கிறிஸ்துவுக்குள் கண்டு கொண்ட வாழ்வுமாதிரி
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம். 2 கொரிந்தியர் 7: 1
வாக்குத்தத்தங்கள் பெற்றவர்கள் நாம். நமது நோக்கம் பரிசுத்தமாகுதல். நம்மை அனுதின வாழ்வில் அசுசிப் படுத்தம் அனைத்துக் காரியங்களிலிருந்தும் கழுவி சுத்திகரிக்கப்படுதலே பரிசுத்தம். நம்முடைய சரீர ஆவி ஆத்துமாவை கரை படுத்தும் எந்த காரியத்திலும் கவனமாக இருந்து அவைகளினின்று சுத்திகரிக்கப்படுதல் அவசியம். கடவுளுக்குப் பயந்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். அப்படி நடப்பவர்கள் முழுமையான பரிசுத்தத்துக்கு ஆளாவார்கள். சிறு சிறு காரியங்களில் பரிசுத்தத்தின் விளைவு தென்பட வேண்டும். உறவுகளிலே பரிசுத்தம், மனந்திறந்து பவுலைப் போல நாங்கள் யாரையும் குற்றப்படுத்த விரும்பவில்லை, நாங்கள் உங்கள் கூடவே வாழ்வோம் சாவோம் என உறவின் பெலத்தை கூட்டி வழங்க வேண்டும். யாருடைய காரியத்திலும் சுய லாபத்துக்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை , யாரையும் சீர்குலைக்கவும் விரும்பவில்லை என நிச்சயப்படுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் சச்சரவுகளும் இதயத்தில் பயங்களும் . உள்ள கஷ்ட நேரங்களிலும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிற அனுபவம் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதை உண்மைப் படுத்தவேண்டும். ஒருவரை ஒருவர் தாங்குகிறவர்களாக இருத்தல் அவசியம். தாக்குகிறவர்களாக அல்ல, தொடர்பு முக்கியம். கடிதத் தொடர்போ ,நேரடி தொடர்போ சக மனிதர்களை அனுப்பி வைத்து ஏற்படுத்துகின்ற தொடர்போ எதுவாயினும் செய்து ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த வேண்டும். எந்த விதத்திலும் நம்முடைய எழுத்தோ , பேச்சோ அவர்களுக்கு மனமடிவை ஏற்படுத்தக் கூடாது. ஒரு வேளை மனமடிவைக் கொடுத்தாலும், பின்னால் அது அவர்களுக்கு நல் பாடம் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அடுத்தவரிடத்திலும் குற்றமில்லாமை உண்டென எண்ணி அவர்களது குற்றமில்லாமையை நிரூபித்து அவர்களை பெலப்படுத்த வேண்டும். அவர்களோடு, அவர்களாய் உணர்வுகளிலும், அர்ப்பணிப்பிலும் ஒன்று சேர்ந்து வாழ்வதிலும் முழு பங்கெடுக்க வேண்டும். எப்பொழுதும் சத்தியத்தையே பேசி சத்தியத்தை மேன்மைப் படுத்த வேண்டும். ஒவ்வொருவருடைய விளக்கங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படியும் அன்பை ஒருவருக்கொருவர் வழங்கி வாழ வேண்டும். ஒருவரையொருவர் சார்ந்து ஒருவருக்காக ஒருவர் வாழ வேண்டும். உறவுகள், சம்பவங்கள், அணுபவங்கள் இவைகளினூடே கடவுள் தரும் பரிசுத்தத்தை வெளிகொணர வேண்டும். பரிசுத்தமானோமென்றால் அவை அன்றாட நடவடிக்கையில் தெரிய வேண்டும்.
கடவுளுக்குள் உதாரத்துவமானோம் 2 கொரிந்தியர் 8 : 7 பின் பாகம்
எல்லாமுடைய அவர் நம்மை உதாரத்துவமுள்ளவராக மாற்றுவதற்காக அவர் வளங்களையெல்லாம் நமக்கு வழங்குவதற்காக அவர் தரித்திரரானார். நாம் வளம் பெற்றோம். அவர் தம்மையே நமக்காக சிலுவையிலே கொடுத்ததினாலே அப்படியாயிற்று. பெற்றுக் கொள்வதை விட கொடுத்தலே மேலானது என அப்படியானார். அவரைப் பெற்ற நாம் இந்த அன்பின் பணிவிடையிலே பிறருக்கு கொடுத்து வாழும் வாழ்விலே பூரணராகக் கடந்து செல்வோம். உதாரத்துவமாய்க் கொடுக்கிறவனிடத்தில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். என்னை முதலாவதாக இப்பணிக்குக் கொடுப்பதின் மூலம் எனது உடைமைகளையெல்லாம் தாராளமாக அளிக்க முன் வருகிறேன் என்ற அர்ப்பணிப்பை பெற்றுக் கொள்கிறோம். கொடுத்தலுக்கும் அவரே மாதிரியானார். பொது வாழ்வில் அவர் பணிக்காக எனது பொருள்களை தாராளமாகக் கொடுக்கிறேன். எங்களால் முடிந்ததை அதிலும் மேலாக சுய சித்தத்தின்படி பிரியமாய் அப்படி செய்கிறோம் . இந்த உதவி கடவுளுடைய மக்களுக்கு போய் சேர்வதால் அப்படி செய்கிறோம். நாம் கொடுப்பதால் மற்றவரையும் கொடுக்கச் செய்கிறோம். விசுவாசத்திலும், அறிவிலும் பேச்சாற்றலிலும் வளம் பெற்றோம். இந்த வளமும் கர்த்தருக்காக செலவழிக்க விழைகிறோம். கொடுத்தலின் பிரமாணத்திலே யாதொருவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. ஏனென்றால் இந்த ஈகை அன்பின் அடிப்படையில் வெளியாக வேண்டிய ஒன்று.என்ன கொடுத்தோம் எப்போது கொடுத்தோம் என்று கணக்கு வைப்பதில்லை. இச்செயலுக்கு உடன்பட்டு பிரியத்தோடு செய்கிறோம். துவங்கிய இந்நற் செயலை இடையிலே விடுவதாக இல்லை. தொடர்ந்து கொடுப்போம். கொடுப்பதிலும் சம பிரமாணத்தை வலியுறுத்த வேண்டும். எளியவர் வலியவர் என்றல்ல பெலவீனர் பெலனுள்ளவர் என்றுமல்ல அவரவருக்கு அளிக்கப்பட்ட கிருபையின் படி இந்த ஈகையின் வரம் வெளிப்படும். இந்த பணிவிடையில் மனமுவந்து கொடுப்பதை சேகரிப்பவர்களின் கூட்டான்மையும் வரவேற்கத்தக்கது. சேகரிப்பதை செலவழிக்கும் உக்கிராணத்துவமும் முக்கியம். இவ்வூழியம் கடவுளது கண் பார்வையிலே வைக்கப்பட்டிருக்கிறது. அன்பினால் ஏவப்பட்டு கொடுப்பவர்களும், கொடுக்க தூண்டுபவர்களும், சேகரிப்பவர்களும் , சேகரித்ததைச் சரியான தேவை உள்ளவர்களுக்கு சேரப்பண்ணுகிறவர்களும் அனைவரும் திருச்சபையின் பிரதானிகள் திருச்சபையின் புகழுக்கக கடவுளின் மகிமைக்காக இப்பணி செயலாகிறது. ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவுடன் வாழும் வாழ்வு காணமுடியாத கடவுளை கிறிஸ்து இயேசுவுக்குள் கண்டோம். நண்பராகக் கண்டோம். நம்மை ஆலயமாக்கிக் கொண்டார். பரிசுத்தம் தந்தார். அவர் தம்மையே மனுக்குலத்துக்கு தந்ததினால் ஈகை இன்னதென்று அறிய வைத்தார். நம்மையும் பிறருக்காக வாழ பயிற்றுவிக்கிறார். அவரால் அன்பு கூறப்பட்டவருக்கு நாமும் கடனாளிகளானோம். பொதுவான சேவை செய்யவும் குறிப்பானவர்களுக்கு ஊழியம் செய்யவும் நம்மை தெரிந்து கொண்டார். இந்த பிரயோஜனமான ஊழியத்துக்கு நம்மை தகுதியுள்ளவராக்குகிறவர் அவரே. அன்பில்லாதவன் தேவனை அறியான் தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பினால் ஊழியத்தில் நம்மையும் வல்லமை படுத்தினார். கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக. அவர் தந்த இந்த வாழ்வு பூமியிலே பரலோக வாழ்வு. முடிவோ நித்திய வாழ்வு. கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவுடன் என்றும் வாழும் வாழ்வு ஆமென்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக செ. ஜெபராஜ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய jebaraj1.blogspot.com க்கு செல்லவும்.