எதிர்பார்ப்பின் கிறிஸ்மஸ்: ஒரு 5-நாள் அட்வென்ட் திட்டம்மாதிரி

Anticipating Christmas: A 5-Day Advent Plan

5 ல் 2 நாள்

நம்பிக்கையின் சிலிர்ப்பு

ஒரு இருண்ட, அமைதியான இரவில் நீங்கள் செம்மறி ஆடுகளால் சூழப்பட்ட வயலில் இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். திடீரென்று, தேவதூதர்கள் ஒரு கூட்டம் தோன்றி, 400 வருட காத்திருப்புக்குப் பிறகு, உலகத்தின் நம்பிக்கை வந்துவிட்டது என்று பறைசாற்றுகிறார்கள் -இம்மானுவேல் என்று அழைக்கப்படும் ஒரு குழந்தை, "கடவுள் நம்முடனே." 

கடினமான சூழ்நிலைகள் அல்லது அனுபவங்களில் கவனம் செலுத்துவது எளிதாக இருக்கும், குறிப்பாக கடந்த ஆண்டின் சவால்களுக்குப் பிறகு. ஆனால் அட்வென்ட் நமக்கு கடவுளின் வாக்குறுதிகளை சிந்திப்பதற்கும் மற்றும் இயேசுவின் மீது நம் கண்களை பதிக்கவும் வாய்ப்பை வழங்குகிறது. 

இந்தக் காலம், இத்தனை ஆண்டுகளாக மேய்ப்பர்கள் பெற்றிருந்த அதே நம்பிக்கைக்கு நாமும் வழியைப் பெற்றிருக்கிறோம் என்பதின் ஞாபகப்படுத்தலாக விளங்குகிறது —பிரபஞ்சத்தின் கடவுள் நம் அழுகையைக் கேட்கவும், நம் இருதயங்களைக் குணப்படுத்தவும் இறங்கி வந்திருக்கிறார் என்கிற அறிவில். 

இருள் எவ்வளவு வலிமையானதாகவோ அல்லது பயமுறுத்துவதாகவோ தோன்றினாலும், கடவுளுடைய வார்த்தையில் எழுதப்பட்ட வாக்குறுதிகளில் உறுதி இருப்பதாக நாம் நம்பலாம். இந்த காலத்தில் நாம் நம்பிக்கையில் சாய்ந்திருக்கும்போது, சிறிது நேரம் நிதானித்து, கடவுளின் உண்மைத்தன்மையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

நம்பிக்கைக்கான பிரார்த்தனை:

கடவுளே, 

நாங்கள் கிறிஸ்துமசை நெருங்கும்போது, என் வாழ்க்கையிலும், எனது குடும்பத்திலும், எனது சமூகத்திலும் நீர் செய்த அனைத்தையும் நிதானித்து நினைவில் வைத்துக் கொள்ள எனக்கு உதவும்.  

Iஇரட்சிக்கிற தேவன் நீரே என்பதால் உம்மைத் துதிக்கிறேன். என் நம்பிக்கை சூழ்நிலைகள் அல்லது மக்கள் மீது அல்லாமல் உம் மீது உள்ளதற்கு நான் உமக்கு நன்றி கூறுகிறேன்.

நான் உம்மை நம்பியிருப்பதால், நீர் உம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உண்மையில் முக்கியமானது என்ன என்பதை இன்று எனக்கு நினைவூட்டும். என் காத்திருப்பின் நடுவில் நீர் எப்படி கிரியை செய்கிறீர் என்பதைக் காண எனக்கு உதவும். 

இந்த கிறிஸ்மஸ் காலத்தில் என்னை உம்முடன் நெருங்கி வரச் செய்து, உமது வாக்குறுதிகளின் நிறைவேறுதலுக்கு என் இருதயத்தை தயார்செய்யும்.

Iஇயேசுவின் நாமத்தில்,

ஆமென். 

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Anticipating Christmas: A 5-Day Advent Plan

பெரும்பாலும் கிறிஸ்மஸுக்கு நம் இதயங்களைத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே விடுமுறைகள் வந்து போய் விடும். அட்வென்ட் என்பது கடவுள் நம்முடன் வந்தார், இன்னும் நம்முடன் இருக்கிறார், மீண்டும் வருவார் என்பதை நினைவில் கொள்வதற்கான வழி. அடுத்த 5 நாட்களில், நம்பிக்கை, அமைதி, அன்பு மற்றும் மகிழ்ச்சி ஆகிய நான்கு அட்வென்ட் கருத்துக்களை ஆராய்வோம்.

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.