கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்மாதிரி

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

4 ல் 3 நாள்

ஒரு நேரத்தில் ஒரு நாள் 

ஒவ்வொரு நாளுக்கும் அதன் பாடுகள் இருக்கின்றன. நீங்கள் ஒத்துக் கொண்டாலும் இல்லை என்றாலும் இது தான் உண்மை. ஒவ்வொரு நாளுக்கும் புதிய இரக்கங்கள் இருக்கின்றன. நம் வீட்டிலும், வேலையிலும், பிள்ளைகளுடனும், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நமக்கு இருக்கும் புதிய புதிய சவால்களுக்குத் தேவையான இந்த புதிய இரக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இது வேண்டும் என்றால் அடிப்படையாக, ஒரு தடவைக்கு ஒரு நாளை மட்டுமே நாம் எதிர் கொள்ளும் மனநிலை இருக்க வேண்டும். அதில் உயர்வுகள், தாழ்வுகள், லாபங்கள், நஷ்ட்டங்கள் போன்றவை இருக்கவே செய்யும். அடுத்த நாள், அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம்,  நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திக்கும் போது தான் நமக்குள் கவலை அதிகம் உருவாகிறது.  இந்த உலகத்தில் மனிதனாக இருக்க வந்த நம் கர்த்தராகிய இயேசு எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில் எந்த நன்மையும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.  மத்தேயு 6 ஆம் அதிகாரத்தில் அவர் நம்மை வயல்வெளியின் பூக்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் கவனிக்கச் சொல்கிறார். இவை, வாழ்க்கை வருவது போலவே அவற்றை அனுபவித்துச் செல்கின்றன. கவலை இல்லை, கடினமான உழைப்பு இல்லை, கொடுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கின்றன. 1 பேதுரு 5 ஆம் அதிகாரம் 7 ஆம் வசனம் ‘மெசேஜ்’ என்னும் வேதாகம திருப்புதலில் இவ்வாறாக சொல்கிறது, “கர்த்தருக்கு முன்பாக சுதந்திரமாக கவலை இல்லாமல் வாழுங்கள்; அவர் உங்கள் மேல் அதிக அக்கறையுடன் இருக்கிறார்.” இது எத்தனை உற்சாகத்தை நமக்குத் தருகிறது? இந்த உலகத்தின் பாரத்தை நம் தோள்களில் வைத்துக் கொள்ளாமல் சுதந்திரமாக வாழ நமக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது எத்தனை அற்புதமான செய்தி! ஒவ்வொரு நாளும் கர்த்தர் நமக்கு முன்பாகப் போகிறார் என்றும் நமக்குப் பின்பாகவும் அவர் வருகிறார் என்றும் நம்பிக்கையுடன் ஒரு நாளைத் துவங்குவது என்பது எத்தனை உதவிகரமானதாக இருக்கும்! இதுவே ஒவ்வொரு நாளையும் எளிய விசுவாசத்துடன் முடிக்கவும், நாளைய நாளைப் பற்றி கர்த்தர் அக்கறையுடன் பார்த்துக் கொள்வார் என்று நினைப்பதும் எத்தனை ஆசீர்வாதமான ஒரு அனுபவம்! ஏனென்றால் கர்த்தர் நம் காலத்தைக் கடந்து அதற்கு வெளியில் இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் அறிந்தவர். இதற்கு அர்த்தம் என்னவென்றால், நமக்கு வரும் எல்லாவற்றையும் கையாளும் ஞானத்தை அவர் நமக்குத் தருவார். தடைகளை மேற்கொள்ள பலம் தருவார். பொறுமையுடன் முடிக்க உதவி செய்வார். ஒரு தடவை ஒரு நாள் என்று வாழக் கற்றுக் கொள்வதன் மூலமாக நாம் அந்தந்த நாளில் இருக்கவும், நமக்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வாழவும் முடியும். கவலை நம் வாழ்க்கையை முற்றுகை செய்யும் போது, இந்த எளிய மகிழ்ச்சியான அனுபவங்களை நாம் விட்டுவிடுவோம். கர்த்தரே இந்த மகிழ்ச்சியான அனுபவங்களை நம் வாழ்வுக்குள் நெய்து வைத்திருக்கிறார். நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்வில் நம் உடல் பங்கேற்றாலும் நம் மனம் வேறு எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும். உறவுகள் பாதிக்கப்படுகின்றன, இதன் விளைவாக நம் உடல் நலனும் குறைவுபடுகின்றது. உங்கள் ஜன்னலைத் தாண்டி பறக்கும் குருவியின் உருவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் பூக்களைப் பாருங்கள். இவற்றை உங்கள் வாழ்வு என்னும் புகைப்படத்தில் பதித்து வையுங்கள். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு நபரை எப்படி ஆசீர்வதிக்கலாம், உற்சாகப்படுத்தலாம் என்று கவனமாக இருங்கள். நமக்கு வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை தான் இருக்கின்றது. அந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. கவலை என்பது முடிந்து போகும் ஒரு தெரு அல்ல. நாளை என்ன நடக்குமோ என்று கவலைப்படாமல் ஒவ்வொரு நாளும் வருவது போல ஒரு தடவைக்கு ஒரு நாளை நீங்கள் எதிர் கொண்டீர்கள் என்றால் இது உங்கள் வாழ்க்கை என்னும் நெடுஞ்சாலையில் சிறு வழி விலகலுக்குப் பின் நீங்கள் இணைந்து கொள்வது போன்றதே ஆகும். உங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்தி, இன்றைய நாளை அனுபவிக்க நீங்கள் ஆயத்தமா?


ஜெபம்:

அன்பின் கர்த்தாவே,

ஒவ்வொரு நாளும் நான் கண்விழிக்கும் புதிய நாளுக்காக உமக்கு நன்றி. வாழ்க்கைக்காகவும், ஆரோக்கியத்துக்காகவும், பலத்துக்காகவும் உமக்கு நன்றி. இந்த நாளை நான் முழுமையாக அனுபவிக்க உதவி செய்யும். நாளையைப் பற்றிய கவலைகளை என்னைவிட்டு அகற்றும். விசுவாசத்தால் என்னை நிரப்பும்.

இயேசுவின் பெயரால்,

ஆமென்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்

கவலை என்பது அதன் எல்லா வடிவங்களிலும் நம்மை பலகீனமாக்கிவிடக் கூடியது. அது நம்மைத் தடுமாறச் செய்து பயத்திலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடக்கூடியது. ஆனாலும் இதுவே கதையின் முடிவு அல்ல. இயேசுவில் நாம் சுதந்தரத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள முடியும். நாம் அதை வெற்றி கொள்வது மட்டுமல்ல, அதன் மூலமாக இன்னும் சிறப்பானவர்களாக மாற முடியும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan