BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் மாதிரி
இயேசுவே நம்முடைய சமாதானம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். இயேசு மனிதகுலத்தை ஒருவருக்கொருவரிடமிருந்தும் தேவனிடமிருந்தும் பிரித்தெடுக்கும் அனைத்து காரியங்களையும் நீக்கி, இப்போது மற்ற எல்லோருக்கும் தனது அமைதியை பரிசாக வழங்குகிறார். இயேசுவை பின்பற்றுகிறவர்களாகிய நாம் மனத்தாழ்மை, கனிவு, பொறுமை மற்றும் அன்பும் உடையவர்களாய் இருந்து இந்த பரிசாகிய சமாதானத்தை பெறவும், தக்கவைக்கவும், பெருகப்பண்ணவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
வாசிக்கவும் :
எபேசியர் 2: 11-15, எபேசியர் 4: 1-3, எபேசியர் 4: 29-32
சிந்திக்கவும்:
இந்த வேத பகுதியின் படி, முற்றிலும் வேறுபட்ட பிரிந்திருக்கும் இரண்டு மக்கள் இனத்திற்கிடையே (யூதர்கள் மற்றும் புறஜாதியினர்) இயேசு எப்படி சமாதானத்தை ஏற்படுத்தினார், அவர் ஏன் அதை செய்தார் (வசனம் 2:16 பார்க்கவும்)?
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் யாரிடமிருந்தாவது ஒதுக்கப்பட்டிருப்பதாக உணர்கிறீர்களா? அந்த நபருடன் மீண்டும் அமைதியை அனுபவிக்க விரும்புகிறீர்களா? ஏன் ? அல்லது ஏன் கூடாது? சமாதானம் செய்யும்படி இயேசு என்ன செய்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இதைப் பற்றி யோசிக்கும்போது என்ன கேள்விகள் மற்றும் உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன?
எபேசியர் 4: 1-3 ஐ கவனமாக மறுபடி படிக்கவும். இயேசு தனது சீடர்களுக்காக ஏற்படுத்திய ஒற்றுமையை நிலைநாட்ட எப்படி மனத்தாழ்மையும், தயவும், பொறுமையும், அன்பும் உதவுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்த நல்லொழுக்கங்களில் ஒன்று இல்லாமல் போகுமானால் என்ன நடக்கும்?மற்றவர்களுக்காக நீங்கள் முடிவு செய்ய முடியாது, ஆனால் அமைதியை நிலைநாட்ட இன்று நீங்கள் எடுக்கக்கூடிய ஒரு நடைமுறை முடிவு என்ன?
எபேசியர் 4: 29-32 ஐ கூர்ந்து கவனிக்கவும். இயேசு உங்களை எப்படியாக மன்னித்தார்? உங்களின் மன்னிப்பு யாருக்குத் தேவை?
இந்த திட்டத்தைப் பற்றி
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்கு BibleProject நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://bibleproject.com