கள் நாளின் தொடக்க நேரத்தை தேவனிடத்தில் செலவிடுங்கள். அன்றைய தினம் வெற்றி பெறுவதற்கு நீங்கள் உங்களை அமைத்துக் கொண்டீர்கள் என்பதை அறிந்து நீங்கள் நிம்மதி அடைவீர்கள்.
இந்த எடுத்துக்காட்டுகள் போன்ற ஞானமான செயல்கள் நம் வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் பயன்படுத்தப்படலாம். நீதியாக வாழ்வது ஒரு ‘நல்ல யோசனை’ மட்டுமல்ல, அதையே வேதமும் ஊக்குவிக்கிறது, ஏனெனில் அது நம் வாழ்வில் அமைதியை உருவாக்குகிறது.
தேவனிடத்தில் இருந்து பேரும் அமைதியைப் பற்றிய நற்செய்தி என்னவென்றால், நண்பர்களே, அதைத் தொந்தரவு செய்ய முடியாது. இது இறுதி பரிசளிப்பவர் வழங்கிய பரிசு.
யோவான் 14:27 இவ்வாறு கூறுகிறது:
“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.”
அமைதியான வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நீதியாக வாழுங்கள்.
புத்திசாலித்தனமாக வாழுங்கள்.
கவலையற்ற வாழ்க்கை வாழ்வதற்கான மூலப்பொருள்கள் இவை.
அடுத்த படிகள்
இறுதியாக, யோவான் 14:27-ஐ நினைவுபடுத்துங்கள்.
கவலை உங்கள் கதவைத் தட்டும் போதெல்லாம், தேவன் உங்களுக்கு அமைதியை பரிசு செய்திருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். அது உங்களிடமிருந்து எடுக்கப்பட முடியாத ஒரு பரிசு..
CBN ஐரோப்பாவில் இருந்து மேலும் தியானங்களுக்கு, அல்லது ஊழியத்தைப் பற்றி மேலும் அறிய, இங்கே சொடுக்கவும்
இங்கே.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Worry for Nothing](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F29446%2F1280x720.jpg&w=3840&q=75)
கவலை என்பது நமது நேரம், ஆற்றல் மற்றும் அமைதியின் திருடன். இப்படி இருக்க நாம் ஏன் கவலைக்கொள்ள வேண்டும்? இந்த 3-நாள் தியானத்திட்டதில், கவலையை பற்றியும், நாம் ஏன் கவலைக்கொள்கிறோம் என்றும், எப்படி அதை நிறுத்த வேண்டும் என்றும் பார்ப்போம்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)
வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55338%2F320x180.jpg&w=640&q=75)
விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)