எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்மாதிரி

கவலையை மேற்கொள்ளுதல்
இயேசு நம் கவலையில் நம்மைத் தனியாக விடுவதில்லை. நாம் அதை எதிர்கொள்வோம் என்பதை அவர் அறிந்திருந்தார், அது நம் வாழ்வில் வரும்போது பின்பற்ற வேண்டிய ஒரு செயல்முறையை நமக்கு அளித்தும் உள்ளார். நாம் ஆதரவற்றவர்களாக விடப்படுவதில்லை. கவலையினை எதிர்கொள்ள வேதாகமமும் நமக்கு பெரிய ஞானத்தைப் போதிக்கிறது.
பிலிப்பியர் 4:6-7ஐப் படிக்க இடைநிறுத்தவும்.
எவ்வளவு அற்புதம்! வேதத்தில் எழுதப்பட்ட கவலைக்கான சூத்திரம் நம்மிடம் உள்ளது!
கவலை + பிரார்த்தனை (தேவைகள் + நன்றி அறிக்கை) = அமைதி.
ரசீதுகள் வரும் போது - பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வருமானம் மற்றும் உங்கள் நிதி வாழ்க்கையில் அவர் ஏற்கனவே செய்த அனைத்திற்கும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
உங்களது அன்புக்குரியவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லயா - பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் உறவுக்கும் அன்பிற்கும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
உங்கள் குழந்தை பள்ளியில் முதல் நாள் இருக்கும்போது - பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்கு அந்த குழந்தையை பரிசாக தந்தத்ற்க்கும் மற்றும் பள்ளியில் சேர்த்து படிப்பு வழங்குவதற்கு பெலன் தந்த தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
பின், நீங்கள் ஜெபித்து, நன்றி செலுத்தி, உங்கள் தேவைகளைச் சமர்ப்பித்தவுடன், தேவன் மட்டுமே வழங்கக்கூடிய அமைதி உங்களைக் கழுவ அனுமதியுங்கள்.
உடனடியாக அந்த அமைதி வரவில்லை என்றாலும், நீங்கள் ஜெபத்தின் மூலம் தேவனுக்குள் இருக்கும் போது, அந்த அமைதி வரும். தேவன் அல்லவோ வாக்குறுதி அளித்துள்ளார்.
நமக்கு ஒரு கவலை நிறைந்த சூழல் வரும் வேளையில் தொலைபேசியை எடுத்து வேண்டியவரை தொடர்புகொள்வதற்கோ அல்லது நம் கவலைகளை வேறொருவருடன் பகிர்ந்துகொள்வதற்கோ நம் மனம் முற்படும். இதற்கு நேரமும் இடமும் உண்டு. ஆனால் கவலையைப் போக்க சிறந்த வழி முதலில் தேவனிடம் செல்வதுதான். இது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை மற்றும் நமக்கான ஆசீர்வாதம் மட்டுமல்ல, கவலை நம் மனதில் அதிகமாகாமல் நமது இருதயத்தை காக்கிறது.
தேவன் நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார் நண்பர்களே. முடிவில்லாத கவலையில் நாம் உட்காருவதை விட, நாம் அவரிடம் வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (1 பேதுரு 5:7-ஐ வாசியுங்கள்)
வேதத்தில் நாம் கண்டுபிடித்த சமன்பாட்டின் அற்புதமான விஷயம் என்னவென்றால், அதை எங்கும், எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். நமது நம்பிக்கை ஒரு உறவை அடிப்படையாகக் கொண்டது, ஒரு மதம் அல்ல மற்றும் கவலை எழும்போதெல்லாம், பிரார்த்தனை மூலம் நாம் தேவனை அணுக முடியும் என்பதை அறியவேண்டும்.
கவலை + பிரார்த்தனை (தேவைகள் + நன்றி அறிக்கை) = அமைதி.
இன்றைய மகிழ்ச்சியை எதிரி பறிக்க அனுமதிக்காதீர்கள். உங்களது கவலைகளை இயேசுவிடம் எடுத்துச் செல்லுங்கள், அவர் உங்களை அமைதியால் நிரப்ப அனுமதியுங்கள்.
அடுத்த படிகள்
நாள் 1 போலவே, கவலையை எதிர்த்துப் போராட உதவும் ஒரு முக்கிய வேதாகம வசனத்தை நினைவுபடுத்தப் போகிறோம்.
பிலிப்பியர் 4:6-7-ஐ வாசியுங்கள். அது பரிச்சயமாகும் வரை தொடரவும்.
இப்போது, நீங்கள் கவலையை அனுபவிக்கும் போதெல்லாம், அந்தத் தருணத்தில் உங்களுக்கு உதவ ஒரு வசனம் இருக்கும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கவலை என்பது நமது நேரம், ஆற்றல் மற்றும் அமைதியின் திருடன். இப்படி இருக்க நாம் ஏன் கவலைக்கொள்ள வேண்டும்? இந்த 3-நாள் தியானத்திட்டதில், கவலையை பற்றியும், நாம் ஏன் கவலைக்கொள்கிறோம் என்றும், எப்படி அதை நிறுத்த வேண்டும் என்றும் பார்ப்போம்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

ஒரு புதிய ஆரம்பம்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

நம்மில் தேவனின் திட்டம்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
