கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்மாதிரி
வாய்விட்டு சொல்லுங்கள்
எளிதில் கவலைப்படும் நபரா நீங்கள்? முக்கியமான நேரங்களில் உங்களை செயல்பட விடாமல் பயமும் கவலையும் உங்களைக் கட்டிப் போடுகின்றனவா? நீங்கள் எளிதில் மன அழுத்தத்துக்குள்ளாகி, அடிக்கடி உங்கள் மன சமாதானத்தை இழந்து போகின்றீர்களா?
நீங்கள் கவலையினால் கஷ்ட்டப்படுகிறீர்கள் என்று ஒத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. இதில் பாதி பிரச்சனை என்னவென்றால் கவலை என்பதுடன் இணைந்திருக்கும் கெட்ட பெயர் தான். இதனால் தான் நாம் இதை முழுவதுமாக மறைத்து வைக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். கண்ணுக்குத் தெரியாததும் உண்மையாகவே நமக்கு எதிராக இருக்கிறதுமான இந்த எதிரியுடன் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கர்த்தரிடமும், நம்மிடமும், நமக்கு நெருக்கமான நண்பர்களிடமும் வெளிப்படையாக சொல்லும் போது விடுதலையை உணருகிறோம். நம்மைக் கட்டி வைத்திருக்கும் எந்த சக்தியும் அதை இருளில் இருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து வாய்விட்டு சொல்லும் போது அதன் வல்லமையை இழந்துவிடுகிறது. வெளிச்சத்தில் பார்க்கும் போது நாம் எதனுடன் போராடுகிறோம் என்பதை நாம் தெளிவாகப் பார்க்கின்றோம். அதற்கு நாம் கொடுக்க வேண்டிய கவனத்தைத் தான் கொடுக்கிறோமா? அல்லது வீணாக அதிகக் கவனம் கொடுக்கிறோமா? என்பதை நாமே கண்டு கொள்ளலாம். நம் வாழ்வில் ஏற்படும் உண்மையானதும் பிரச்சனைக்குரியதுமான பாடுகளின் அடிப்படியிலேயே நமது கவலைகள் இருக்கலாம். அல்லது கற்பனையில், பகுத்தறிவுக்கு ஒத்து வராத பயம் கூட நம் கவலைகளுக்குக் காரணமாக இருக்கலாம். நாம் கவலையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒத்துக் கொள்ளும் போது, நாம் அதை நெருக்கமாகப் பார்த்து, நம் கவலையைத் தூண்டி விடுவது எது என்று கண்டுபிடித்துவிடலாம். அவற்றை முழுமையாகக் கர்த்தருக்கு முன்பாக வைத்துவிடலாம். ஏனென்றால் அவர் நம் மேல் அக்கறை உள்ளவராக இருக்கிறார். அதை ஒத்துக் கொண்டு, அதைப் பற்றி பேசுவது என்பது பயத்துடன் இணைந்து வரும் வெட்கத்தையும், குற்ற உணர்ச்சியையும் குறைத்து நம்மை நன்றாக அறிந்திருக்கும் ஆண்டவரிடம் உதவியை நாட நமக்கு வழிகாட்டுகிறது. இந்த குழம்பிப்போன உணர்ச்சிகளின் நடுவே, கர்த்தரின் வேதத்தின் மூலமாகவும் அவருடனான தொடர்ச்சியான உரையாடல்கள் மூலமாகவும் கர்த்தரை வரவழைக்கலாம். இது நாம் இருக்கும் சூழ்நிலையைப் பற்றிய தெளிவான புரிதலை நமக்குக் கொடுக்கின்றது. இது உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதிலைக் கொடுக்காமல் இருக்கலாம், ஆனால் கர்த்தரின் அமைதியான பிரசன்னமும், மென்மையான வலிமையும் உங்களை சூழ்ந்து கொள்ளும். கர்த்தருடனான உறவு துவங்கும் போது நீங்கள் எல்லாவற்றின் மேலும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வை விட்டுக் கொடுத்துவிட்டு, கர்த்தரை ஆண்டவராக இருக்க அனுமதிப்பீர்கள். நீங்கள் நீங்களாக இருப்பீர்கள். கர்த்தரிடன் இவற்றை ஒப்புக் கொடுப்பது என்பது வாழ்க்கையில் ஒரு முறை வரக்கூடிய ஒரு நிகழ்ச்சியல்ல. இது தொடர்ச்சியாக நடக்க வேண்டிய ஒரு ஒழுக்கமாகும். சில நேரங்களில் இது ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டிய தேவை இருக்கலாம். ஒரு அன்புள்ள பரம தகப்பனாக, மென்மையாக அவர் உங்களை முழுவதுமாகப் பார்த்துக் கொள்வார் என்று அவரை நீங்கள் நம்ப வேண்டும். அவர் ஒரு போதும் குற்றம் சாட்டுகிறவராகவும், கடுமையானவராகவும் இருக்க மாட்டார். மாறாக அவர் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். நீங்கள் அவருடன் நெருங்கி அவரது அரவணைப்புக்குள் இணைந்து உங்கள் இதயத்தில் இருக்கும் ஒவ்வொரு கவலைக்காகவும் அவரையே நம்பி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். உங்களைக் கட்டி வைத்திருக்கும் கவலையில் இருந்து விடுதலை பெற்று, எல்லை இல்லாத அன்பு, சமாதானம், இளைப்பாறுதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். உங்களது சுகத்திற்காகவும், விடுதலைக்காகவும் அதிக அக்கறையுள்ளவராகக் கர்த்தர் இருக்கிறார். ஆகவே நாம் அவரை வெளியே ஒதுக்கி வைத்துவிடாமல் இருப்போம். நீங்கள் இன்றும், ஒவ்வொரு நாளும் உங்கள் கவலையை நேருக்கு நேராக சந்தித்து கிறிஸ்து தரும் தைரியத்தால் அவற்றை எதிர்கொண்டு, அவரே அவற்றைக் கையாளட்டும் என்று தாழ்மையுடன் விட்டுவிடுவீர்களா?
ஜெபம்:
அன்புள்ள கர்த்தாவே,
குறிப்பிட்ட இந்த கவலையால் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். நீரே எனக்கு உதவி செய்ய வேண்டும். உம்மைப் பிடித்துக் கொள்ளாமல் இந்த பயத்தையே நான் அதிகமாகப் பிடித்துக் கொண்டிருந்ததை மன்னிக்கும்படியாக வேண்டிக் கொள்கிறேன். நீர் எனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் ஆண்டவரே. உம்மிடமே என் கவலைகளை எல்லாம் கொடுத்துவிடுகிறேன். எனக்காக இந்த பாரங்களை எல்லாம் நீரே தூக்கிப் போடும்படியாக வேண்டிக் கொள்கிறேன். உம் குமாரனாகிய இயேசு சிலுவையில் முடித்து வைத்த மீட்புக்காக உமக்கு நன்றி. அங்கே என் கவலைகள் எல்லாம் ஒரே தடவையாக ஆணியால் அடிக்கப்பட்டுவிட்டதற்காக உமக்கு நன்றி. விடுதலையுடனும், மகிழ்ச்சியுடனும் நீர் எனக்குத் தந்திருக்கும் வாழ்வை வாழ உதவி செய்யும்.
இயேசுவின் பெயரால், ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கவலை என்பது அதன் எல்லா வடிவங்களிலும் நம்மை பலகீனமாக்கிவிடக் கூடியது. அது நம்மைத் தடுமாறச் செய்து பயத்திலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடக்கூடியது. ஆனாலும் இதுவே கதையின் முடிவு அல்ல. இயேசுவில் நாம் சுதந்தரத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள முடியும். நாம் அதை வெற்றி கொள்வது மட்டுமல்ல, அதன் மூலமாக இன்னும் சிறப்பானவர்களாக மாற முடியும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய We Are Zion க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.wearezion.co/bible-plan