எதிர்பார்ப்பின் கிறிஸ்மஸ்: ஒரு 5-நாள் அட்வென்ட் திட்டம்மாதிரி

Anticipating Christmas: A 5-Day Advent Plan

5 ல் 3 நாள்

சமாதானத்தின் வாக்குத்தத்தம்

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” Luke 2:10-11 NIV

கிறிஸ்மஸ் கதையைச் சொல்லுகிற பைபிளின் நான்கு சிறிய அத்தியாயங்களில், "பயப்படாதே" என்று ஐந்து முறை குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tஇயேசுவின் பிறப்பு சமயத்தில் உண்டாயிருந்த சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சமாதானம் மட்டுமில்லை. மேரி மற்றும் ஜோசப்பின் உறவில் இறுக்கம் இருந்தது. அரசியல் கொந்தளிப்பு உண்டாயிருந்தது. தகர்ந்த இந்த உலகிற்கு ஒரு இரட்சகர் மிக மோசமாக தேவையாக இருந்தது. பழக்கப்பட்டதாக தெரிகிறதா? 

உலகத்தை மீட்பதற்கான கடவுளின் திட்டத்தில் இயேசுவின் பிறப்பு மிக முக்கியமான படிகளில் ஒன்றாகும். இயேசுவின் வருகை ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தது. இது ஒரு இருண்ட, அவநம்பிக்கையான முடிவைப் போல தோன்றிய ஒன்றிலிருந்து பிறந்த ஒரு தொடக்கமாகும். 

கடவுள் தம்முடைய குமாரனை நம்மிடத்தில் அனுப்பினார், ஏனென்றால் அவருடைய பரிபூரண சமாதானத்தை நாம் அனுபவிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அத்தனை ஆண்டுகளுக்கு முன்பு மரியம், ஜோசப் மற்றும் மேய்ப்பர்களுக்கு அவர் செய்தது போல், உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்தும்படி கடவுளிடம் கேட்கக்கூடிய வாழ்க்கையின் ஒரு பகுதியை இப்போது, சற்று நிதானித்து சிந்தித்துப் பாருங்கள்.. 

சமாதானத்திற்கான பிரார்த்தனை:

கடவுளே, 

சமாதானத்தின் பிரபுவாகிய உமது குமாரனை எங்களுக்கு அனுப்பியதற்கு நன்றி.

Pஇந்த கிறிஸ்மஸில் உமது சமாதானத்தினால் என் இருதயத்தையும் மனதையும் காக்கவும். கவலை, பதட்டம் அல்லது பயம் ஆகியவற்றால் என்னைப் பாரப்படுத்தும் விஷயங்களை நீர் அறிவீர்.

உம்மில் என் மனதை நிலைநிறுத்த எனக்கு உதவும், மேலும் தொட்டுணரத்தக்க உமது அன்பின் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ள எனக்கு உதவும். 

Tஎனக்காக அக்கறை காட்டியதற்கும், என் பட்சமிருந்து என் போராட்டங்களில் போரிட்டதற்கும் நன்றி. நீர் எனக்கு ஒருபோதும் பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை, மாறாக ஜீவனையும் சமாதானத்தையும் கொண்டுவந்தீர்.

என் பயங்களை உமக்கு முன்பாக வைத்து, முழு மனதுடன் உம்மை விசுவாசிக்க இந்த காலத்தில் எனக்கு உதவும்.

இயேசுவின் நாமத்தில், 

ஆமென்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Anticipating Christmas: A 5-Day Advent Plan

பெரும்பாலும் கிறிஸ்மஸுக்கு நம் இதயங்களைத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே விடுமுறைகள் வந்து போய் விடும். அட்வென்ட் என்பது கடவுள் நம்முடன் வந்தார், இன்னும் நம்முடன் இருக்கிறார், மீண்டும் வருவார் என்பதை நினைவில் கொள்வதற்கான வழி. அடுத்த 5 நாட்களில், நம்பிக்கை, அமைதி, அன்பு மற்றும் மகிழ்ச்சி ஆகிய நான்கு அட்வென்ட் கருத்துக்களை ஆராய்வோம்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.